Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
அரசியல் செய்திகள்
இலங்கை அகதிகளுக்கு உதவி: கருணாநிதி பட்டியல்
நவம்பர் 04,2009,00:00  IST

Latest indian and world political news information

சென்னை: "இலங்கை அகதிகள் முகாம்களில், அங்கொன்றும் இங்கொன் றுமாக இருக்கிற குறைகளையும் கண்டறிந்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத்தான், 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது' எனக் குறிப் பிட்டுள்ள முதல்வர் கருணாநிதி, அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள நலத் திட்டப் பணிகளையும் பட்டியலிட்டுள்ளார்.



அவரது அறிக்கை: கடந்த முதல் தேதி மாலை, காரில் வந்து கொண்டிருந்தேன். என் அருகில், அந்த வார இதழ்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஏட்டைப் புரட்டினேன். தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதி முகாம்களைப் பற்றி படித்தபோது, என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே எனது செயலர்களை அழைத்து, 2ம் தேதி காலை இதுபற்றி விவாதிப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறினேன். நிதித் துறைச் செயலரையும் அழைத்து, இதுபற்றிய அனைத் துக் குறிப்புகளையும் தயாரிக்கச் செய்தேன்.



இலங்கைத் தமிழரும், சிறந்த எழுத்தாளருமான மறவன்புலவு சச்சிதானந்தனை போனில் அழைத்து, இலங்கைத் தமிழர் அகதிகளின் அவசர, அவசியமான தேவைகள் என்ன என்பது பற்றி, நாளைக் காலை 8 மணிக் குள் எனக்கொரு குறிப்பைத் தர வேண்டுமென கேட்டுக் கொண் டேன். மறவன்புலவு சச்சிதானந்தம், சொன்னபடி காலை 8 மணிக்கே வந்து விட்டார். அவரது குறிப்புகளைப் பெற்று, தலைமைச் செயலகக் கூட்டத்துக்கு விரைந்தேன்.



தமிழகத்தில் 26 மாவட்டங் களில் 115 முகாம்களில் (இரண்டு சிறப்பு முகாம்கள் உட்பட) இலங்கைத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 340 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 241 பேர் முகாம்களில் தங்கவைக் கப்பட் டுள்ளனர். 11 ஆயிரத்து 288 குடும் பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 802 பேர், முகாம்களுக்கு வெளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகள் சீரமைக் கப்படுவதில் இருந்து, கழிப் பறைகள், குடிநீர் வசதி உள் ளிட்ட ஏராளமான நலத்திட்டப் பணிகள் பல கோடி ரூபாய் செலவில், தி.மு.க., அரசால் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 2009-10ம் ஆண்டு பட்ஜெட்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



கடந்த 2006ம் ஆண்டு முதல் மத்திய - மாநில அரசுகள் வழங் கும் பணம், இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ அரிசி 57 காசு என்ற மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுக்கான 6,000 ரூபாய் நிதியுதவித் திட்டம், 2007 முதல், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. பிளஸ் 2 வரை கல்வி, புத்தகம், நோட்டு, சீருடை, மதிய உணவு, பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக் கிள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, சுகாதார வசதிகள், மருத்துவ சிகிச்சைகள் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 2006 முதல் முகாம்களில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இத்துடன் கடமை முடிந்து விட்டதாக நான் கருதவில்லை. அதனால் தான், அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில், இறுதித் தீர்மானமாக, "இவர் களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும்' என, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டோம். மறுநாளே, இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.



இந்த அரசைப் பொறுத்தவரை, அவர்கள் இலங்கைத் தமிழ் அகதிகள் அல்ல; அவர்களும் தமிழர்கள் தான். நம்மோடு தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் தான். அவர்களை வாழ்விக்கச் செய்யும் அனைத்து முயற்சிகளும், நம்மை நாமே வாழ்வித்துக் கொள்ளச் செய்யும் முயற்சிகள் தான் என்ற நோக்கோடு செயல்படுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற குறைகளையும் கண்டறிந்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தான், இந்த அரசின் சார்பில் 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் உதவிகளும் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 இலங்கைத் தமிழ் அகதிகள் படும் துயரம் பெரியவருக்கு இப்பொழுதுதான்,அதுவும்
பேப்பர் படித்துத் தான் தெரியவந்ததோ!
அவர்களை இன்னமும் அகதிகளாகவே
வைத்திருப்பதுதான் கொடுமை.கண்
கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்து
என்ன பயன் ? 
by பெ சக்திவேல்,தாராபுரம்,India    04-11-2009 21:12:51 IST
 சுந்தரம் & சதீஷ் - உங்களுடைய கருத்துக்களை நான் ஆமோதிக்கறேன்.. 
by S ஸ்ரீராம்,chicago,United States    04-11-2009 21:12:09 IST
 ஹலோ மு. க அவர்களே, இப்ப நீங்கள் செய்ய போறதாக சொல்றத எல்லாம் ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி செஞ்சிருந்தால் நல்லா இருந்திருக்கும. பேசாம நீங்க செலவு செய்யப்போற அந்த காசை அவங்க கையில கொடுத்து அவங்களை, அவங்க ஊருக்கு அனுப்பி வைச்சால் அவங்களுக்கும் கௌரவமா இருக்கும், நமக்கும் அடுத்த வருஷம் அதற்கு அடுத்த வருஷம் செலவு செய்யறதும் மிச்சமாக போகுமே. கொஞ்சம் யோசிக்கலாமே. எனக்கு என்னமோ நீங்க இப்ப சொன்ன திட்டத்துக்கு பின்னாடி வேறு ஏதோ இருக்கராப்பலதான் தெரியுது.  
by v sundaram,jeddah,Saudi Arabia    04-11-2009 15:23:15 IST
 The money is our tax. donate from your party fund 
by S.N. chandrasekar,chennai 600 088,India    04-11-2009 12:40:48 IST
 மகிழ்ச்சியாக உள்ளது.உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும். 
by தமிழன் ,sg,Singapore    04-11-2009 11:01:50 IST
 I fully appreciate Mr. K. Satish comments. The freebes has made tamlians lazziest people in India. People wait to see what is free next from the govt.

