Advertisement
அரசியல் செய்திகள்
அரசு காப்பீட்டு திட்டத்துக்கு அடையாள அட்டை தேவையில்லை*15 நாளில் 83 பேருக்கு உயர்தர சிகிச்சை
ஆகஸ்ட் 08,2009,00:00  IST

Latest indian and world political news information

சென்னை:"மருத்துவ காப்பீடு திட்டத்தில் அடையாள அட்டைகள் மூன்று மாதங்களுக்குள் வழங்கப் படும். அதுவரை, வாரிய உறுப்பினர் அடையாள அட்டை அல்லது வருமான சான்று ஆகியவற்றை காண்பித்து, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சையை பெறலாம்' என, அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலை காப்பீட்டுத் திட்டம்' கடந்த மாதம் 23ம் தேதி துவக்கப் பட்டது. இதுவரை 83 நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, 36 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் விவசாயத் தொழிலாளர் நல வாரியம், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 26 நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், இத்திட்டத்தில் பயன் பெறுவர்.



மேலும், குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளஅனைத்து குடும்பங்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் நல ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் மற்றும் 72 ஆயிரத்துக்கு மேல் குடும்ப ஆண்டு வருமானம் உள்ளவர்கள் இத்திட்டத்தில் உறுப்பினராக தகுதியற்றவர்கள். இத்திட்டத்தில் ஒரு குடும்பம், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறலாம்.



இதயம் மற்றும் இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் உட்பட 51 வகையான நோய்களுக்கு இலவச சிகிச்சை பெறலாம். இந்நோய் தவிர மற்ற நோய்களுக்கான பரிசோதனைகளுக்கு ஏற்படும் செலவுகள், சிகிச்சைக்கு முன், பின் ஏற்படும் மருந்து, மாத்திரைகள் மற்றும் போக்குவரத்து செலவுகள், வேறு சிகிச்சைகளுக்கான செலவுகளை இத்திட்டத்தில் பெற முடியாது.



இத்திட்டத்தை செயல்படுத்தும், "ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைடு இன்சூரன்ஸ்' நிறுவனம் இதுவரை 356 தனியார் மருத்துவமனைகளை அங்கீகரித்துள்ளது. இதன் விவரங்களை, தீதீதீ.ண்tச்ணூtச்ணடடிணண்.டிண என்ற இணையதளத்தில் காணலாம். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய செயல் அலுவலகத்தை இந்நிறுவனம் அமைத்து வருகிறது. மேலும், தொடர்பு அதிகாரியையும், மருத்துவ ஆலோசகரையும் நியமித்து வருகிறது.



இத்திட்டத்தில் உறுப்பினர்களைக் கண்டறிந்து சிறப்பு அடையாள அட்டை வழங்க 750 குழுக்களை அமைத்துள்ளது. இக்குழுக்கள், கிராமம் மற்றும் நகரங்களுக்குச் சென்று, உறுப்பினர்களைக் கண்டறிந்து, அடையாள அட்டையை வழங்கும். உறுப்பினர் சேர்க்கை நடக்கும் நாள், இடங்கள் முன்னதாக தெரிவிக்கப்படும்.இப்பணி மூன்று மாதங்களில் முடிவடைந்து அனைவருக்கும் சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும்.



அடையாள அட்டை வழங்கும் வரை எவருக்கேனும், குறிப்பிட்ட 51 நோய்களுக்கு சிகிச்சை பெற வேண்டியிருந்தால், நல வாரிய உறுப்பினர்கள், தங்கள் அடையாள அட்டையை காண்பித்து சிகிச்சை பெறலாம்.



அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சை பெற அடையாள அட்டையுடன், ரேஷன் கார்டு நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட புகைப்பட சான்று, நகரங்களில் வசிப்பவர்கள் பில் கலெக்டரிடம் பெறப்பட்ட புகைப்படச் சான்று அல்லது அரசு வழங்கிய ஏதேனும் ஒரு புகைப்படச் சான்று ஆகியவற்றை மருத்துவமனையில் காண்பித்து சிகிச்சை பெறலாம்.



வாரிய உறுப்பினர் அல்லாதவர்கள் ரேஷன் கார்டு நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட குடும்ப வருமானச் சான்று மற்றும் புகைப்படச் சான்று அல்லது அரசு வழங்கிய ஏதேனும் புகைப்படச் சான்று ஆகியவற்றைக் காண்பித்து இலவச சிகிச்சை பெற முடியும்.இத்திட்டம் தொடர்பாக விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனம் அமைத்துள்ள 24 மணி நேரமும் இயங்கும் இலவச தகவல் சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம். அதன் தொலைபேசி எண்: 18004252670. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்