ஐதராபாத் : ""மாவோயிஸ்ட்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவி வருகிறது,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு, மாநில போலீசாருக்குத் தான் உண்டு. அதனால், மாவோயிஸ்ட்களுக்கு எதிராக மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மத் திய அரசு எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இருந்தாலும், மாநில அரசுகளுக்கு துணை ராணுவப் படையை அனுப்புவது, உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது மற்றும் தொழில்நுட்ப ரீதியான உதவி போன்றவற்றை அளித்து வருகிறது.
"சண்டை நிறுத்தத்தை அரசு அமல்படுத்தினால், பேச்சுவார்த்தை நடத்த தயார்' என, மாவோயிஸ்ட் தலைவர் கிசன்ஜி விடுத் துள்ள அறிக்கையை நான் பார்க்கவில்லை. பாதுகாப் புப் படையினர் மிகவும் விழிப்புடன் உள்ளனர். எந்தவிதமான தாக்குதலையும் முறியடிக்கும் திறனுடன் செயல்பட்டு வருகின் றனர். இந்தியா பொருளாதார ரீதியாக பலமாகிக் கொண் டிருக்கும் நாடு. நாட்டின் பாதுகாப்பு, இறையாண் மை மற்றும் ஒருமைப்பாட் டிற்கு எதிராக உருவாகும் சவால்களைச் சந்திக்க தயாராக உள்ளது.
ஹெட்லி சதி: லஷ்கர் -இ- தொய்பாவின் தூண்டுதலின் பேரில், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி செய்த அமெரிக்காவைச் சேர்ந்த கோல்மேன் ஹெட்லி என்பவரை அந் நாட்டு புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர். அவருடன் ராணா என்ற மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அவர்கள் போட்ட சதித் திட்டம் முறியடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு நிறுவனம் நடத்திய விசாரணையின் போது, ஹெட்லி தெரிவித்த தகவல்களின் அடிப் படையில், பாகிஸ்தானிலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஹெட்லியின் சதி வேலையில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உண்டு என்பது தெளிவாகிறது. ஹெட்லி பல முறை பாகிஸ்தானுக் கும் சென்று வந்துள்ளார். மும்பையில் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைய உள்ளதால், அதையொட்டி தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட் டுள்ளனரா என்பது பற்றி எல்லாம் வெளிப்படையாக விவாதிக்க முடியாது.
| வாசகர் கருத்து |
சண்டை நிறுத்தத்தை அரசு அமல்படுத்தினால், பேச்சுவார்த்தை நடத்த தயார்'' என, மாவோயிஸ்ட் தலைவர் கிசன்ஜி விடுத் துள்ள அறிக்கையை நான் பார்க்கவில்லை. ஒரு உள்த்துறை அமைச்சர் எவ்வளவு பொறுப்ப பதில் சொல்றாரு பாருங்க இன்னும் இவர்களுக்கு புரியவில்லை திவிரவாதம் வேறு மக்களே சட்டத்தை கையில் எடுத்து போராடுவது வேறு காங்கிரஸ் இரண்டையுமே ஒன்றாகத்தான் கருதுகிறது இவர்கள் எத்தனை படை அனுப்பினாலும் மவோளிஸ் அழிய போவது இல்லை கரணம் அவர்கள் பணக்காரன் ஆகணும், நாட்டை ஆளவேண்டும், மக்களை ஏமாற்றவேண்டும், உழல் செய்யவேண்டும் என்றும் சொல்லவில்லை அவர்கள் கேட்பது இடம், தினம் முன்று வேலை உணவு, குடிநீர், மருத்துவமனை, சாலை வசதி கல்வி இதை செய்தால் தானாக மாறிவிடுவர் அதை விடுத்து போர் என்றும் எழாயிரம் கோடி ஒத்துக்கிறோம் என்று சொன்னால் அது அறிவிலி செயல் எழாயிரம் கோடி குட முவாயிரம் சேர்த்து பத்தாயிரம் கோடி ஒதுக்கி மக்களை முன்னேற செய்யுங்கள் பிரச்சனை முடிவு பெரும் அதை விடுத்து அரசியல் செய்தால் அது ஆறாத ரணத்தை தான் வுருவாக்கும்
|
by m ஸ்ரீனிவாசன்,erode,India 11/7/2009 12:37:29 PM IST |
மதிய அரசு என்று சொல்லிக்கொண்டு இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம் ஆனால் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுவார்களாம்! அப்போ மத்தியில் உள்துறை அமைச்சகத்தை கலைத்துவிட்டு அந்த பொறுப்பை மாநிலகளுக்கு கொடுத்துவிட்டால் சுயாட்சி கேட்பவர்களையும் திருப்தி பண்ணிவிடலாமே? சிவராஜ் பாடீலை மிஞ்சிவிட்டார் சிவகங்கைக்காரர்! வெட்கக்கேடு! மனசாட்சியை குழி தோண்டி புதைத்து விட்டால் இந்த மாதிரி பிதற்றியே தீரவேண்டும் போலும்
|
by பாலா ஸ்ரீனிவாசன் ,chennai,India 11/7/2009 11:03:36 AM IST |