Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
அரசியல் செய்திகள்
பேச்சு, பேட்டி, அறிக்கை
நவம்பர் 11,2009,00:00  IST

Latest indian and world political news information

இந்திய கம்யூ., மாநிலச் செயலர் பாண்டியன் பேட்டி: தமிழக எல்லைப் பகுதியை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. சோமாலிய கடற்கொள்ளையர்களை ஒழிக்க மத்திய அரசு இந்திய கடற்படையை அனுப்ப தயாராக உள்ளது. தமிழக மீனவர்களுக்கு ஒரு பிரச்னை என்று வரும் போது கண்டுகொள்வதில்லை.



மார்க்சிஸ்ட் கம்யூ., மாநிலச் செயலர் வரதராஜன் அறிக்கை: மேற்குவங்கத்தில் நிலச் சீர்த்திருத்த சட்டம் சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இச்சட்டம், அண்ணா அவர்களாலேயே, "உச்ச வரம்பா, மிச்ச வரம்பா' என ஏகடியம் பேசப்பட்ட நிலை மாறவில்லை என்பதை மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக் காட்ட விழைகிறது.



சந்திரயான் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி: சந்திரயானில் இருந்து 11 கருவிகளின் மூலம், "ஏழு தேரா பைட்' தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை, "இஸ்ரோ' விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி செய்து வருகிறது. தற்போது நிலவில் உள்ள கனிமவளங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர்.



சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே பேச்சு: ஐகோர்ட் சேவை எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் அரசு, அனைத்து தேவைகளையும் செய்து தருகிறது. வக்கீல்களின் குறைகளை தீர்த்து வைக்க ஐகோர்ட் நிர்வாகம் தயாராக உள்ளது. கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலர் ஹைதர் அலி பேட்டி: ஆந்திரா, ஒரிசா மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் மக்களுக்காக போராடுகின்றனர். இவர்களை அரசு அடக்க நினைக்கிறது. மக்களுக்கு தேவையானவற்றை அரசு செய்யாததால் தான் மாவோயிஸ்டுகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.



இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் தமிழரசன் அறிக்கை: சமத்துவ புரங்களுக்கு தமிழக அரசே நிதியை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர்கள் வீடுகட்டிக் கொள்ள, மத்திய அரசு ஒதுக்கும் நிதியை  அரசு சமத்துவபுரம் திட்டத் துக்கு பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது.



வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் நடராஜன் பேட்டி: சுகாதாரம் மற்றும் ரயில்வே துறைகளில் அமைச்சர்களாக இருந்தபோது, வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தராமல் தனது குடும்ப நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்ட ராமதாஸ், கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 அண்ணே தமிழரசன், எலும்பு துண்டு எப்படி கிடைச்சா என்ன?  
by k sathish,cbe,India    11/11/2009 5:29:48 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்