Advertisement
அரசியல் செய்திகள்
வாழ்வுரிமை விருது பெற்ற தம்பதிக்கு கருணாநிதி பாராட்டு
அக்டோபர் 04,2008,00:00  IST

சென்னை: நோபல் பரிசுக்கு இணையாக, சுவீடன் நாடு வழங்கும் "வாழ்வுரிமை விருது' பெறும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் - சங்கரலிங்கம் ஜெகநாதன் தம்பதியருக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: ஏழை ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்து பல்கலைக்கழகம் வரை படித்து, காந்தியடிகளின் சர்வோதய இயக்கத்தில் ஈடுபட்டவர் கிருஷ்ணம்மாள். ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து, கல்லூரிப் படிப்பைக் கைவிட்டு முழுநேர காந்தியத் தொண்டராகத் திகழ்ந்தவர் சங்கரலிங்கம் ஜெகநாதன். தொண்டால் இணைந்த இந்த இருவரும் நாடு சுதந்திரம் பெற்ற பின் தான் திருமணம் என முடிவு செய்து, அதன்படி 1950ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். 1953ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை இருவரும் வினோபா பாவேயின் பூதான இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டு சிறப்பான பங்காற்றியுள்ளனர். கீழவெண்மணி சம்பவத்துக்குப் பின் அங்கு வாழ்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்பு மனை கிடைக்காத நிலையில், சங்கரலிங்கம் ஜெகநாதன் திருவாரூரில் உண்ணாவிரதம் இருந்தார். தனியார் ஆதிக்கத்தில் இருந்த வலிவலம் கோவில் நிலம் ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டுமென்பதற்காக அங்கும் அவர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து, அப்பிரச்னையில் அவர்களுக்கு அரசு உதவியது.



ஏழைகளுக்காகவே பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த தம்பதியரின் தியாகத் தொண்டுகளைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் ஏற்கனவே பரிசுகளையும், விருதுகளையும் வழங்கியுள்ள நிலையில், தற்போது சுவீடன் நாடு நோபல் பரிசுக்கு இணையான "வாழ்வுரிமை விருதை' இவர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த மக்களுக்காக 60 ஆண்டுகளாகத் தொண்டாற்றி விருது பெற்றுப் புகழ் குவித்துள்ள கிருஷ்ணம்மாள்- சங்கரலிங்கம் தம்பதியருக்கு தமிழக அரசின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள். இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 Kudos to this couple. Keep your humanitarian services going. The present day politicians at all levels should learn from this couple selfless service.  
by arunnsubramanian,,Hong Kong    04-10-2008 09:48:51 IST
 Well done! Keep it up.

ilangkumaran
Qatar 
by Ilangkumaran,,Qatar    04-10-2008 01:02:51 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்