| E-paper

 
Advertisement
தினமலர் முதல் பக்கம் » புதுச்சேரி செய்திகள்
புதுச்சேரி: புதுச்சேரியின் சுல்தான் பேட்டையில் மாமூல் தர மறுத்த டீக்கடை உரிமையாளர் பாதின் என்பவர் மீது வெங்கடேஷ் என்ற ரவுடி பெட்ரோல் குண்டு வீசினார். இதில் படுகாயமடைந்த பாதின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் வெங்கடேசை பிடித்து போலீசாரிடம் [...]
புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் மாசிமக தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொள்ள வரும் சுவாமிகளுக்கு, சாரத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
வைத்திக்குப்பம் கடற்கரையில், வரும் 5ம் தேதியன்று, மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள செஞ்சி ரங்கநாதர், மயிலம் சுப்ரமணிய சுவாமிகள், 4ம் [...]
புதுச்சேரி: புதுச்சேரி வந்த பிரான்ஸ் துாதர், முதல்வர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார்.
இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டின் துாதர் பிரான்சுவா ரிஷியே, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதுச்சேரிக்கு வந்துள்ளார். அவர், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலுவை, அவரது [...]
புதுச்சேரி: 'மத்திய பட்ஜெட், அனைத்து தரப்பினரை யும் திருப்திப்படுத்தும் பட்ஜெட்' என, ராதாகிருஷ்ணன் எம்.பி., கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி, மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வேலை [...]
புதுச்சேரி: 'சிறப்பான பட்ஜெட்டை, மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது' என, பா.ஜ., கருத்து தெரிவித்துள்ளது.
மாநில பா.ஜ., துணை தலைவர் தங்க விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், அனைத்து தரப்பு மக்கள் நலனையும் உள்ளடக்கிய, [...]
புதுச்சேரி: ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்காக, நியூசிலாந்து ஓட்டோகோ பல்கலைக்கழகத்துடன், ஜிப்மர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நீரழிவு நோயை ஸ்டெம் செல் கொண்டு குணப்படுத்துதல், யோகா மூலம் ரத்தம் அழுத்தம் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட ஆராய்ச்சிகள் [...]
பாகூர்: கல்வி மற்றும் மின்துறை அமைச்சர் தியாகராஜன் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
முன்னதாக, மணக்குள விநாயகர் கோவில், கன்னியக்கோயில் பச்சைவாழியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பாகூர் முத்துமாரியம்மன், பூலோக மாரியம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். [...]
புதுச்சேரி: பள்ளி ஆண்டு விழாவில், குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. எல்லப்பிள்ளைச்சாவடி, கம்பன் நகர், முருங்கம்பாக்கம் பகுதிகளில் இயங்கி வருகின்ற, பர்ஸ்ட் ஸ்டெப் கிண்டர்கார்டன், ஜாய்கிட்ஸ், லவ்லி லாரட்ஸ் பள்ளியின் 7-வது ஆண்டு விழா, நெல்லித்தோப்பு கீர்த்தி மகாலில் நேற்று நடந்தது. பள்ளி [...]
புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை நேற்று நள்ளிரவு உயர்த்தப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி பங்குகளில் நேற்று நள்ளிரவில் இருந்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது. 56.92 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் 60.13 ரூபாய்க்கும், 48.92 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல் 52.12 [...]
புதுச்சேரி: 'ரயில்வே பட்ஜெட்டில், புதுச்சேரி மாநிலம் புறக்க ணிக்கப்பட்டுள்ளது' என, பா.ம.க., கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில பா.ம.க., செயலாளர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட்டில், புதுச்சேரி மாநிலம் முற்றிலும் [...]
புதுச்சேரி: கோடைக் காலத்தில் வரும் சருமநோய்கள் குறித்து, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு, அரசு பொதுமருத்துவமனையில் நேற்று நடந்தது.
டாக்டர் சிவராமன், கோடைக் காலத்தில் வரும் சருமநோய்கள் குறித்தும், அதை தடுப்பதற்கான வழிகள் குறித்து பேசினார்.முன்னதாக, திட்ட [...]
புதுச்சேரி; தமிழ்ச் சங்கத்தில் வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உழவர்கரை நகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய வீட்டு வரி, சொத்துவரியை செலுத்துவதற்கு வசதியாக, வெங்கட்டா நகர், தமிழ்ச் [...]
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், 'ஆராய்ச்சி முறைகளும், நுணுக்கங்களும்' என்ற தலைப்பில், இரண்டு நாள் தேசிய பயிற்சி பட்டறை நடந்தது. பொருளாதாரத் துறை சார்பில் நடந்த துவக்க விழாவில், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முத்தையன் நோக்கவுரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் பன்னீர்செல்வம், [...]
புதுச்சேரி: சர்வதேச நகரமான ஆரோவில் உதய நாளையொட்டி, அங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், 'போன் பயர்' ஏற்றி நேற்று கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில், மனிதகுல ஒருமைப்பாட்டை லட்சியமாகக் கொண்ட ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. [...]
காரைக்கால்: காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேனிலைப் பள்ளியில், பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புண ர்வு முகாம் நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் சல்மா ரஹ்மான் தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் பணியாற்றும் காந்தி, மூத்த [...]
புதுச்சேரி; சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில், தேடப்பட்டு வந்த டிஸ்மிஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் நேற்று சரணடைந்தனர்.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் விபசார கும்பலிடம் இருந்து தப்பிய 2 சிறுமிகள் அளித்த தகவலின்பேரில், விபசார கும்பல் கைது செய்யப்பட்டது. சிறுமிகளை, சில [...]
புதுச்சேரி: யுனிசிஸ் நிறுவனம் நடத்திய மென்பொருள் போட்டியில், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி நான்காம் இடம் பிடித்தது.
யுனிசிஸ் பன்னாட்டு நிறுவனம், 'கிளவுட் 20-20' எனும் பெயரில் மென்பொருள் போட்டியை நடத்தியது. இதில், இந்தியா முழுவதிலிருந்து 1500 மாணவர் குழுக்கள் பதிவு செய்தன. பல [...]
புதுச்சேரி: 'தொழில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது' என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி கிளை யின், ஆண்டு சந்திப்பு கூட்டம், ஓட்டல் அக்கார் டில் நேற்று நடந்தது. கூட்டமைப்பு சேர்மன் சயித் சஜத் அலி வரவேற்றார். விழாவில், [...]
புதுச்சேரி: ''இந்தியாவை வலிமைமிக்க நாடாக உருவாக்கும் எண்ணத்தோடு, மத்திய அரசின் பட்ஜெட் கொடுக்கப்பட்டுள்ளது'' என, முதல்வர் ரங்கசாமி கூறினார்.
அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மிகவும் பாராட்டுக்குரியது. குறிப்பாக, உள்கட்டமைப்பை [...]
திருக்கனுார்: செல்லிப்பட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த மக்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தை, இரண்டு மாதங்களுக்கு முன், கண்ணன் எம்.பி., தத்தெடுத்தார். இதை முன்னிட்டு, அக்கிராமத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த பொதுமக்கள் கலந்தாய்வு [...]
 
Advertisement