Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
அரசியல் செய்திகள்
பாபர் மசூதி இடிப்புக்கு மதவெறியே காரணம்: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு
நவம்பர் 04,2009,00:00  IST

Latest indian and world political news information

லக்னோ: ""மதவெறியின் காரணமாகவே பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தவறான முன்னுதாரணம். இதற்காக வருத்தப்படவேண்டும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் தேவ்பாண்ட் என்ற இடத்தில்,  இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிதம்பரம் பேசியதாவது: மதவெறியின் காரணமாகவே பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தவறான நடவடிக்கை. இது வருத்தப் பட வேண்டிய  விஷயம். மதத்தின் பெயரிலான வன்முறை தவிர்க்கப் பட வேண்டும். பெரும்பான்மை இன மக்கள் சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்.



ஒரு அரசு சிறுபான்மையினரை பாதுகாக்கவில்லை என்றால், அந்த அரசு ஆபத்தை எதிர்நோக்குகிறது என்று பொருள். எனவே தான், தமிழர்களுக்கு உரிய சலுகை அளிக்கும் படி இலங்கையையும், மாணவர்களை பாதுகாக்கும் படி ஆஸ்திரேலியாவையும் கோரி வருகிறோம். இஸ்லாம் வன்முறையை ஏற்கவில்லை. அமைதியை மட்டுமே இந்த மதம் போதிக்கிறது. பயங்கரவாதத்தை முஸ்லிம்கள் மட்டுமல்ல, நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களும் எதிர்க்க வேண்டும். இஸ்லாமை யாரும் அன்னிய மதமாக பார்க்கவில்லை.  முஸ்லிம்களை இந்திய குடிமக்களாக தான் பார்க்கிறோம். இது உங்கள் முன்னோர் வசித்த பூமி. இதனால் தான் நீங்கள் இங்கு பிறந்தீர்கள், வாழ்கிறீர்கள். இஸ்லாம் உள்ளிட்ட பல தரப்பட்ட மதங்கள் ஒன்றிணைந்த பூமி இந்தியா என்ற பெருமை நமக்கு உண்டு.



வன்முறை மதநல்லிணக்கத்துக்கு எதிரானது. மதவெறி, அரசியல் சுதந் திரத்துக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இந்தியாவில் நடக்கும் நல்லாட்சியால், காஷ்மீரில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருந்து ஆட்சி செய்கின்றனர். பஞ்சாபில் சீக்கியர்கள் பெரும் பான்மையாக இருந்து ஆட்சி நடத்துகின்றனர். அந்த மாநிலங்களில் மற்ற மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இது நல்லாட்சிக்கு ஒரு உதாரணம். பல மதத்தினர் ஒன்றாக சேர்ந்து வசிப்பது நம்நாட்டில் பாரம்பரியமாக நடக்கும் விஷயம். இது நம்நாட்டுக்கு வலிமை சேர்க்கிறது. சுதந்திர போராட்ட காலத்தில் முஸ்லிம் தலைவர்கள் நம்மோடு சேர்ந்து  பாடுபட்டதை மறக்க முடியாது. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 நண்பர் இந்தியன் அவர்களே, உங்களுக்கு ஒரு சின்ன விளக்கம். முஸ்லிம்கள் பெரியவர்களை வணங்குவதில்லை. ஏன் எங்களின் போற்றுதலுக்குரிய நபி பெருமானார் முஹம்மது அவர்களையும் நாங்கள் வணங்குவதில்லை. அவர்கள் மீது எங்களுக்கு மிகப்பெரிய மதிப்பு, மரியாதையை உண்டு. ஆனால் நாங்கள் அவர்களையோ அல்லது எங்களின் பெற்றோரையோ வணங்குவதில்லை. அப்படி வணங்கும் யாரையும் நீங்கள் பார்த்திருந்தால் அவர்கள் உண்மையான, விபரம் தெரிந்த முஸ்லிமாக இருக்க முடியாது. மனிதனை மனிதன் வணங்க கூடாது என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. மரியாதைக்குரிய வணக்கம் என்று உண்டா என்ன? அப்படியானால் மரியாதை இல்லாத வணக்கம் என்று ஒன்று உண்டா? வணக்கம் என்பது ஒன்று தான் - அதனை கடவுள் ஒருவனுக்குதான் செய்ய வேண்டும். தயவு செய்து விருப்பு வெறுப்பு இல்லாமல் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.  
