Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
அரசியல் செய்திகள்
அடுத்த நிதியாண்டு வரை அரசு சிக்கன அதிரடி
நவம்பர் 04,2009,00:00  IST

புதுடில்லி: ஐ.மு., கூட்டணி அரசின் சிக்கன நடவடிக்கைகள், அடுத்த நிதியாண்டு வரை தொடரும் என்று தெரிகிறது. மத்திய  அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான பணம் சேமிப்பதற்காக, கடும் சிக்கன நடவடிக்கைகளை நிதித்துறை அமைச்சகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகியவை நடைமுறைப்படுத்தின.



தீபாவளி பண்டிகையின் வர்த்தகத்தை ஒட்டி, மத்திய அரசு வெளியிட்ட  சிக்கன நடவடிக் கைகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அரசின் சிக்கன நடவடிக்கைகள் அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் வரை தொடரும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தன் நெருங்கிய வட்டாரங்களில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதுகுறித்து, நிதியமைச்சரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், "நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வந்தாலும், அடுத்தாண்டு செப்டம்பர் வரை சிக்கன நடவடிக்கைகள் தொடரும்' என்றனர். உலகப் பொருளாதார மந்த நிலையால் இந்திய பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளில், வறட்சி மற்றும் தென் மாநிலங்களில் வெள்ளம் என இந்தியா மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், அரசு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, அரசு நிறுவனங்களையும் தன் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர தீர்மானித்தது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்