Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
அரசியல் செய்திகள்
டாஸ்மாக் ஊழியர் சம்பள உயர்வு : அ.தி.மு.க., இன்று உண்ணாவிரதம்
நவம்பர் 07,2009,00:00  IST

Latest indian and world political news information

சென்னை : டாஸ்மாக் பணியாளர்கள் சம்பள உயர்வு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இன்று அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அரசின் வருமானத்தை உயர்த்த மதுபான விலையை கடுமையாக உயர்த்தும் அரசிற்கு, ஊழியர்களின் வருமானத்தை உயர்த்த மனமில்லாதது வேதனை அளிக்கிறது. டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என, அ.தி.மு.க., ஆர்பாட்டம் நடத்தியது. போராட்டம் நடத்துவது முறைதானா என்று முதல்வர் மிரட்டல் அறிக்கை விடுகிறாரே தவிர, சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. டாஸ்மாக் ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் தொழிலாளர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதம் நடக்கிறது. உண்ணாவிரதத்தை தலைமை நிலையை செயலர் செங்கோட்டையன் துவக்கி வைக்கிறார்; எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் ஜெயக்குமார் முடித்து வைக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 அம்ம நீங்கள் எப்பொழுதும் கொடைநாட்டில் இருப்பதே இப்படிசெய்வதற்கு நன்று. 
by V Balasundaram,Dubai, U.A.E.,India    11/7/2009 2:55:57 PM IST
 தற்போது உள்ள விலைவாசியில் ஒரு பட்டதாரியான டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் ஆகிய நாங்கள் எவ்வாறு ரூ.3500௦௦௦/- சம்பளத்தில் குடும்பம் நடத்துவது.
 
by a panneerselvam,salem,India    11/7/2009 1:28:58 PM IST
 இதுபோல் ஒரு போதை பொருள் விற்கும் கடைகளை ஆதரிப்பதே பெரும் குற்றம். இதில் அவர்களுக்கு சம்பள உயர்வு கேட்டு உண்ணாவிரதம் இதற்க்கு முன்னால் முதல்வர் ஆதரவு. எத்தனை வேதனையான செயல். நாம் மேற்கத்திய நாடுகளிடமிருந்து சுதந்திரத்தை கறகவேண்டும் . அதே நேரம் ஒழுக்கத்தை சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகளிடம் கற்க வேண்டும். ஒழுகத்திற்கு முதல் எதிரி மது ... அதனை அற்ப ஓட்டிற்காக ஆதரிப்பதை நமது அரசியல் தலைவர்கள் கை விடவேண்டும்  
by D Suresh,Chennai,India    11/7/2009 12:22:26 PM IST
 அம்மா கொஞ்சம் கூட யோசனை பண்ண மாட்டிங்களா ??எதற்கு தான் போராட்டம் செய்வது என்று ???மதுவை ஒழிய வேண்டும் என்றால் சரி ,,, அதற்க்கு ஊக்கம் கொடுப்பது போல் போராடினால் எப்படி ??உங்களால் ஆரம்பித்து வையித்தது உங்களாலே முடிவுக்கு கொண்டு வந்தால் நல்ல இருக்கும் ,,மக்கள் உங்களிடமிருந்து எவ்வளவோ எதிர் பாக்கிறார்கள் ,,ஆனால் நீங்கள் ,,ரொம்ப கஷ்டம் அம்மா ???யோசிப்பீங்கனு நினைக்கிறன் ,,  
by K sathish,CBE,India    11/7/2009 7:40:58 AM IST
 Shame on Amma!!
She can protest for senior people who are waiting for pension fund, and other retirement benfits from the government. Or she can protest for other Vital issues such as supporting the Army people, Doctors, global warming, reduce bribe in TN, and student loan to the brilliant but poor students. But
It sounds, she wants to flip the government with the tasmark staff!!! it is ridiculous. by doing this she will loose her whole reputation.
Indeed, it is nonsense too. 
by K Prem,USA,India    11/7/2009 3:12:30 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்