Advertisement
அரசியல் செய்திகள்
ஆட்சியை பிடிக்க இளங்கோவன் ஆசை:ஸ்டாலின் முன்னிலையில் ஆதங்கம்
மார்ச் 22,2010,00:00  IST

Latest indian and world political news information

சென்னை:''காங்கிரஸ், 67ல் விட்ட ஆட்சியை, குமரி அனந்தன் தனது 77 வயதில் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் 77வது பிறந்த தினவிழா, சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு மணிமண்டபம் கட்ட, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் விழா, குமரி அனந்தன் எழுதிய 18 புத்தகங்கள் வெளியீட்டு விழா என, முப்பெரும் விழா சென்னையில் நேற்று நடந்தது.விழாவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின், விழாவில் கலந்து கொண்டு குமரி அனந்தன் நூல்களை வெளியிட்டார்.

 

அப்போது அவர் பேசியதாவது:குமரி அனந்தன் எம்.பி.,யாக பணியாற்றிய போது தமிழில் கேள்வி கேட்கும் உரிமையை பெற்றுத் தந்தார். மணியார்டர் படிவம், காசோலை ஆகியவற்றில் தமிழை இடம் பெற வைத்தவர். டில்லியில் உள்ள ஒரு சாலைக்கு காமராஜர் பெயரை சூட்ட காரணமாக இருந்தவர்.அவர் எழுதிய நூல் பல்கலைக் கழகத்தில் பாடமாக உள்ளது. இளைஞர் களுக்கு அவர் தொடர்ந்து வழிகாட்ட வேண்டும். 'எனக்கு பிறந்த நாள் கொண்டாடுவதை விட சுப்பிரமணிய சிவாவிற்கு மணிமண்டபம் கட்டுவதற்கு 40 லட்சம் ரூபாய் ஒதுக்கியதே எனக்கு மிகப் பெருமையாக உள்ளது' என, என்னிடம் குமரி அனந்தன் கூறினார்.தமிழுக்கும், இளைஞர்களுக்கும் அவரது தொண்டு தொடர வேண்டும். என்னைப் போன்ற இளைஞர்களுக்கு தொடர்ந்து அவர் வழி காட்ட வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:பொதுவாக 25, 55, 65, 75வது பிறந்த நாளை கொண்டாடுவதுண்டு. குமரி அனந்தன் 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறாரே என, யோசித்தேன். அதாவது 67ல் விட்ட காங்கிரஸ் ஆட்சியை 77ல் பிடித்து விட வேண்டும் என நினைத்து தான் இந்த விழாவை கொண்டாடுகிறார் போலும்.காமராஜர் காலத்தில் திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, குமரி அனந்தன் போன்றவர்கள் அதில் இடம் பெற்றிருந்தனர்.ராகுல் தமிழகத்தில் விஜயம் செய்த பின், பெரும்பாலான இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைகின்றனர். மொழி மீது யாருக்கும் வெறி இருக்கக் கூடாது.

 

