Advertisement
அரசியல் செய்திகள்
ஒகேனக்கல் பிரச்னைக்கு 4 நாட்களில் பேச்சு:கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு
மார்ச் 22,2010,00:00  IST

Latest indian and world political news information

பெங்களூரு:''ஒகேனக்கல் தொடர்பான பிரச்னைக்கு, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் இடையே இன்னும் நான்கு நாட்களில் பேச்சு வார்த்தை நடக்க உள்ளது,'' என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது:ஒகேனக்கல் பிரச்னை தொடர்பாக, கர்நாடக தலைமைச் செயலர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழு, இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில், தமிழகத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தவுள்ளது.

 

இரு தரப்பிற்கும் இடையே நடக்கும் பேச்சு வார்த்தையில், சுமூக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.கர்நாடக சட்டசபையில் பசு வதை தடுப்புச் சட்டம் நிறைவேறியதற்கு, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்து, சிறுபான்மையின மக்களை தூண்டும் வகையில் உள்ளது. அவரது இந்த கருத்துகளால், எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ஹொகனேக்கல் ப்ராஜெக்ட் தமிழ் நாட்டின் ப்ராஜெக்ட். கர்நாடகா இது பற்றி அக்கறை எடுப்பதோ , தடுக்க முயற்சி செய்வதோ மிக பெரிய தவறு. தமிழக முதல்வர் எக்காரணம் கொண்டும் கர்நாடகாவின் எதிர்ப்புக்கு செவி சாய்க்க கூடாது. 
by S Tamilarasan,Trichy,India    22-03-2010 22:10:43 IST
 Why we should talk with karnataka govt for constructing a ogenakal project. This is ridiculus. Whether Kerala , Andhra and Karnataka state govts consultated with us before constructing any dams. MK please dont think abt only your family benefit ( Sun Network at Andhra, Kerala, and Karantaka). you always cheating tamils for the sake of your family welfare and assets. 
by u suresh,us,India    22-03-2010 14:45:02 IST
 இவர்கள் சட்டசபை கட்டிடம் கட்ட எடுத்த முயற்சியில் ஒரு பங்கையாவுது ஒகேனக்கல் குடி நீர் திட்டம் நிறைவேற எடுத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அதை விட்டு பொது மக்கள் யாருக்கும் தேவை படாத கட்டடம் எதற்கு!!!! ஒரு உதாரணம்: ஒரு கல்லூரி இருக்கிறது. அதில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ஆனால் முதல்வர் அறை நன்றாக புதியதாக கட்டப்படுகிறது. கல்லூரி எப்படி இருக்கிறது என்று கேட்டால் முதல்வர் அறையை காட்டுவார்கள். அந்த அறையை மற்றவர்கள் வந்து திறந்து வைப்பார்கள். அதற்கு விழா எடுப்பார்கள். அந்த அறையை பார்த்து உங்கள் கல்லூரி மிக நன்றாக உள்ளது என்று சொல்வார்கள். ஆனால் நமக்கு தான் தெரியும் உள்ள என்ன இருக்கிறது என்று ??? எல்லா அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துவிட்டு கட்டடம் , அறை எல்லாம் கட்டி கொள்ளலாம். உடம்புக்கு சாப்பாடு இல்லை. ஆனால் தலை முடிக்கு அலங்காரம் தேவையா????  
by M ஸ்ரீதர் ,TamilNadu,India    22-03-2010 07:38:27 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்