by H Sultandeen,Kuwait,Kuwait    11/5/2009 11:14:42 AM IST
 Sultandeen,Kuwait அவர்களே, நீங்கள் வணக்குவதை கடவுளை வணக்குவதாக கொள்ளவேண்டும். மரியாதைக்குரிய வணக்கமாக எடுத்துக் கொள்ளலாமே. முஸ்லிம்கள் பெரியவர்களை வணக்குவது இல்லையா.  
by An Indian,Chennai,India    11/5/2009 12:00:09 AM IST
 திருந்தவே மாட்டாங்களா<யா <ணீ> எப்ப பார்த்தாலும் முஸ்லிம்களை குறை சொல்வதே வேலையாய் போச்சு <ணீ> நாங்க என்னையா செஞ்சோம் ஒங்களை <ணீ> இந்தியாவில பிறந்தது தப்பா< ? <ணீ> சுதந்திரத்துக்காக பாடு பட்டது நாங்கய்யா <ணீ> 
by M Izoo,UAE,India    11/4/2009 11:33:39 PM IST
 முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் காஷ்மீரில் ஹிந்துக்களின் நிலைமை என்ன என்பதை ஏனோ சொல்ல மறந்துவிட்டார். சுதந்திரத்துக்கு முன்னால் மேற்கு பஞ்சாபிலும் கிழ்க்கு வங்காளத்திலும் வாழ்ந்துவந்த ஹிந்துக்களின் ஜனத்தொகை எப்படி ஓரிலக்க சதவிகிதமாக குறைந்தது எனபதையும் விளக்கி இருக்க வேண்டும். அவருக்கென்ன, பிழைக்க தெரிந்தவர்! மன சாட்சியை அடகு வைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசலாம் போலும்! 
by பாலா ஸ்ரீனிவாசன் ,Chennai,India    11/4/2009 11:17:02 PM IST
 yes kalai raja, its true... 
by abubakkar,dubai,United Arab Emirates    11/4/2009 10:27:37 PM IST
 hallo mr P.C please just thing and speak before attend meeting.please stop loose talking.still also celebrating thay are pakistan win cricket against india. yoy are number one stupid homeminister in world. 
by HINDU,SINGAPORE,India    11/4/2009 6:01:12 PM IST
 இங்கு நிறைய விஷயங்கள் தவறாக புரிந்துகொள்ள / பேசப்படுகிறது. இஸ்லாமியர்களின் கோட்பாடு ''அல்லாஹ் ஒருவன்தான் கடவுள்'' என்பதாகும். இங்கு ''அல்லாஹ்'' என்ற சொல் பலரால் தவறாக புரிந்துகொள்ள பட்டுள்ளது. அல்லாஹ் என்பவர் ஏதோ ஒரு இஸ்லாமியர் என்றுதான் பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இது முற்றிலும் தவறானது. ''அல்லாஹ்'' என்ற அரபி சொல்லுக்கு ''இறைவன்'' ''கடவுள்'' ''பரம்பொருள்'' என்பதுதான் அர்த்தம். அரபு கிருஸ்தவர்களும் அவர்களின் கடவுளை ''அல்லாஹ்'' என்றுதான் சொல்கின்றார்கள். இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் ''அல்லாஹ்'' என்பவர் ஒரு இஸ்லாமிய கடவுள் அல்ல - அவர் ஒரு கடவுள் என்பதுதான். பின் ''அல்லாஹ் ஒருவன்தான் கடவுள்'' என்று ஏன் இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். ''கடவுள் ஒருவன்தான் கடவுள்'' என்ற பொருளில்தான் அவர்கள் சொல்கிறார்கள். அதாவது சிலை கடவுள் அல்ல, மாயமந்திரம் செய்பவர்களை கடவுள் அல்ல, சாமியார்கள் கடவுள் அல்ல, மாடு கடவுள் அல்ல, பாம்பு கடவுள் அல்ல இன்னும் இதுபோல எத்தனை எத்தனயோ பொருள்களை பண்டைய மனிதன் வணங்கிக்கொண்டிருந்தானே அவைகள் அனைத்தும் கடவுள் அல்ல - கடவுள் ஒருவன்தான் - அந்த பரம்பொருள் ஒன்றுதான் கடவுள், அந்த கடவுள் ஒருவனைத்தான் நாம் வணங்க வேண்டும். இதுதான் இஸ்லாமியர்களின் கோட்பாடு.

