கோவை : ""இந்தியாவில் விவசாய நிலத்துக்கும், விவசாயிகளின் மொத்த மக்கள் தொகைக்கும், இடையிலான விகிதம் குறைந்து விட்டதால், நாட்டின் உணவு பாதுகாப்பு இன்று கவலை தருவதாக உள்ளது,'' என்று மத்திய வேளாண், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் சரத் பவார் பேசினார். வேளாண் அறிவியல் நிலையங்களின் நான்காவது தேசிய மாநாடு, கோவையில் நேற்று துவங்கியது.
மாநாட்டை, அமைச்சர் சரத் பவார் துவக்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் வேளாண் உற்பத்தி அதிகரித்து வருகிறது. உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால், முட்டை, மீன் ஆகியவற்றின் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு குறைந்து விட்டது. விவசாய நிலத்துக்கும், விவசாயிகளின் மொத்த மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதம் குறைந்து விட்டது. வளர்ந்த நாடுகளில் நபருக்கு 11 எக்டேர் ஆக உள்ள இந்த விகிதம், இந்தியாவில் 0.3 ஆக உள்ளது. வளங்கள் குறைந்து வருகின்றன. விவசாய நிலங்கள், தண்ணீர், விவசாயக் கூலிகள் குறைந்து விட்டன. இதனால், இன்று உணவு பாதுகாப்பு கவலை தருவதாக உள்ளது.
கடந்த 1972ல் 55 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள் தொகை, 2007ல் 110 கோடியாக உயர்ந்து விட்டது. இதனால், 2006-2007ல் இரண்டு மடங்கு உணவு தேவைப்பட்டது. இதனால், பருப்பு வகை தவிர, பெரும்பாலான உணவு உற்பத்தியும் இரண்டு மடங்கை தாண்டி விட்டது. ஆனாலும், தனி நபருக்கான ஊட்டச்சத்து உணவு, பற்றாக்குறையாகவே உள்ளது. நமது மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவருக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளது. கடந்த ஆண்டு 23 கோடி டன் உணவு தானியம் உற்பத்தியானது. ஆனாலும், 2020 - 2021ல் 28 கோடி டன் உணவு தானியம் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போல் பால், காய்கறிகள், பழங்கள், சர்க்கரை ஆகியவற்றின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆகவே, இவற்றின் உற்பத்தியை பெருக்குவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும். இதற்கு பிராந்திய வேற்றுமை பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.
வேளாண் உற்பத்தியை பெருக்க, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். வேளாண் அறிவியல் நிலையங்களின் பங்கு முக்கியம் என்பதால், ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் 273 ஆக இருந்த வேளாண் அறிவியல் நிலையங்களின் எண்ணிக்கை, 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 569 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையங்களில் பல்வேறு பரிசோதனை வசதிகளுக்காக 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 3,912 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் சரத் பவார் பேசினார். சிறந்த வேளாண் அறிவியல் நிலையங்களுக்கான தேசிய விருது தமிழகம் (ஈரோடு), மத்திய பிரதேசம், கோவா மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன.
| வாசகர் கருத்து |
இந்தியாவில் விவசாய நிலத்துக்கும், விவசாயிகளின் மொத்த மக்கள் தொகைக்கும், இடையிலான விகிதம் குறைந்து விட்டதால், நாட்டின் உணவு பாதுகாப்பு இன்று கவலை தருவதாக உள்ளது,'''' என்று மத்திய வேளாண், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் சரத் பவார் பேசியுள்ளது குதிரையை காணடித்து பிறகு லாயத்தை பூட்டிய கதையாக உள்ளது! தமிழகத்தில் மின்துறை அமைச்சர் தூங்கி விட்டு மின் தட்டுப்பாடு வந்த பிறகு ஜெயலலிதா தான் காரணம் என்ற மாதிரி உங்களால் சொல்ல முடியாதே! எனென்றால் முந்தைய ஐந்து ஆண்டும் நீங்கள் தான் அமைச்சர்!
|
by t laavan,chennai,India 11/7/2009 2:33:37 PM IST |
அது தான் எல்லோருக்கும் தெரியுமே ,,அதற்கு தானே உங்களேமந்திரி ஆக்கினாங்க ,,நீங்க ஏதாவது செஞ்சு உற்ப்பதியை பெருக்க செய்ய வேண்டும் அல்லவா ??அதை விட்டிட்டு நம்ம சிதம்பரம் மாதிரி ரிப்போர்டராகா இருந்தால் எப்படி சார் ??நீங்க எப்ப பாத்தாலும் கிரிக்கட் என்று சம்பாதிக்கற வழியே மாத்திரம் பார்த்தல் எப்படி சார் ,,கொஞ்சம் நாட்டையும் பார்த்தால்தானே நல்ல இருக்கும் ,,மக்கள் ரொம்ப நாளைக்கு இதே மாதிரி இருப்பாங்க என்று நினைக்கிறேங்களா ,,தப்பு அய்யா ,,தப்பு ,,உசாருங்கோ ,,
|
by K sathish,CBE,India 11/7/2009 9:11:24 AM IST |
Nice comment from Mr. Venki.
|
by MR Manal,chennai,India 11/7/2009 6:53:03 AM IST |
பல அரசியல் வாதிகளே ரெண்டு பொண்டாட்டி, நாலஞ்சு புள்ளைங்க என்று வலம் வருகிறார்கள். இவர்கள் மக்கள் தொகை பெருக்கம் பற்றி பேசுகிறார்கள். நேரக் கொடுமைதான்.
|
by வெங்கி ,Thiruvarur,India 11/7/2009 5:07:42 AM IST |