ஐதராபாத் : "ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில், 50 இடங்களில், பிரஜா ராஜ்யம் கட்சி, வேட்பாளர்களை நிறுத்தும்' என, கட்சித் தலைவர் சிரஞ்சீவி தெரிவித்தார். ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில், கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி 150 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், பிரஜா ராஜ்யம் கட்சி போட்டியிடுவது குறித்து, அக்கட்சித் தலைவர் சிரஞ்சீவி கூறியதாவது: மாநகராட்சித் தேர்தலில், மொத்தமுள்ள 150 வார்டுகளில், பிரஜா ராஜ்யம் கட்சி, 50 இடங்களில் மட்டுமே தனித்துப் போட்டியிடும். காங்கிரஸ் கட்சியுடன், தேர்தல் உடன்பாடு கொள்வதை, பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்ப்பதால், தனித்துப் போட்டியிடும் முடிவை மேற்கொண்டோம். அதிக இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதை தவிர்த்து, வெற்றி வாய்ப்புள்ள 50 இடங்களில் மட்டும் போட்டியிட்டு, தேர்தலை சந்திப்பதையே கட்சியில் உள்ளோர் விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் உடன்பாட்டை தவிர்த்துள்ள நிலையில், கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, 50 இடங்களை தேர்தெடுத்து வேட்பாளர்களின் பட்டியலை இறுதியாக வெளியிட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.
| வாசகர் கருத்து |
மீதமுள்ள இடங்கல்ல எல்லாம் காங்கிரஸ்காரர்கள் நிட்பார்கள்
|
by A. Peer,UAE,India 11/7/2009 6:41:04 PM IST |