ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: இப்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு அப்பால், கேரளம் புதிய அணையை கட்டிக் கொண்டால், நாம் எதிர்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால், இப்போது கேரளம் ஒரு வஞ்சகத் திட்டத்துடன் புதிய அணை கட்ட வேண்டும் என்கிறது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் திட்டம் தான் அது.
இந்திய கம்யூ., மாநிலச் செயலர் பாண்டியன் பேட்டி: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் போதெல்லாம் குறைந்தது 10 நாட்கள் கழித்து தான் அவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடைவெளியில் அவர்கள் இலங்கை சிறையில் அதிக துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி பேட்டி: வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக ஒரு முஸ்லிம் அமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்க முடியாது. சுதந்திரப் போராட்டத்தின் போது, இப்பாடல் உத்வேகத்தை கொடுத்தது. நாட்டுப் பற்றுடைய ஒவ்வொருவரும் பாட வேண்டிய பாடல் இது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி: பிரச்னைக்கு தீர்வு காண புதிய திட்டத்தை பா.ஜ., மேலிடம் உருவாக்கியுள்ளது. குழப்பத்துக்கு சட்டசபை தலைவர் ஜெகதீஷ் ஷெட்டார் தான் காரணம். அமைச்சர் பதவிக்காக அவர் இதுபோன்ற குழப்பம் செய்யத் தேவையில்லை.
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் உமர் பாரூக் அறிக்கை: படைத்தவனை மட்டும் வணங்கி வரும் நாங்கள், எவருக்காகவும், எதற்காகவும் படைப்புகளை வணங்க மாட்டோம். பா.ஜ.,வை பொறுத்தவரை முஸ்லிம்களின் உணர்வுடன் விளையாடி, அதன்மூலம் ஆதாயம் தேடிய காலம் எல்லாம் மலையேறி விட்டது. இனி, அது தன்னை காத்துக் கொள்ள எங்களை சீண்டுவதை ஏற்க முடியாது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா பேச்சு: பாகிஸ்தான் உள் விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிட்டது கிடையாது. பலூசிஸ்தான் மட்டுமல்ல, பாகிஸ்தானின் பிற பகுதிகளில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு அந்நாடே காரணம். அங்கு அரசு ஸ்திரமாக செயல்படவில்லை என்றே தோன்றுகிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிக்கை: மரபணு மாற்று கத்தரிக்காயை சுப்ரீம் கோர்ட் வல்லுனர் குழுவின் கவனத்திற்கு கொண்டு வராமலே அனுமதி வழங்கியது தவறு. பி.டி.பருத்தியை அனுமதித்ததால், ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மறந்து விடக்கூடாது. மத்திய அரசின் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக பின்பற்றவில்லை.
| வாசகர் கருத்து |
திரு உமர் அவர்களே, அனைவரும் இந்தியர். தயவு செய்து அதை உணருங்கள் மேலும் உணர்த்துங்கள். நன்றி
|
by கணேஷ்,Maldives,Maldives 11/7/2009 4:22:49 PM IST |
அருமையான கருத்து ஹுசஎன், உங்களை நினைத்து பெருமையா இருக்கிறது
|
by Doss,Brussels,Belgium 11/7/2009 2:34:48 PM IST |
இனி வந்தே மாதரம் பாடல் பாடக்கூடாது என்று சட்டம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மைனாரிட்டி வாக்குகளை நம்பி பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கும் அரசியல் வியாபாரிகள் எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
|
by R Manohar,chennai,India 11/7/2009 2:16:24 PM IST |
நான் திரு ஹுசேன் அவர்களை பாரட்டுகிறேன்.
|
by M KARTHIK,DUBAI,India 11/7/2009 12:17:37 PM IST |
நானும் பக்கா இந்திய முஸ்லிம்தான். இஸ்லாத்தில் நபிகள் நாயகத்தையே வணங்க வேண்டிய அவசியம் இல்லை. தாய் நாட்டை மதிக்கிறேன், மரியாதை செய்கிறேன் . தாய் நாட்டை வணங்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் ஒரு தனிப்பட்ட மதத்தின் கடவுளாகிய துர்கைக்கு சமமாக வணங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன்டா இத வச்சு அரசியல் பண்ணுறீங்க.
|
by N Mohamed Ismail,Madurai,India 11/7/2009 12:13:03 PM IST |
ஹுசயின் நீ தான் ஒரிஜினல் இந்தியன். உன் உணர்விற்கு ஒரு சபாஷ் .
|
by R ஆல்வின் சாம் ,chennai,India 11/7/2009 11:36:39 AM IST |
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் உமர் பாரூக் அறிக்கை மிக மிக அருமை. <ணீ> <ணீ> ஆனா உமக்கு எம் எல் எ சீட்டு வேண்டும் என்றால் எங்கள் தானை தலைவர் சிறுபான்மை இன காவலர் திரு மு க வை வணங்கியே தீர வேண்டும். <ணீ> <ணீ> உமக்கு எம் எல் எ சீட்டு வேண்டும் என்றால் அரசியல் தலைவர் காலில் விழுவீங்க. ஆனா மாநில தாய வணங்க மாட்டீங்க இல்ல? நான் ஒரு முஸ்லிம் இந்தியன். இது தேச பற்று பற்றிய விஷயம். இதை ஆக்காதீர்கள் அரசியல். <ணீ>
|
by MA ஹுசயின் ,Chennai.,India 11/7/2009 2:37:06 AM IST |