Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
அரசியல் செய்திகள்
உணவு உற்பத்தியை பெருக்க வேளாண் விஞ்ஞானிகள் உதவ வேண்டும் : முதல்வர் வேண்டுகோள்
நவம்பர் 07,2009,00:00  IST

Latest indian and world political news information

கோவை : ""உணவு உற்பத்தியை மேலும் பெருக்க, நவீன தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பயிற்சி அளிக்க வேண்டும்,'' என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். இந்தியா முழுவதும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களின் நான்காவது தேசிய மாநாடு, கோவை வேளாண் பல்கலையில் நேற்று துவங்கியது.



இந்திய வேளாண் அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் நடத்தப்படும் இந்த மூன்று நாள் மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள 569 வேளாண் அறிவியல் நிலையங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங் கேற்றுள்ளனர். இதில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, விவசாயிகள் தங்கிச் செல்ல புதிதாக கட்டப்பட்டுள்ள உழவர் இல்லத்தை திறந்து வைத்தார்.



விழாவில், அவர் பேசியதாவது: தமிழகம் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சீராக வளர்ந்து வருகிறது. விவசாய வளர்ச்சியில் தமிழகம் அடைந்து வரும் வேகமான முன்னேற்றத் துக்கு விவசாயிகளின் கடின உழைப்புதான் காரணம். கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் தமிழக வேளாண் பல்கலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்குவதில் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 1971ல் கோவைவேளாண் கல்லூரியை தமிழ்நாடு வேளாண் பல்கலையாக தரம் உயர்த்தினேன். இதன் காரணமாக இப்பல்கலையில் ஆராய்ச்சி செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டன.



விவசாய உற்பத்தியில் மனிதர்களுக்கு பதிலாக மெஷின்களை பயன்படுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் எதிர்ப்பு இருந்தது. ஆனால் இன்று மெஷின்களை விவசாயிகள் பயன்படுத்தத் துவங்கியதும், உணவு உற்பத்தியை பெருக்க மெஷின்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அரிசி, சோளம் உட்பட மொத்த உணவு தானிய உற்பத்தியில் நாம் சிறந்த இடத்தை அடைந்து விட்டாலும், பயறு மற்றும் எண்ணெய்வித்து உற்பத்தியில் இன்னும் உற்பத்தியை பெருக்க வேண்டியதுள்ளது. உற்பத்தியை பெருக்க, நவீன தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பயிற்சி அளிக்க வேண்டும். கரும்பு, அரிசி, கோதுமை உற்பத்தியில் நம் நாடு உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பயறு உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், காய்கறிகள் மற்றும் பழ உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளோம். இந்த வளர்ச்சி போதாது. விவசாயத்தில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். இதற்கு விஞ்ஞானிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு, முதல்வர் பேசினார்.



மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார், மாநாட்டை துவக்கி வைத்தார். மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராஜா, தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன், போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி, வேளாண் அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர்கள் பங்கேற்றனர்.  மாநாடு நாளை நிறைவு பெறுகிறது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 A farmer is not able to fix the price for his products.Then how people will continue agriculture  
by n raju,chennai,India    11/7/2009 4:28:46 PM IST
 நஞ்சை நிலங்களை பன்னாட்டு நிறுவனகளுக்கு விற்ற பின் முதல்வர் பேசுவது சூப்பர் ? நஞ்சை நிலங்களை விற்க தடை விதித்து உற்பத்தியை பெருகியிருந்தால் உலகம் முழுவதற்கும் நாம் உணவு தானியங்களை சப்ளை செய்யல்லாம் . 
by a sridaran,Malaysia,India    11/7/2009 3:15:30 PM IST
 MR.M.K.YOU HAVE AGRI MINISTRY AND AGRI -OFFICERS WHO NEVER DO THEIR DUTY PROPERLY .FIRST INITIATE THEM AND ORDER YOUR E.B DEPARTMENT TO GIVE CURRENT CONECTION FOR IRRICATION WITHOUT OBSTACLES. 
by M IBRAHIM,JEDDAH,Saudi Arabia    11/7/2009 12:21:51 PM IST
 கலைஞர் அணைகட்டவோ வாய்க்கால் வெட்டவோ தயங்கியதில்லை என்பதை கருத்து கூறியவர் உணரவேண்டும் 
by N Gopal,chennai,India    11/7/2009 11:38:42 AM IST
 40 ஆண்டு கால ஆட்சியில் எத்தனை அணைகள் கட்டி விவசாயத்தை பெருக்கியுள்ளார் தி (ரு)மு.க. கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம் . கரும்பு, அரிசி, கோதுமை உற்பத்தியில் நம் நாடு உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பயறு உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், காய்கறிகள் மற்றும் பழ உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளோம் . இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை . தமிழ்நாடு இந்தியாவிலேயே எத்தனாவது இடத்தில் இருக்கு. முதலில் விவசாய நிலத்தை கூறுபோட்டு விற்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதும் நிறுத்தினாலே போதும். சும்மா மைக்க புடிச்சுக்கிட்டு எதையாவது பேசி தினமும் செய்திகளில் தான் இருக்கேன் என்று தெரிவிப்பதை நிறுத்து.  
by vp visakha,doha,Qatar    11/7/2009 11:20:16 AM IST
 விவசாயம் பெருகட்டும் .

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வாழ்க! வாழ்க! 
by JG ஜி கணேசன் ,chennai,India    11/7/2009 8:29:42 AM IST
 40 லட்சம் கலர் டிவியின் சூடு மேலும் புவி வெப்பத்த்தை அதிகரிக்கும் என்பது, ஒரு பழுத்த அரசியல்வாதிக்கு தெரிஞ்சிருக்கணுமா ? கூடாதா ?

விழா நடத்தறதுக்கே தி.மு.க. (திட்டமிட்டு முன்னேறும் கழகம் ) கட்சிக்கு ஐந்து ஆண்டு பத்தாது. மறுபடியும் ஓட்டு கேக்கறதுக்கு செம்மொழி மாநாடு என்று ஒரு புதிய அத்தியாயம் எழுத தொடங்கி விட்டார்.  
by sky சா.கி.யு ,tirupur,India    11/7/2009 8:23:33 AM IST
 ஒரு அணை, கால்வாய் வெட்டி கொடுக்க வக்குஇல்லை, தண்ணீர் இல்லாமல் பின் எப்படி விவசாய வளர்சியில் ஈடுபட முடயும்? அரசு கஜான அரசு பணி<யாளர்களுக்கு சம்பளம் , போனஸ் கொடுக்க மட்டும் உள்ளது, வெயிலில் கஷ்டப்படும் விவசாயிக்கு செலவு செய்ய பணம் - மனம் இல்லை . 
by v ரக,london,India    11/7/2009 4:33:30 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்