மதுரை:மதுரையில் நடந்த, மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை திறப்பு விழாவில் அவருக்கும், தி.மு.க.,மற்றும் தனது குடும்பத்தினருக்கும் உள்ள நட்பு பற்றி மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி உருக்கமாக பேசினார். மீனாட்சி அம்மன் கோவில் முன்னாள் தக்கார் வி.என். சிதம்பரம் வரவேற்றார்.
நடிகர் கமல்ஹாசன் தலைமை வகித்து பேசுகையில்,""சிவாஜி முழுமையாக வாழ்ந்து காட்டினார். எளிமையை கற்றுக்கொடுத்தார். அவர் எங்களுக்கு ஒரு கேடயம். அதை வைத்துத்தான் போராடுகிறோம்,'' என்றார். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சிவாஜி சிலையை திறந்து வைத்து பேசியதாவது: எனது சித்தப்பா(சிவாஜி கணேசன்) இப்படி சிலையாக மாறிவிட்டாரே என மனது வருந்துகிறது. எனது தந்தையின் உயிர் நண்பனின் சிலையை திறக்க எனக்கு வாய்ப்பளித்த மதுரை மண்ணிற்கு நன்றி.
கமல்ஹாசன்," சிவாஜி குடும்பத்தின் மூத்தமகன் நான் தான்' என்றார். அது தவறு. நான் தான் அந்த குடும்பத்தின் மூத்த மகன்.தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு சிவாஜி பாடுபட்டார். கட்சியில் அவரை பிடிக்காத சிலர், சிவாஜியை வெளியேற்று மாறு அண்ணாதுரையிடம் கூறியது எனக்குத் தெரியும். தன்னடக்கத்துடன் தானாகவே சிவாஜி வெளியேறினார். ஆனாலும், அண்ணாதுரை மற்றும் எங்கள் குடும்பத்தின் மீது பாசமாக இருப்பார். முதல்வர் கருணாநிதியின் படுக்கையறையில் அண்ணாதுரையை தவிர யாரும் அமரவில்லை.
அவருக்கு பின் சிவாஜி தான் அமர்ந்தார். எனது தந்தை முன் யாரும் சிகரெட் புகைக்கமாட்டார்கள். ஆனால், நட்பின் காரணமாக சிவாஜி சிகரெட் புகைப்பார். நடிப்பு எனில் அது உண்மையாக இருக்க வேண்டும். மனதில் என்னவாக நினைக்கிறாரோ அதையே சிவாஜி நடிப்பார். காலை 7 மணிக்கு ஷூட்டிங் எனில் 6.30 மணிக்கெல்லாமல் செட்டிற்கு வந்துவிடுவார். நேரம் தவறாமையை கடைபிடிப்பார். எங்கள் குடும்பத்தின் அனைத்து திருமண விழாக்களிலும், எனது மகள் அஞ்சுகச் செல்வி திருமணத்தில் கூட சிவாஜி பங்கேற்றுள்ளார். ஆனால், எனது திருமணத்திற்கு வரவில்லை.
எனவே, அவர் மீது எனக்கு வருத்தம் உண்டு. இதனால் பல இடங்களில் அவரை பார்த்தும் நான் பேசாமல் போய்விட்டேன். பின் சமாதானம் செய்தார்.மதுரையில், அண்ணாதுரை சிலைக்கு நான் தொடர்ந்து மாலை அணிவித்து வருகிறேன். அதே போல் சிவாஜி சிலைக்கு நான் உயிருள்ளவரை மாலை அணிவிக்க, அவரது குடும்பத்தினர் அனுமதிக்க வேண்டும், என்றார்.தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் பிரபு,"" நானும், ராம்குமாரும் சிவாஜிக்கு மகனாக இருக்கிறோம். ஆனால், அவரது திரையுலக வாரிசு கமல்ஹாசன் தான்,'' என்றார். மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், தமிழக அமைச்சர் தமிழரசி, நடிகர்கள் விஜயகுமார், அருண் விஜய், தியாகு, இயக்குனர்கள் பி.வாசு, சசிக்குமார், சிவாஜி மன்ற தலைவர் பூமிநாதன், கலெக்டர் மதிவாணன், சென்ட்ரல் மணி, மாணிக்கம் பங்கேற்றனர்.
போக்குவரத்து பாதிப்பு: சிவாஜி சிலை அமைந்துள்ள, மதுரை ராஜா முத்தையா மன்றம் ரோடு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டன. இதனால், வெளியூர்களிலிருந்து வந்த வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் சிரமப்பட்டனர்.
போக்குவரத்து மாற்றம் பற்றி போலீசார் முன்கூட்டியே அறிவித்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம்.விழா மேடை முன், கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் அமரும் நாற்காலிகளை பார்வையாளர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர். பலர் "கட்-அவுட்' களில் ஆபத்தான நிலையில் அமர்ந்திருந்தனர்.
*இயக்குனர் சசிக்குமார்,"" மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மகாலுக்கு அடுத்தபடியாக மற்றொரு அடையாளம் சிவாஜி சிலை,'' என்றார்.
*நடிகர் வடிவேலு "தேவர் மக'னில் சிவாஜியுடன் நடித்த அனுபவங்களை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசினார்.
*மத்திய இணை அமைச்சர் நெப்போலியன்,"" நான் அதிகம் நேசித்த படம் தேவர்மகன். சிவாஜியுடன் நடிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது,'' என்றார்.
*இயக்குனர் பி.வாசு,"" கலையுலக கதாநாயகன் கமல்ஹாசன். அரசியல் ஹீரோ மு.க.அழகிரி. அவர் கணக்கை சொல்லி அடிப்பவர்,'' என்றார்.
| வாசகர் கருத்து |
Dear Editor, In this function, Smt.P.Susheela, Veteran Playback Singer also attended. She was felicitated by Mr.M.K.Azhagiri. This news has not been posted by your daily. Thanks.
|
by K Jagan,India,India 09-10-2009 15:42:44 IST |
sivaji very good actor....
|
by p CHANDRABOSE,ARANTHANGI,India 05-10-2009 16:00:05 IST |
சிவாஜி ஒரு மிகசிறந்த நடிகன் ....கடவுளர்கள் மட்டுமல்ல, பல சரித்திர புருஷர்களை கூட நம் கண் முன்னே நடக்க விட்டவர். வெறும் சிகரெட் பிடிப்பதை, நடப்பதை , அழுவதை எல்லாம் கூட அத்தனை கம்பீரமாக அவரால் தான் செய்ய முடிந்தது. வாழ்க நீ எம் சிவாஜி .
|
by d Devan ,Chennai,India 05-10-2009 12:31:14 IST |
It will be nice if there is some legislation to restraint these film personalities from getting emotional and talking nonsense in public functions. Of course, it provides a good comic relief, but overdose of anything is bad,right? What is even more nauseating is the titles that these so-caleed actors and politicians carry before their name! Only god shouldsave the Tamils and Tamil Nadu. I don''t know why Vairamuthu and Vaali were left behind. Had they been invited, they would have had to share the price for the best sycophant of Tamil Nadu
|
by S Bala Sreenivasan,Chennai,India 05-10-2009 05:50:55 IST |