E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அரசியல் செய்திகள்
கொங்கு பேரவை மாநாட்டில் அரசியல் பிரவேசம் அறிவிப்பு
பிப்ரவரி 15,2009,00:00  IST

Latest indian and world political news information

கோவை : கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் இன்று நடக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை எழுச்சி மாநாட்டில், அரசியல் பிரகடனத்தை அறிவிக்கின்றனர். கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளிலும், கேரளாவில் கொழிஞ்சாம்பாறையிலும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வசிக்கின்றனர்.



தமிழகத்தில் மட்டும் 1.5 கோடி கொங்கு இன மக்கள் வசிக்கின்றனர்.கவுண்டர் இன மக்களுக்காகவும், கொங்கு நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையை, செழியன் துவக்கினார். கொங்கு வேளாளக் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த பலரும், பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளனர்; பலர் முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர்.ஆனால், அத்தகையவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் மேலிடம் கூறும் கட்டளைக்கேற்ப செயல்படுகின்றனர்; கொங்கு இன மக்களுக்காக, அவர்களின் நலனுக்காக எந்தப் பணியையும் செய்வதில்லை என்ற மனக் குமுறல் கொங்கு பேரவையினரிடம் உள்ளது.



இதன் வெளிப்பாடாகவே அரசியல் எழுச்சி என்ற கோஷம் எழுந்துள்ளது. இதையடுத்து, பல்வேறு பிரிவாகப் பிரிந்து சென்ற கொங்கு மக்களை ஓரணியில் சேர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.கொங்கு பேரவையின் மாநிலத் தலைவர் "பெஸ்ட்' ராமசாமி, பொதுச் செயலர் ஈஸ்வரன் ஆகியோர் பேரவை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தனர். இன்று அரசியல் எழுச்சி மாநாடு, நடத்துவதென இறுதி முடிவெடுக்கப்பட்டது.



மாநிலத் தலைவர் "பெஸ்ட்' ராமசாமியும், பொதுச் செயலர் ஈஸ்வரனும் இணைந்து கிராமம் கிராமமாக, வீதி வீதியாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டனர். இன்று நடக்கும் எழுச்சி மாநாட்டில் அரசியல் பிரவேசத்தை அறிவிக்கின்றனர். கொங்கு பேரவை சார்ந்த கட்சியின் பெயரை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.



மேலும், விவசாயிகள் சார்ந்த கட்சியாக அமையும் என்று கூறியுள்ளனர். முதல்கட்டமாக, வரும் லோக்சபாத் தேர்தலில் 12 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்; வேட்பாளர்களையும் தேர்வு செய்துள்ளனர்; அவர்களை, எழுச்சி மாநாட்டு மேடையிலேயே அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.



கொங்கு பேரவை மாநாடு இணையத்தில் ஒளிபரப்பு :கோவை : இன்று கோவை, கருமத்தம்பட்டியில் நடக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் அரசியல் எழுச்சி மாநாடு நிகழ்ச்சிகள், இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. www.kongulive.com என்ற இணையதள முகவரியில் இன்று காலை 10.00 மணி முதல் மாநாட்டு காட்சிகளை தொடர்ந்து காணலாம். இத்தகவலை மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்