Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
அரசியல் செய்திகள்
காங்கிரஸ் - 23, தேசியவாத காங்கிரசுக்கு 20 மந்திரிகள் : 15 நாள் இழுபறிக்குப் பின் இன்று பதவியேற்பு
நவம்பர் 07,2009,00:00  IST

Latest indian and world political news information

தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்கு பிறகு, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்கிறது. காங்கிரஸ் சார்பில் 23 பேரும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் 20 பேரும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.



மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் சாதகமாக இருந்தாலும், இரு கட்சிகளுக்கு இடையில் நடைபெற்ற இலாகா பரிமாற்றம் இழுபறியில் இருந்ததால் அமைச்சரவை பதவியேற்பு தாமதமானது. மாநில அளவில் தலைவர்கள் பேச்சு, அதற்குப் பின் டில்லியில் ஆலோசனை, மீண்டும் மும்பையில் ஆலோசனை என்று தொடர்ந்தது. முன்பு 1999ம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகளும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி நடக்க வேண்டுமென தேசியவாத காங்கிரஸ் ஒற்றைக்காலில் நின்றது. ஆனால் நிதி, பொதுப்பணி மற்றும் உள்துறை ஆகிய இலாகாக்களை எப்படியும் தாங்கள் எடுத்துக் கொள்ள காங்கிரஸ் பிரயத்தனம் செய்து பார்த்தது. இதனால், பேச்சுவார்த்தையிலேயே பலநாட்கள் ஓடின.



இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோரப் போவதாக, பா.ஜ., சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் திடீரென குரல் எழுப்பத் துவங்கின. கவர்னர் ஜமீர் கூட இரு கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒருமுறை பேசிப்பார்த்தார். அப்படியும் ஒரு முடிவுக்கு யாராலும் வரமுடியவில்லை. ஆனாலும் அமைச்சரவை பதவியேற்பு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தால், சட்டச் சிக்கல் போன்ற நெருக்கடி வரும் என்பதை இரு கட்சிகளுமே உணரத் துவங்கின. இதன் விளைவாக, இலாகா ஒதுக்கீடு பற்றிய இறுதியான நிலை எதுவும் எட்டப்படாத சூழ்நிலையில் அமைச்சரவை பதவியேற்புக்கு தேதி குறிக்கப்பட் டுள்ளது.



அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்கள் முடிந்து 16வது நாளான இன்று, அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. முதல்வராக அசோக் சவானும் துணை முதல்வராக சாஜன் புஜ்பாலும் கவர்னர் ஜமீரை மீண்டும் இணைந்து சந்தித்த பின் இதைத் தெரிவித்தனர். நேற்று டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துவிட்டு நிருபர்களிடம் பேசிய அசோக் சவான், "காங்கிரஸ் சார்பில் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்பர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் 20 பேர் பதவியேற்பர். பழங்குடியினர் நலம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளை காங்கிரஸ் கேட்டு வருவதாக பத்திரிகைகளில் வந்த செய்தி சரி அல்ல. பொது சுகாதாரத் துறைதான் காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது' என்று கூறினார்.



ஆனாலும் யார் யாருக்கு எந்தெந்த துறை என்பது குறித்து இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றே தெரிகிறது. இதுகுறித்த பேச்சுவார்ததை இன்னமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக உள்துறை, நிதி, பொதுப்பணி போன்ற முக்கிய துறைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் உறுதியாக கூறி சாதித்தும் விட்டதாகவே தெரிகிறது. இது தேசியவாத காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி என்று கூட கூறலாம். ஆனாலும் இலாகா ஒதுக் கீடு குறித்த பேச்சுவார்த்தை இன் னும் முற்றுப்பெறவில்லை என் றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜனாதிபதி மகன் ராஜேந் திர ஷெகாவத்திற்கு அமைச்சர் பதவி உண்டா என்பது குறித்தும் பதில் தர முன்வரவில்லை. நேற்று நடந்த பேச்சுக்களில் மகாராஷ்டிரா விவகாரங்களைக் கவனிக்கும் அமைச்சர் அந்தோணியும், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் உடனிருந்தனர். ஆனால் தற்போது இரு கட்சிகளுக்கும் ஏற்பட்ட உடன்பாடு முந்தைய 1999 உடன்பாடு அல்ல என்று மட்டும் கூறப்படுகிறது. அதே சமயம் எங்கே முரண்பாடு என்பதை விளக்கவில்லை.



                                                                                                     - நமது டில்லி நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 இன்னும் முடிய்யவில்லையா உங்கள் பேரம் ,,மக்களுக்கு தொண்டு செய்யும் லட்சணமா இது ??இது ஏன் என்றால் நல்ல தலைமை இல்லை ,,என்ன செய்வது ??  
by K sathish,CBE,India    11/7/2009 7:07:34 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்