ஆங்கிலத்தில் பேசினால் அதுவும் ஒரு ஓசை. காபி என்பதை கொட்டை வடிநீர் என்று மொழி பெயர்ப்பது தேவையற்றது. அதற்காக நான் தமிழ் மொழி மீது பற்று இல்லாதவன் அல்ல. மொழியை மட்டும் பிடித்துக் கொண்டு பேசக் கூடாது. இளைய சமுதாயம் அடுத்த தலைமுறையில் முன்னேறுவதை பற்றி சிந்திக்க வேண்டும்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன், கிருஷ்ணசாமி எம்.பி., சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், வசந்தகுமார் எம்.எல்.ஏ., மற்றும் எஸ்.பாஸ்கர், எம்.ஜி.ராமசாமி, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 பக்தவத்சலம் ஆட்சியை விட்டு இறங்கி வெள்ளி விழா 1992 ம் ஆண்டு கொண்டாடி விட்டீர்கள். 2017 ம ஆண்டு பொன்விழா கொண்டாட வேண்டாமா அதற்குள் அவசரப்பட்டால் எப்படி ?  
by B Ram,NewYork,UnitedStates    22-03-2010 22:18:12 IST
 குமரி ஆனந்தன் அவர்களின் 77வது வயதில் என்கிறார் இளங்கோவன், பாவம் அவர், தமிழ் நாட்டில் இளங்கோவன் அவர்களின் 77வது வயதில் கூட அல்ல இன்னும் 77 ஆண்டுகள் ஆனால் கூட தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாது, அவருடைய தாதா தந்தை பெரியார் போட்ட விதை அப்படி பட்டது. 
by s thiagu,chennai,India    22-03-2010 21:59:24 IST
 இவங்க விழா கொண்டாடுற காசு எல்லாம் எங்க இருந்து வருது. எல்லாம் நம்ம வரி பணத்த தான் கொள்ளை அடிச்சு கொண்டாடுறாங்க... அந்த பணத்த வச்சு ஏதாவது ஒரு கிராமத்த தத்து எடுத்து பல நல்ல உதவிகள செய்யலாம்ல... அதயெல்லாம் செய்ய மாட்டாங்க... எங்கடா காசு எங்கடா பதவி எவன கவுக்கலாம் ன்னு தான் இருப்பாங்க... சே என்ன உலகமடா. இவங்கள திருத்தவே முடியாதா?.......... வாழ்க தமிழ்நாடு  
by V ஸ்டீபன் ராஜ்குமார்,Muscat,Oman    22-03-2010 18:16:38 IST
 25, 55, 65, 75வது பிறந்த நாளை கொண்டாடுவதுண்டு, என்ன சார் புதுசா ரீல் ஓட்றீங்க, அறுபது, என்பது கொண்டாடுவதை பார்த்திருகிரோம், புதுசா இப்படி. மைக் கெடச்சிட்டு நாலு பேர் கேக்க நின்னுட்டா போதுமே, உடனே ஒங்களுக்கு ஏறிடுமே .முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை படலாமா? ரெண்டு காலிள்ளாதாவன் நடனம் ஆட முடியுமா. 
by k thiru,chennai,India    22-03-2010 16:00:15 IST
 திருவள்ளுவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தமிழினம் தனது நிலப்பரப்பில் பெரும்பான்மையை இழந்த வரலாற்று உண்மையையும், பிற மொழிச் சொற்களை கலந்து எழுதும் மணிப்பிரவாள நடையைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளது மிகவும் அருமை. ஆனால், இன்றையத் தமிழினத்தின் பெரும்பான்மை இவ்வுண்மைகளை அறியாமலிருப்பது மிகப் பெரிய ஒரு குறை. நாம் இதனை சரி செய்திடல் வேண்டும். அத்துடன், மொழி என்பது வெறும் ஓசை அல்ல, அது ஓர் இனத்தின் அடையாளம் என்பதைக் குறிப்பிட்டதும் மிக அருமை. மொழிப்பற்றும், மொழி வெறியும் வெவ்வேறானவை என்பதை நாம் உணர்ந்தேயிருக்கிறோம்.  
by பா. இராமமூர்த்தி,புதுதில்லி,India    22-03-2010 15:16:13 IST
 ஐ . நா. சபைக்கு வருபவர்கள் எல்லாம் ஆங்கிலமோ ஹிந்தியோ தெரிந்து வருவதில்லை ! எல்லா மொழியிலும் பேசுவதற்கு அங்கு உரிமை உண்டு.தாய் நாட்டில் தான் இந்த சித்திரவதை எல்லாம். ஹிந்தியை வைத்துக்கொண்டு நமது எல்லையை தாண்டினால் எங்கும் உபயோகிக்க முடியாது! இதற்கு பீத்தல் வேறு! ஏன் சாதாரண கூலி வேலைக்கு வெளிநாட்டிற்கு என்ன ஆங்கிலமும் ஹிந்தியும் தெரிந்த பின்பு தானா போகிறார்கள் ! எல்லா இடத்திலும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஏன் தமிழில் பேச அனுமதிக்க வேண்டியது தானே லோக்சபாவில்!  
by R Sellva,coimbatore,India    22-03-2010 14:55:26 IST
 நல்ல காமடி. சூரியனை எந்தக்காலத்திலும் கை மறைக்க முடியாது. பகல் கனவு காண்கிறார் இளங்கோவன்.  
by Mr lalubab,Madurai,India    22-03-2010 14:43:50 IST
 good spech mr.evks..welcome 
by d.p.s samy,al-hoffuf,SaudiArabia    22-03-2010 13:38:48 IST
 அய்யா கோவன் அவர்களே, தமிழ் தாயிடம் இருந்து தமிழ் பாலை குடித்தவன் எவனும் வெறியனாக முடியாது என்பது தமிழ் உணர்த்தும் அறிவியல் உண்மை. பாசத்திற்கும் அன்பிற்கும் உலகஅளவில் பேர்போன தமிழர் எவரும் இதுநாள் வரை அரசியல்வாதியாய் இங்கு இருந்ததில்லை. சிந்தித்து பாருங்கள் தாங்கள் யார், இங்கு ஆள்பவர் யார்ரென்று... 
