Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
அரசியல் செய்திகள்
பா.ஜ., அடுத்த தலைவர் யார் : ஆர்.எஸ்.எஸ்., கருத்து
நவம்பர் 07,2009,00:00  IST

Latest indian and world political news information

புதுடில்லி : "பா.ஜ., கட்சியின் அடுத்த தலைவர் டில்லியைத் தவிர பிற பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கின் பதவிக் காலம் அடுத்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்காக, இக்கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.



பா.ஜ., கட்சியின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் குறித்த கேள்விக்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அளித்த பதில்: பா.ஜ., கட்சியின் புதிய தலைவர், டில்லியைத் தவிர பிற பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு மற்றும் ஆனந்த் குமார் ஆகிய நான்கு பேரைத் தவிர வேறு ஒருவர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கான நடைமுறைகள் துவங்கி விட்டன. எங்களது கொள்கையை செயல்படுத்துபவர், குழு உணர்வை மேற்கொள்பவர், மற்றும் இளைய தலைவர் என்ற அணுகுமுறை அத்தேர்வில் இருக்க விரும்புகிறோம். பா.ஜ.,வின் செயல்பாட்டில். ஆர்.எஸ்.எஸ்., தலையிடவில்லை. வெறும் ஆலோசனை மட்டுமே வழங்கி வருகிறது. கட்சியின் தலைமைப் பதவி குறித்து கட்சியே தீர்மானிக்கும். பாபர் மசூதி இடிப்பு அவமானகரமான செயல் என்று அத்வானி தெரிவித்த கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. குஜராத் கோத்ரா கலவரத்தை உடனடியாக நிறுத்திய மோடி அரசு செயலுக்கு பாராட்டுகள். இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 RSS always great.If rss not be in india. We could not hear that name. 
by b murugadas,Bahrain,India    11/7/2009 9:27:36 PM IST
 ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க வின் ரிமோட் ஆக இருப்பதில் என்ன தவறு? ஆர் எஸ் எஸ் ஒரு தேசிய அமைப்பு.. வேறு சில குழுக்களுக்கு சீனாவிலிருந்தும் ஆப்கனிஸ்தான் இல் இருந்தும், அரேபியாவில் இருந்தும், பாகிஸ்தானில் இருந்தும் இந்தியாவை பிளக்க உதவும் ரிமோட் கண்ட்ரோல்கள் இருப்பதுதான் ஆபத்து!  
by S பாலா ஸ்ரீனிவாசன் ,Chennai,India    11/7/2009 10:51:59 AM IST
 தற்போது ஆர்.எஸ்.எஸ்.தான் பா.ஜ., கட்சியின் ரிமோட் என்று உண்மை புரிந்து போச்சு .மறைமுகமாக நடந்து வந்த ஆர்.எஸ்.எஸ் தான் பா.ஜ., கட்சியின் அரசியல் ஆலோசகர் எனபது.
தெள்ள தெளிவா புரிந்து விட்டது .. 
by kalai raja,trichy,India    11/7/2009 1:51:36 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்