அதனால்தான் வந்தே மாதர பாடலில் ''வணங்குகிறோம்'' என்ற சொல் வருவதால் அது தங்களின் கோட்பாடுக்கு முரண்பானது என்று இஸ்லாமியர்கள் அதனை ஏற்று கொள்ள மறுக்கின்றனர். ''வணங்குகிறோம்'' என்பதைதான் மறுக்கின்றார்கள் - ''வாழ்த்துகிறோம்'' என்பதில் அவர்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. ''வணங்க'' மறுக்கும் இஸ்லாமியர்களின் தேசப்பற்றை குறைத்து மதிப்பிடுவது மிக்க தவறு.  
by H Sultandeen,Kuwait,Kuwait    11/4/2009 5:20:07 PM IST
 ஐய்யா இந்தியன் அவர்களே, நிச்சயமாக எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் வந்தே மாதரம் (தாய் மன்னே வணக்கம்) என்ற படலை பாடமாட்டான். நாங்கள் Allah (God) ஒருவனை தவிர வேற யாரையும் வணங்கமாட்டோம். இப்போது புரிகிறதா நாங்கள் ஏன் வந்தே மாதரம் பாடமாட்டோம் என்று  
by S.I. Mohamed Kayal,Jiangmen,China    11/4/2009 3:57:51 PM IST
 People of India must open our eyes and liberate our minds. All Muslims, Christians are same people who originated from same Hindu culture embrassed Islam or Christinity, Buddhism, Jainism, Sikhism etc but BJP/RSS is playing Hindu card intimidating all Indians by creating conflict and culture of abuse spoiling and depriving young indians from enjoying freedom by becoming ideological slaves of RSS/BJP. 
by Nazeer, Scado,Al-khobar,Saudi Arabia    11/4/2009 3:49:02 PM IST
 சிதம்பரம் அவர்களே இந்த உண்மையை நீங்கள் ஹிந்து அமைப்பு நடத்தும் கூட்டத்தில் ஒப்பு கொள்வீர்களா ........? 
by a.s முஹசின் அலி ,ayangudi,India    11/4/2009 3:22:02 PM IST
 இவரைப் போன்ற போலி மதச்சார்பின்மை பேசுபவர்களை அரசியலைவிட்டு விரட்டி அடியுங்கள்.  
by K murugan,chennai,India    11/4/2009 1:57:48 PM IST
 அவர்களின் வந்தே மாதரம் புறக்கணிப்பை பற்றி நம் தினமலரில் செய்தி ஏதும் இல்லை ...........  
by k jayaprakash,sattur,India    11/4/2009 12:30:16 PM IST
 WELL DONE ARULDAS...... 
by r pragadees,chennai,India    11/4/2009 11:45:15 AM IST
 அய்யா சிதம்பரம் அவர்களே, இஸ்லாமியர்களின் பள்ளிவாசலை இடித்ததால் பா.ஜ க்கு மக்கள் தொடர்ந்து படு தோல்வியை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எப்பொழுது திருந்தப் போகிறார்களோ...விடுங்கள் அவர்களை.... 