by J Moorthy,Sapporo,Japan    22-03-2010 13:30:05 IST
 The only congressmen in TN who speaks openly & boldly is EVKS rest of al are pupput of Karunanidhi. Well done EVKS. God bless you. 
by A Kutthus,kuwait,India    22-03-2010 13:13:15 IST
 67ல் விட்ட காங்கிரஸ் ஆட்சியை 77ல் பிடித்து விட வேண்டும் என நினைத்து தான் குமரி அனந்தன் இந்த விழாவை கொண்டாடுகிறார் என்று இளங்கோவன் பேசியது எந்த 77 ஐ ? இப்போது இருந்தே காங்கிரஸ் முயற்சி செய்தால் தான் இரண்டாயிரத்து எழுபத்து ஏழில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க இயலும். உண்மை நிலை இது தான். காமராஜரை மறந்து அவர் கொள்கைகளை காற்றோடு காற்றாக பறக்க விட்டு விட்டு, ஏழைகளின் கல்விக்காக பாடுபடுவதை விட்டு விட்டு கல்வியை வியாபார பொருளாக்கி ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒவ்வொரு கல்லூரியை தனக்கு என வைத்து கொண்டு பணத்தால் பையை நிரப்புவதையே கவனிக்கின்ற போது காங்கிரஸ் கட்சி எங்கே ஆட்சி அமைக்க முடியும்? 
by Dr.R. ரவீந்திரநாத் நேரு Ph.D.,VilathikulamPudur,India    22-03-2010 12:42:49 IST
 அருமை திருவள்ளுவன் ... 
by J வல்லவன்,Chennai,India    22-03-2010 11:45:10 IST
 அய்யா இளங்கோவன் அவர்களே கனவு கானுங்கள். அது உங்கள் உரிமை. ஆட்சியை பிடிப்பது என்பது கொஞ்சம் ஓவர். 
by m raj,துபாய்,India    22-03-2010 11:05:42 IST
 tamil people against man evks not to speak language he is telugu man. 
by govind,chennai,India    22-03-2010 08:58:29 IST
 தமிழக காங்கிரஸில் அன்றிலிருந்து இன்று வரை தைரியமாக பேசும் இளங்கோவனுக்கு எனது வாழ்த்துக்கள்.  
by K வெங்கடேஷ்,Chennai,India    22-03-2010 08:26:45 IST
 வெள்ளை வேஷ்டி கட்டிகொண்டு நாளைய சமுதாயத்தை சிந்திக்கும் இளங்கோவன் அவர்கள் தமிழுக்கு ஆற்றும் தொண்டு வாழ்க. ஈரோட்டில் பிறந்து லண்டன் சென்றவன் தமிழை மறக்காமல் சங்கம் வைத்து போற்றுகிறான். இதை புரிந்து கொண்டால் சரி .  
by s. செ .கோபு ,mysore,India    22-03-2010 08:09:39 IST
 இளங்கோவன் கலக்கல் பேச்சு. மொழி மொழி என்று ஊரை ஏமாற்றும் கும்பல் திருந்த வேண்டும். திருவள்ளுவன் என்று பெயர் வைப்பாதாலேயே பிறருக்கு தமிழ் பற்றி பேச தகுதி இருக்கிறதா இல்லையா என சொல்லும் தகுதி வந்துவிடும் போல. எங்க இருந்து தான் கிளம்புகிறார்களோ? 
by M தமிழன்,Chennai,India    22-03-2010 07:50:57 IST
 கோவன் தமிழைப்பற்றிப் பேசத் தகுதியற்றவர். காப்பி என்பதைக் கொட்டை வடிநீர் என்று இப்பொழுது யாரும் சொல்வது இல்லை. கன்றின் குளம்படி போல் உள்ளதால் காஃபி எனப் பெயர் பெற்றது. எனவே, குளம்பி என்றனர். ஆனால் சிலர் குழம்பி விட்டனர். காழ்நீர் என்பதன் சுருக்கமாகக் காநீர் என்று சொல்லலாம். அல்லது அறிஞர்கள் ஒன்று கூடி எளிய சொல்லை உருவாக்கலாம். ஆனால் இதைக் கூறி மொழியை வெறும் ஓசை என்பது போல் கூறுவது அறியாமை. அயல்மொழி ஓசைகளுக்கு இடம் கொடுத்ததால்தான் இந்தியக் கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் வழங்கிய தமிழ் வெவ்வேறு மொழிகளாக மாறித் தன்னுடைய நிலப்பரப்பை இழந்தது. எனவே, பிற மொழி கலக்காமல் பேசவும் எழுதவும் வேண்டும். இதற்கான பரப்புரையைத் தினமலரும் மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டததைத் தாய்நிலமாம் தமிழ் நாட்டுடன் இணைக்கப் போராடிய தலைவரால் உருவாக்கப்பட்ட தினமலர் பிறமொழிக் கலப்பின்றி எழுதி மக்களையும் அந்த வழியில் ஈர்க்க வேண்டும். ஒழுக்கக் கேட்டிற்கு எதிராகத்துணிந்து குரல் கொடுக்கும் தினமலர் மொழிக்கேட்டிற்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்.  
by I. Thiruvalluvan,chennai,India    22-03-2010 04:10:07 IST
 வாழ்த்துகள் இளங்கோவன் அவர்களே. தமிழகத்தில் இனி மொழி வெறி இருக்காது. ஏன் என்றால் தமிழ் தமிழ் என்று சொன்னவர்கள் இன்று மாற்று மொழி தெரியாமல் பாராளுமன்றத்தில் பேசு முடியாமல் தவிக்கின்றனர்.  
by k மொக்கசாமி,maldives,Maldives    22-03-2010 02:30:29 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்