Advertisement
அரசியல் செய்திகள்
செஞ்சி கோதண்டராமர் கோவில் விவகாரம் அனைத்து கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுகோள்
மார்ச் 18,2010,00:00  IST

Latest indian and world political news information

செஞ்சி:செஞ்சிக்கோட்டை கோதண்டராமர் கோவிலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்என, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:செஞ்சி கோதண்டராமர் கோவிலை விலைக்கு வாங்கியதாக சொல்கின்றனர்.

இது, வெள்ளைக்காரன் விலைக்கு வாங்கியதை போல் உள்ளது.விலை போகும் அதிகாரிகளால், தவறான ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இது திட்டமிட்ட சதி வேலை. நாளைக்கு என்னுடைய பெயரில் எக்மோரை விலைக்கு வாங்கினேன் என்றால், அங்கு ரயில்கள் போக முடியாது என உரிமை கொண்டாட முடியாது.

அந்தக் கால மன்னர்கள் இடத்தை பிடித்ததை போல், இடம் பிடிக்கின்றனர். மத மாற்ற முயற்சிகளில் வெற்றி பெற முடியும் என்பது பகல் கனவு. அந்தந்த மத உரிமைகளில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.சர்ச், மசூதி இடங்களை விலை கொடுத்து வாங்கியது என்றால் ஏற்று கொள்வார்களா... செஞ்சி கோதண்டராமர் கோவில் கை விடப்பட்ட சொத்தா?

தமிழகத்தில் தி.மு.க., முதல் அனைத்து கட்சிகளும் கோதண்டராமர் கோவிலுக்காக உரிமை குரல் கொடுத்து நியாயம் கேட்க வேண்டும். அப்படி நியாயம் கேட்கவில்லை என்றாலும் பா.ஜ., பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.மதமாற்றங்களை அரசு தடுக்க வேண்டும். இப்பிரச்னையில் வெளிநாடு சதி உள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 All Mohammed, Riswan, Jacob, Antony should express their concern for this issue also. they cannot come and give their valuable comments only for Nitayananda case.... This is the time christians should think too much of Jesus. Oru Kannathil arainthal maru kannathaiyum kattu... That means sandaikku pogatheergal... Already one father has written his comment... by quoting from Bible... SATHYAMEVA JAYATHEY. 
by gs ganapathy,chennai,India    18-03-2010 13:41:23 IST
 பிஜேபி யின் இந்த முடிவு சரியானது எனது ஆதரவும் வாழ்த்துக்களும் எப்பொழுதும் உண்டு.  
by J ராஜா,Nellai,India    18-03-2010 09:23:37 IST
 All parties/people should support bjp on this. 
by சRINIVAS,njusa,India    18-03-2010 00:23:27 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்