As for as rehabilitating Srilakan tamil brothers, i fully welcome MK stand in this. Srilakan tamil people who are in india should need more support from the govt to either settle down here and return back to their own country. Those who do not have money and could not take refugee status in european, and north american countries are only staying in india. They need financial assistance to settle and future generation will take care of themself. Lets not underestimate their abilities.

Please lets remember unlike us, srilakan tamils are not begging for aid, they will stand in their own legs. They came to india only to escape the war and will return back to their country along with peace. We need to support them aslong as they are willing to stay in india. They should be supported with better shelter,food,medical facilities, sanitation, and good education. Then they will take care of themself and will not expect everything to be done by the TN govt. 
by Mr Jay,Alberta,Canada    04-11-2009 10:59:30 IST
 D. தேவன் சொன்ன கருத்து மிகச்சரியானது. தமிழ் நாட்டில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அது போன்று பிறந்த நாள் அல்லது, படிப்பு செலவு என உதவி செய்ய வேண்டும் என்றால் யாரை அணுகவேண்டும்? World Vision of India, Child Relief and You, Help Age India போன்ற தொண்டு அமைப்புகள் செய்யும் மனிதாபிமான உதவிகளுக்கு, என்னால் ஆன பண உதவி செய்திருக்கிறேன், செய்து வருகிறேன்.  
by R Puthiyavanraj,New Delhi,India    04-11-2009 09:56:42 IST
  நம் தமிழகத்தில் பிறந்து ஆதரவு இல்லாமல் இருக்கும் எத்தனையோ old age தமிழர்கள் வாழ்வை முதியவர் கவனிப்பாரா ? வாழ்க முதியவர் தொண்டு.வளர்க மூப்பரின் புகழ்.  
by D Suresh,Chennai,India    04-11-2009 09:55:07 IST
 Dear Thiru. MK,
Please add some more helps in for our Tamil brothers, as they should realize in a way they are living midst of their brothers and sisters.
Especially education, please help them to be a graduate in the university as their wish and ability.
Long live!
 
