ஜாம்ஷெட்பூர்: மகாராஷ்டிரா உட்பட மூன்று மாநில சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்றதை அடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் காங்கிரஸ் வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது; அதனுடன் கூட் டணி சேர லாலு, பஸ்வான் கட்சிகள் துடிக்கின்றன. எனினும், கடந்த முறை காங்கிரசுடன் கைகோர்த்திருந்த ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் சிபு சிரோன்,"நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம்' என்று காங்கிரசுக்கு மறைமுக நிர்ப்பந்தம் தந்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர் தல் வரும் 27ம் தேதி ஆரம்பித்து ஐந்து கட்ட ஓட்டுப்பதிவு டிசம்பர் 18ம் தேதி முடிகிறது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா, தனித்தா என் பதை காங்.,தலைவர் சோனியா இன்னும் முடிவு செய்யவில்லை. அருணாச்சல் பிரதேச சட்டசபைத் தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சியாக திரிணமுல் வந்துள்ளது. அதனால், ஜார்க் கண்டிலும் போட்டியிட அக் கட்சித் தலைவர் மம்தா திட்டமிட்டுள்ளார். "காங்கிரஸ் கட்சி விரும்பினால் கூட்டு சேரத் தயார்; இல்லாவிட்டால், தனித்து போட்டி' என்று அந்த கட்சி "நூல்' விட்டுப்பார்த்துள்ளது.
சிபுசோரன், மம்தா இருவருமே, கூட்டணி சேர காங்கிரஸ் முதலில் அழைப்பு விடுக்கட் டும் என்று காத்திருக்கின்றனர். ஆனால், ஏற்கனவே கூட்டணியில் இருந்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர், சோனியாவின் அழைப்புக்காக காத்திருக் கின்றனர். "மெகா கூட்டணி அமைப்பது பற்றி சோனியா முடிவுசெய்ய வேண்டும். மதவாத சக்திகளிடம் ஆட்சி போய்விடாமல் தடுக்க அவர் தான் எல்லா ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் பேச்சு நடத்தி, கூட்டணி அமைக்க வேண்டும்' என்று பஸ்வான் கூறியுள்ளார். ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிப்பது தான் காங்கிரஸ் இலக்கு. அதனால், அதற்கேற்ப, கட்சிகளை திரட்டி, தாங்கள் மெஜாரிட்டி பார்ட்னராக இருக் கவே விரும்புகிறது. அப்போது தான் நிலையான ஆட்சியை தர முடியும் என்று சோனியா நம்புகிறார். அதனால், கட்சிகளின் மவுசை அறிந்து, அதற்கேற்ப கூட்டணி அமைப்பது பற்றி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளார்.
| வாசகர் கருத்து |