தன்பாத் : "ஜார்க்கண்டில் நக்சலைட்கள் பிரச்னை, மிக முக்கிய பிரச்னையாக உள்ளது' என, காங்., தலைவர் சோனியா கூறினார்.
ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் களை ஆதரித்து, நேற்று காங்., தலைவர் சோனியா பிரசாரம் செய்தார்.
தன்பாத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஜார்க்கண்டில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இருந்தாலும், நக்சலைட்கள் பிரச்னை தான் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. வன்முறையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. ஜார்க்கண்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டுமெனில், காங் கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும். ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு தொலைநோக்கு பார்வையுள்ள தலைவர்கள் தேவைப்படுகின்றனர். இவ்வாறு சோனியா பேசினார்.
இதற்கிடையே, ஜார்க்கண்டில் நடந்த ரயில் தண்டவாளம் தகர்ப்பு தொடர்பாக, மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது:மாவோயிஸ்ட்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்பது, ரயில் தண்டவாளம் தகர்ப்பு சம்பவம் மூலம் தெரிய வந்துள்ளது. ரயில் தண்டவாளம், மொபைல் போன் கோபுரம் போன்றவற்றை குறி வைத்து மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களிடம் இரக்கம் காட்டக்கூடாது. ரயில் தண்டவாளம் தகர்ப்பு சம்பவம் கோழைத்தனமானது. இவ்வாறு பிள்ளை கூறினார்.
| வாசகர் கருத்து |
சோனியா வன்முறையை விரும்பவில்லையா அப்படியானால் எங்கள் தமிழ் சொந்தங்களை கொல்வதற்கு இலங்கைக்கு உதவி செய்தது அஹிம்சையா இல்ல வன்முறையா சொல்லுங்கள் இத்தாலி பெண்மணியே
|
by Anant Tamilan,thoothukudi,India 21-11-2009 16:28:06 IST |
திருமதி.சோனியா அவர்களின் இந்த கண்டிப்பு மத்தியஅரசின் நடவடிக்கைகளில் தெரிந்தால் நாட்டிற்கு மிகவும் நல்லது. நாம் தான் தீவிரவாத விஷயத்தில் தீவிரமான நடவடிக்கைள் எடுத்தால் மனித உரிமைகளை மீறியவர்கள் ஆகிவிடுவோம்,என்று நினைக்கும் மத்திய அரசை பெற்றுள்ளோம். வாய் பேச்சில்தான் இவர்கள் நம்மை கண்டிப்பாங்க. இவங்க ரொம்ப நல்லவங்கனு தீவிரவாதிகள் இந்த அரசை மிக சரியாக புரிந்துள்ளனர். மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள் அல்ல என்ற வாதம் வேறு. இந்த அரசுதான் பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளில் ஒருவனான அப்சல் என்ற தீவிரவாதிக்கு கோர்ட் மரண தண்டனை விதித்த பின் இன்னும் அவனது கருணை மனுவினால் தண்டனையை நிறுத்திவைத்த அரசுதானே இது. தீவிரவாதிகளுக்கு கருணை காட்டுவது என்பதெல்லாம் இந்த நாட்டில் மட்டுமே நடக்கும். இதுதான் நம் அரசின் லட்சணம் .
|
by S Venkataraman,Chennai,Indonesia 21-11-2009 16:24:41 IST |