by t jopet,singapore,Singapore    04-11-2009 09:41:13 IST
 அய்யா அப்படியே நம்ம அரசியல் வாதிகளால் ... எவ்வளவு தமிழ் மக்கள் இறந்தார்கள் ..என பட்டியல் இடவும்... 
by m madhu,singapore,Singapore    04-11-2009 09:13:03 IST
 அய்யா ,கருணாநிதி,அவர்களே ,,உங்களுக்கு இலங்கை அகதியை பற்றி படித்த பொது தாங்க முடிய வில்லை ,,இங்கு மக்கள் உங்களால் குடி ,குடி ,என்று குடித்து எத்தனை ஏழை மக்கள் குடும்பம் நாசமாக போகிறது தெரியுமா ??ஏன் அதெல்லாம் நாளிதழில் வருவது இல்லையா ??அல்லது அந்த மாதிரி கெட்ட விசயங்களை படிப்பது இல்லையா ????கொடுமை அய்யா???இங்கு உள்ள மக்களை நன்றாக குடிக்க வைத்து அந்த பணம் கொண்டு அடுத்தவர்க்கு உதவ எப்படித்தான் மனசு வருகிறதோ ???பாவ புண்ணியத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்காலாம் ,,ஆனால்,அது உண்டு ,,கடை தேங்காவை எடுத்து பிள்ளையாருக்கு உடைக்க நீங்கள் வேண்டும் என்று இல்லை ??? நான் அது செய்தேன் ,இது செய்தேன் ,என்று தம்பட்டம் அடிக்கும் ,அய்யா உங்கள் ஆட்சியில் எத்தனை தொழில்கள்,ஆரம்பிக்க பட்டனா??எத்தனைலட்சம் பேருக்கு வேலை கிடைத்தன ???இலவசம் இலவசம் என்று தமிழ் நாட்டையே குட்டிச்சுவரு செயிதிட்டீர்கள் அய்யா ,எல்லாமே இலவசம் என்றால் எவன்னையா வேலைக்கு போவான் ??கீழ் தட்டு மக்களை நன்றாக மயக்கி நாசம் பண்ணி விட்டீர்,,இதில் உங்களை பார்த்து அடுத்த மாநிலமும் கடை பிடிக்கறது என்று தற்பெருமையும் வேறு ???தமிழ் நாட்டை கெடுத்ததுபோதாதுன்னு இந்தியாவையே கெடுக்கிறது உங்கள் இலவசம் ,,மக்களை சோம்பேறி ஆக்கிறது உங்கள் இலவசம் ,,மாநிலத்தை படுகுழிக்கு கொண்டு போகிறது உங்கள் இலவசம் ,,இந்த இலவசத்தை படிப்பில் காட்டுங்கள் ,,தொழில் தொடங்க காட்டுங்கள் ,,ஏதோ எனக்குதெரிந்ததை சொல்லிவிட்டேன் ,இனி உங்கள் இஷ்டம் ,,  
by k sathish,cbe,India    04-11-2009 08:23:52 IST
 திபேத் முதலிய இடங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்தோர் இந்தியா வெங்கும் உரிமையுடன் வசிக்க, பயில, பணியாற்ற, வாழ வழியிருக்கும் பொழுது புலம பெயர்ந்து வந்த தமிழர்களை மட்டும் கொத்தடிமைகளாகத் தொடர்ந்து அடைத்து வைத்திருப்பதேன்? சமூக நலத் திட்டங்களில் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ள முதல்வர் ஈழத் தமிழர்களை விடுவித்து விரும்பியவாறு விரும்பிய இடங்களில் வாழவும் பயிலவும் பணியாற்றவும் வழி ஏற்படுத்தித் தரவேண்டும். இவ்வாறு செய்யாமல் மத்திய காங்கிரசிற்கு அஞ்சிக் கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு எத்தனைக் கோடி உதவி புரிந்தாலும் பயன் இல்லை. இன்றே இலங்கைத் தமிழர்களையும் ஈழத் தமிழர்களையும் விடுவித்து உரிமையுடன் / சுதந்திரமாக வாழ வழி வகை செய்ய வேண்டும். 
by I Thiruvalluvan,chennai,India    04-11-2009 04:10:59 IST
 நாமெல்லாம் பிறந்த நாள் திருமண நாள் இவைகளுக்கு அருகிலுள்ள எதாவது உதவி பெறுவோர் மையங்களுக்கு சென்று நம்மால் முடிந்த உதவிகள் செய்து ஆத்ம திருப்தி காண்போம். ஏன் நாமெல்லாம் வருடத்திற்கு ஒருமுறையேனும் இப்படிப்பட்ட முகாம்களுக்கு சென்று அவர்களோடு நேரம் செலவிடக்கூடாது? நாம் செய்ய இருக்கும் சிறு உதவிகள் அவர்களை மனம் காயப்படுமோ , தன்மானத்தை தீண்டுமோ என்று ஒரு சங்கடம் இருக்குமென்றாலும் அவர்கள் அதை சரியானபடியே புரிந்து கொள்வார்கள் என்று நம்பலாம். இலங்கைக்கு குரல் கொடுக்கும் எத்தனையோ தலைவர்கள் ஏன் இவர்களை சென்று முகாம்களில் பார்ப்பதில்லை? ஒரு வேளை இதெல்லாம் தங்களை வீரராக , சுதந்திரப்போராட்ட தளபதிகளாக காட்டிக்கொள்ள பயன்படாது என்று நினைத்தார்களோ என்னவோ . '' ஏன் இத்தனை நாள் இது இவருக்கு தெரியாதா? '' என்று நாளையே எல்லா எதிர்கட்சிகளும் வரிசைக்கிரமமாக அறிக்கை தொடுக்கப்போவது நடக்குமென்றாலும் கூட , இப்போதாவது முதல்வர் இவர்களின் மனவேதனையை உணர்ந்தது போல் செயல்பட முனைகிறார் , நல்லது நடக்கட்டும் என்று விடுவோம் . முதல்வரின் அறிக்கை '' இந்த முகாம்களில் இருப்போரையும் கூட நாம் கவனித்துக்கொள்ள வேண்டும்'' என்ற ஒரு விழிப்புனர்வை மந்திரிகளைப்போலவே மக்களுக்கும் கொடுக்க ஒரு வாய்ப்பு உள்ளது. விஜயகாந்த் அவர்கள் போன தேர்தல் சமயத்தில் இப்படிப்பட்ட முகாமுக்கு விஜயம் செய்ததையும் இப்போது நாம் நினைவு கூறலாம். 
by D தேவன் ,Chennai,India    04-11-2009 02:03:21 IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்