by M செந்தில்,Singapore,Singapore    11/4/2009 11:12:27 AM IST
 Well said by Mr. Abdullah Khan. Nowadays Mr. PC is acting as well educated, talented stupid. Because his boss is Mr. MK not Our PM & Congress President Soniaji. Since 1995, he is a loyal servant to MK. The foolish congressmen will know his true colour oneday, that day he will be thrown-out from politics by the people of tamilnadu. As an indian, I feel that we never divided by religion, the caste system and stupid politician like PC tried to divide us for their own goods. We must make sure this is his last term in office (politics). I request my fellow citizens pls. dont name the terrorist as muslim, hindu and christian. There is no religion for terrorist, they are not human, and even not animals.  
by A Pandi,Singapore,India    11/4/2009 10:42:21 AM IST
 நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தானே பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது? அப்பொழுது நரசிம்ம ராவ் அமைச்சரவையிலும் சிதம்பரம் அமைச்சராக பதவி வகித்ததையும், அப்பொழுது வாய்மூடி மெளனமாக இருந்து விட்டு இப்போதும் கூட அதற்காக வருத்தப் பட்டு மன்னிப்புக் கேட்காமல் வசதியாக மறந்து விட்டு, இப்பொழுது வாய் சவடால் பேசுவது முற்றிலும் கண்டிக்கத் தக்கது. ஒரு நாட்டிற்கே அமைச்சராக இருந்து கொண்டு மக்களை ஏமாற்றும் விதத்தில் பேசுவதும் தத்துவங்களை வாரி இரைப்பதும் மெத்தப் படித்த பெரிய மனிதர்களுக்கு அழகல்ல. இதை செய்தியாக வெளியிடும் பத்திரிக்கைகளும் கூட ஒன்றும் தெரியாததைப் போல இருப்பதையும் அறிவுள்ள சமுதாயம் கண்டிக்க வேண்டும். 
by mr mubarak,ipoh-perak,Malaysia    11/4/2009 10:37:49 AM IST
 சரி சிதம்பரம்ஜி,
ஹிந்து மெஜாரிட்டி ஆந்திராவயோ , கேரளாவயோ ஏன் இந்தியாவையோ முஸ்லிம் கிறிஸ்துவ முதலமைச்சர்கள், கட்சித்தலைவர்கள் ஆள விட்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு ஹிந்து காஷ்மீரிலோ, பஞ்சாபிலோ வட கிழக்கு மாநிலங்களிலோ முதலமைச்சராக முடியுமா?
இந்துக்கள் மேஜாரிட்டி இருக்கும் வரைதான் இந்தியாவில் இந்துமதம் உயிரோடிருக்கும்.
மைனாரிட்டி ஆனால் மறு நிமிடமே மதச்சார்பின்மை குப்பைதொட்டிக்கு போய்விடும். இந்துமதமே அழிக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.
இவரைப்போன்றப் போலி மதச்சார்பின்மை பேசுபவர்களை அரசியலைவிட்டு விரட்டி அடியுங்கள். 
by P Aruldas,Bangaluru,India    11/4/2009 10:31:54 AM IST
 என்ன வெட்கம், வந்தே மாதரம் என்று பாட மாட்டோம் என்று மத வெறியர்கள் திர்மானம் நிறைவேற்றியிருக்கிரார்கள். கொஞ்சமும் நாட்டுப்பற்று இல்லாமல் சிதம்பரம் தலை ஆட்டி விட்டு வந்திருக்கிறார்.  
by kk suresh,chennai,India    11/4/2009 9:42:07 AM IST
 கொலம்பஸ் கண்டுபிடிப்பு  
by ராஜேஷ் k,kl,Malaysia    11/4/2009 9:21:36 AM IST
 ' சாகிறவரைக்கும் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன் ' னு ஒரு பழமொழி இருக்கு. இன்னும் எத்தனை நாளைக்குத்தான்யா நீங்க பாபர் மசூதி ‌பெயரை சொல்லி அரசியல் பண்ணப்போறீங்க? 
