Dinamalar - No 1 Tamil News Paper

அரசியல் செய்திகள்
பேச்சு, பேட்டி, அறிக்கை
நவம்பர் 16,2009,00:00  IST

Latest indian and world political news information

பா.ஜ., மாநில துணைத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்: தமிழக அரசின் மழை நிவாரணப் பணிகளில், முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள, அனைத்து அரசியல் கட்சியின் ஒத்துழைப்பையும் முதல்வர் கோரிப் பெற வேண்டும். சமூக பணியில் ஆர்வம் உள்ள, இளைஞர் பலம் பொருந்திய அமைப்புகளின் சேவைகளை பெறவும் அரசு தயங்கக்கூடாது.



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க தமிழக அரசு முதலில் 12 கோடி ரூபாய் அறிவித்தது. இப்போது 100 கோடி ரூபாயாக உயர்த்தி அறிவித் துள்ளது. இதை வரவேற்கிறேன்.



பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேட்டி: இலங் கையில் போர் முடிந்து பல மாதங்களாகியும், பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள், அகதிகள் முகாம்களிலிருந்து இன்னும் விடுதலை செய்யப் படவில்லை. அவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி லோக்சபா கூட்டத் தொடரில் பிரச்னை எழுப்புவோம்.



மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேச்சு: அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்.



முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேட்டி: காங்கிரஸ் கட்சியிலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. நெல்லை மாவட்டம் ராதாபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் கூட வைக்கமுடியாத நிலைக்காக நாங்கள் வெட்கி தலைகுனிகிறோம்.



ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: இலங்கையில் தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்ஷே, திருப்பதி வந்து செல்கிறார். அதேநேரத்தில், மலையாளிகளை கொன்று குவித்துவிட்டு, இவரால் கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடியுமா? சீக்கியர் களை கொன்றுவிட்டு பொற்கோவிலுக்கு தான் செல்லமுடியுமா?



மக்கள் சக்தி கட்சி மாநில தலைமைக்குழு உறுப்பினர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை: தகவல் ஆணையமும், பொது தகவல் அதிகாரிகளும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மீறுவது, இச் சட்டம் கொண்டு வரப் பட்ட நோக்கத்தையே சிதைப் பதாக உள்ளது. ஆணையம் சரியாக செயல்படாதது, லட் சத்திற்கும் மேற்பட்ட மனுக் கள் ஆணையத்திற்கு வரவேண்டிய சூழலை உருவாக்கி விட்டது.



தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அருள்துமிலன் அறிக்கை: மத்திய, மாநில அரசுகள் தேசிய பெண்கள் கமிஷனின் கருத்துக்களை மட்டும் கேட்டு, ஆண்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றி வருகிறது. இதனால் ஆண்கள் சமூக பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஆண்களின் கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய ஆண்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 நம்ம ஊர் அரசியல் தலைவர்களை நம்புவதை விட ராஜபக்சேவை நம்பிவிடலாம் என்று மறைமுகமாக சொல்கிறீரா... 
by கணேஷ்,maldives,Maldives    16-11-2009 15:10:39 IST
 nan degree mudithu dubai accountsla இருக்கேன்..என்ன punniyam தமிழ் மட்டும் than pakkava theriyuthu...வேற எந்த moliyum தெரியல...kalaigar,ramadas,vaiko, ivanunga irukkura varaikum தமிழ் தமிழ் solli நம்ம valkaila velaiyaduranunga...india thesiya மொழி hindhi அது kuda தெரியல thamilanuku...ethanai thamilanuku hindhi தெரியும்... 
by MU THAMILARASAN,thailapuram,India    16-11-2009 11:56:25 IST
 லாஜிக் உதைக்குது வைகோ சார் , தமிழனை கொன்றுவிட்டு அவர் தமிழ்நாடு வரவில்லை, திருப்பதிக்கு தான் வந்தார். எம்பிக்கள் குழுவில் எங்களையெல்லாம் ஏன் இலங்கைக்கு கூட்டி செல்லவில்லை என்றார்கள். ஒரு வேளை அங்கே போயிருந்தால் ராஜபக்ஷேவை என்ன செய்திருப்பார்கள் ? அடித்திருப்பார்களோ??? திட்டியிருப்பார் களோ?. அப்படி எதிர்ப்பு தெரிவிக்க உண்மையிலேயே ஆசையிருந்தால், யாருமே இவர்களை தடுக்காத நிலையில், எதற்கெல்லாமோ டெல்லி கிளம்பும் ''கொள்கையாளர்கள்'' இங்கே பக்கத்திலிருக்கும் திருப்பதிக்கே வந்து இவர்களுக்கெல்லாம் லட்டு கொடுத்துவிட்டுப்போன ராஜபக்ஷேவை எதிர்க்க திருப்பதி சென்றிருக்கலாம் தானே? ஒருவேளை அங்கே போனால் ராஜபக்ஷே தம்மை கிண்டல் செய்து எதாவது சொல்லுவார் என்று பயந்தார்களோ என்னவோ? . 
by D தேவன் ,Chennai,India    16-11-2009 11:37:36 IST
 ஹலோ அருள்துமிலன், உங்களை எந்த பெண் கற்பழித்தார்.....நீங்கள் யார்?....எந்த பயல் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் நிறுவியது....என்ன மோட்டோ....
எல்லா ஆண்களையும் கேக்காமல் யார் உங்களை தலைவராக போட்டது... 
by ஒரு ஆண்,chennai,India    16-11-2009 10:44:54 IST
 அய்யா அருள் துமிலன் அவர்களே உங்களுக்கு வேற வேலையே இல்லையா ??ஏனையா இப்படி ஆண்களை கேவலப்படுத்துகிறீர்கள் ,,  
by k sathish,cbe,India    16-11-2009 08:40:19 IST
 உங்களை தவிர மற்றவர் எல்லாம் கருப்பு ஆடு தான் ,,,இதில் சந்தேகமே வேண்டாம் ,,தலைவர் காமராஜரின் பேர் வைக்க வில்லை என்று கொதித்து எழ வேண்டாமா ??ஏனையா இப்படி புலம்புகிறீர்கள் ??என்ன உபயோகம் ??வாயி சொல்லில் வீரரா இருந்து உபயோகமில்லை ,,செயல் வீரரா இருந்தால் தான் ஏதாவது நடக்கும் ,,தமிழக காங்கிரஸ் கட்சியிலே உங்களை போல் ஒரு தைரியமுள்ள ஆண் தலைவர் இல்லை ...உங்களால் தான் ஏதாவது நல்லது செய்ய முடியும் ,,செய்வீர்கள் என நம்புகிறோம் ...எத்தனை காலத்திற்குத்தான் அடுத்தவரை முதுகில் சுமப்பது ???நீங்களும் ஒரு நாள் அவர்கள் முதுகில் பயணம் செய்வதை நாங்கள் பார்க்க வேண்டாமா ???  
by k sathish,cbe,India    16-11-2009 08:34:05 IST
 அய்யா ராமதாஸ் அவர்களே, எத்தனை தடவை சொன்னாலும் உமக்கு புத்தியில் ஏறாது ?? தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் மக்கள் என கூறுவதை விட்டு ஏனையா அவர்களை இன்னும் அகதி ,அகதி ,என்று கேவலப்படுத்துகீர்கள்,,அவர்கள் நம் தமிழ் மக்களையா ,,நம் கூட பிறந்தவர்கள் ,,ஏதோ போதாத காலம் அவர்கள் நிலைமை இப்படி ,,,எப்படியோ தலைவருக்கு ஜால்ரா அடித்து விட்டீர் ,,கூடிய விரைவில் தூது வரும்,காலில் வந்து விழ ,,ஓடி போயி காலை கெட்டிய்யாக பிடித்து விடவேண்டும் ,, 
by k sathish,cbe,India    16-11-2009 08:20:39 IST
 அய்யா பொன் ராதகிருஷ்ணன் அவர்களே ஏனையா இந்த புத்தி உங்கள் எல்லா கட்சி தலைவர்களுக்கும் ,,முதல்வர் அழைத்தால் தான் போயி சேவை செய்யனுமா ???உங்களுக்கு என்று ஒரு சொந்த புத்தி இல்லையா ??மக்களுக்கு சேவை செய்ய மனசு தானைய்யா வேண்டும் ,,மக்களுடைய கஷ்ட காலத்திலே அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்தால் தானே தேர்தல் சமயத்தில் உங்கள் நினைச்சு பார்ப்பார்கள் ,,சமுக பணியில் ஈடு பட அழைப்பு வந்தால் தான் போகவேண்டுமா ??கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் நல்லது ...  
by k sathish,cbe,India    16-11-2009 08:09:19 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்