புதுடில்லி: ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி, அதிகளவு வருமான வரி செலுத்துபவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. இவர், 2008-09ம் நிதியாண்டிற்கான மொத்த வருமான வரியாக 2.92 லட்சம் ரூபாய் செலுத்தியிருந்தார். ஆனால், இந்தாண்டு முதல் ஆறு மாதங்களில், வருமான வரி முன்பணமாக 6.6 கோடி ரூபாய் செலுத்தி உள்ளார். இதன் மூலம் 2009-10ம் நிதியாண்டிற்கான இவரது வருமானம் 70 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் வாதிகளில் அதிக வருமானவரி செலுத்துவோர் 100 பேர் பட்டியலில் ஜெகன் இடம்பெற்றுள்ளார். மேலும், உ.பி.,முதல்வர் மாயாவதியை விட அதிக வரிசெலுத்தி, அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார். கிரிக்கெட் வீரர்கள் மத்தியில், சச்சின் டென்டுல்கர் அதிகளவு வருமான வரி செலுத்துபவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர், கடந்தாண்டு எட்டு கோடி ரூபாய் வருமான வரி செலுத்தினார். இந்தாண்டு, 1.5 கோடி ரூபாய் வருமான வரி முன்பணமாக செலுத்தி உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளார். இவர் கடந்தாண்டு 4.6 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தினார். இந்தாண்டு முதல் ஆறு மாதத்தில், இரண்டுகோடி ரூபாய் வருமான வரி முன்பணமாக செலுத்தி உள்ளார்.
சினிமான நடிகர்களில்,அதிகளவு வருமான வரி செலுத்துபவர்களில் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார். இவர் கடந்தாண்டு 34.45 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் நடிகர் அக்ஷய் குமார் உள்ளார். இவர் கடந்தாண்டு 33 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி உள்ளார். ஆனால், இந்த நிதியாண்டு, அக்ஷய் குமார் வருமான வரி முன்பணமாக 4.5 கோடி ரூபாயும், ஷாருக்கான் 3.5 கோடி ரூபாயும் செலுத்தி உள்ளனர். சல்மான் கான் கடந்தாண்டு 14 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
| வாசகர் கருத்து |
இந்த ரெட்டிக்களின் அட்டகாசம் தாங்கவில்லை. ஆந்திராவில் அடிப்பது பத்தாது என்று தமிழ் நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா என்று தேசிய அளவில் கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னொரு கிருஷ்ணர் வந்ததுதான் இவர்களை அழிக்கவேண்டும்.
|
by J viveka,Chennai,India 11/4/2009 3:08:54 PM IST |
அதெப்படி சார், போன வருஷம் வெறும் ரெண்டு புள்ளி ஒன்பது இலட்சம் வரி செலுத்தினவர் இந்த வருஷம் அட்வான்சே ஆறு கோடிக்கு மேலே கட்டியிருக்கிறார் என்றால் இவரது தொழில் மேலேயே சந்தேகம் வரதே. அன்பே வா படத்தில் நாகேஷ் சொல்வது போல '' சாருக்கு தொழில் நோட்டு அடிக்கிறதா?''
|
by v sundaram,jeddah,Saudi Arabia 11/4/2009 3:06:12 PM IST |
தமிழ் நடிகர்கள் & அரசியல்வாதிகள் கட்டிய வருமானவரி எவ்வளவு என்பதை மக்களுக்கு உடனே தெரியப்படுத்தவும். நன்றி.
|
by seenu பாண்டி சீனு ,chennai,India 11/4/2009 1:25:46 PM IST |
இவர் கர்நாடக ரெட்டி சகோதரர்களின் பிசினெஸ் பார்ட்னர் .கிரனிட் கற்கள் தோண்டி எடுத்து (சட்டவிரோதமாகத்தான்)விற்பனை! இந்த ரெட்டி சகோதரர்கள்தான் ஜெகனை முதல்வராக்க முயற்சித்து. அதில் தோல்வி அடைந்த பின் இப்பொது கர்நாடகாவில் தங்கள் கை வரிசையை காட்டிவருகின்றனர். கடவுளே காப்பாற்று!
|
by V Mani,Chennai,India 11/4/2009 8:00:54 AM IST |
இவர்கள் எல்லாம் கோடி கோடியாய் வரி செலுத்த லஞ்சமும் டிக்கெட்டுமுமாய் கோடிகளை அள்ளிக் கொடுக்கும் கோடனுகோடி பேர் (ஊர்க்) கோடியிலேயே இன்னுமும் வசிக்கிறார்களே. அவர்கள் வரி செலுத்தும் போகும் நாள் எந்நாளோ ?
|
by G Srinivasan,singapore,Singapore 11/4/2009 6:25:24 AM IST |