by s. அப்துல்லா கான்,UAE,United Arab Emirates    11/4/2009 8:50:00 AM IST
 நாடா மதமா என்றால் எல்லா உண்மையான இந்தியனும் நாடு என்றுதான் சொல்வார்கள். சில முஸ்லிம் அமைப்புகள் உன்மையிலே உண்மையான முஸ்லிம்களே கிடையாது. அப்படிப்பட்ட அமைப்புதான் இவங்க. இந்த சிதம்பரம் எதுக்கு அங்க போனார்னே தெரியல. அவங்க போடுற ரெண்டு பிரியாணி துண்டுக்கு போயிருப்பார் போல. அவங்க வந்தே மாதரம் பட மாட்டோம்னு சொன்னதுக்கு எந்த ஆட்சேபனையும் சொல்லாம உண்ட மயக்கத்துல வந்துட்டார் . இவர் எப்படி நம்ம நாட்ட காப்பாத்துவார். அந்த இடத்துல நம்ம நாட்ட பத்தி கேவலமா பேசினாலும் கேட்டு கிட்டு வந்துருப்பார்.
 
by இந்தியன்,chennai,India    11/4/2009 8:16:26 AM IST
 Hey Mr Chidambaram,Do you agree their stand on ''vande mataram''.It is shame that they draft and challenging against our national slogan infront of your presence.
Instead of condemning,you are praising them is clearly showing the UPA and allies including you seeking political advertisement.
If you and your team really having guts condemn the draft.
The UPA govt lost their dignity and cent percent cowards.
Bharata Mata definataly punish coward UPA Govt.
''jai Hind''. ''Vante mataram''.
 
by N purushothaman,Neyveli,India    11/4/2009 8:03:03 AM IST
 அய்யா சிதம்பரம் அவர்களே, உங்களால் ஏன் ஒரு இஸ்லாமியரை பிரதமர் நாற்காலியில் அமர வைக்க முடியவில்லை? நீங்கள் ஏன் உங்கள் சிவகங்கை சீட்டை ஒரு இஸ்லாமியருக்கு விட்டுகொடுக்க கூடாது. நரம்பில்லா நாக்கு அப்படிதான் பேசும். 
by வெங்கடேசன்,Chennai,India    11/4/2009 6:30:30 AM IST
 I strongly condemn the attitude of Hon''ble Chidambaram, How can he say that we accept you (muslims) as Indians. Hello sir do you think that hindus are the only native people. Religion is something one takes upon himself. He or she is born as an Indian first then he or she chooses or is forced upon to imbibe a religious belief system.

Please change your attitude. Abdul or Antony is an Indian first then he is a muslim or christian.
How much you are annoyed when you are not accepted as a Chettiyar by your own community people. 
by G Das,Vienna,Austria    11/4/2009 3:58:01 AM IST
 பாபர் மசூதி இடிப்புக்கு காங்கிரசு.பா ஜ
கூடு முயற்சியே காரணம்.இதில் யாரைவும் சொல்லமுடியாது...உங்களை நிங்களே கண்ணாடிலில் பாருங்க கோரமுஞ்சி தெரியும்..விதை விதைத்து காங்கிரசு .இடித்து முடித்தது பா ஜ ..மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களே சோற்றில் சின்ன கல்லை மறைக்கலாம் .மலையல்ல ?????????? 
by kalai raja,trichy,India    11/4/2009 3:54:42 AM IST
 I thought P.C. is a genious, but he is proving that he is a stupid. If minorities are ruling a place where minorities are majority that is called ''Nallatchi''. Muslims were ruling J&K even during BJP period. 
by Kala,New Jersey,United States    11/4/2009 2:39:30 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்