Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
அரசியல் செய்திகள்
ராகுல் மகாஜனை மணக்க பெண் கைதிகள் விருப்பம்
நவம்பர் 04,2009,00:00  IST

Latest indian and world political news information

போபால்:   மறைந்த பா.ஜ., தலைவர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜனை மணக்க விரும்புவதாக ஒன்பது பெண் கைதிகள்  விண்ணப்பம்  கொடுத் துள்ளனர். பா.ஜ.,வின் பிரபல தலைவர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜன் (33). போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் வைத்திருந்ததாகவும் கைது செய்யப் பட்டார்.  வெளியே வந்த பிறகு"பிக் பாஸ் 2' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.



இப்போது இவரை வைத்து "ஸ்வயம்வர்' நிகழ்ச்சியை என்.டி.டி.வி., இமேஜின் என்ற "டிவி' சேனல் நடத்துகிறது.  ராகுல் மகாஜன், தான் மணக்கப்போகும் மணப்பெண்ணை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி இது. ஏற்கனவே, பாலிவுட் குலுக்கல் நடிகை ராக்கி  சவந்த், தன் மணமகனை தேர்ந்தெடுத்தார். "ராக்கி கா ஸ்வயம்வர்' நிகழ்ச்சிமுடிந்ததை அடுத்து, இப்போது ராகுலை வைத்து நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.



இதில், பங்கேற்பதற்காக இதுவரை 16 ஆயிரத்து 755 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், ஒன்பது பெண் கைதிகளும் உள்ளனர். விசாரணைக்கு வந்த 18 வயது பெண்ணிலிருந்து போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் 32 வயது பெண்மணி வரை அவரை மணக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கோர்ட்டில் அனுமதி கேட்டிருக்கின்றனர். அனுமதி கிடைப்பதற்கு முன்பே, அவர்கள் நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 வாழ்க ஜனநாயகம் ..... 
by suresh,Chennai,India    11/4/2009 1:03:19 PM IST
 ஜோடி பொருத்தம் பிரமாதமா இருக்கும். 
by வெங்கடேசன்,Chennai,India    11/4/2009 6:32:37 AM IST
 நல்ல பொருத்தம்  
by B கார்த்திக்,Pointe Noire,Congo    11/4/2009 3:10:21 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்