டீ கடை பெஞ்ச் | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

விடைத்தாள்களை எடைக்கு விற்க முயன்ற பல்கலை அதிகாரி!

பதிவு செய்த நாள் : அக் 16, 2018
Advertisement
 விடைத்தாள்களை எடைக்கு விற்க முயன்ற பல்கலை அதிகாரி!

''மாநில தலைவரை மாத்தணும்னு, 'பெட்டிஷன்' குடுத்திருக்காங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.''காங்கிரஸ் விவகாரமாங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''ஆமா... தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத், சமீபத்துல, தென்மாவட்டங்கள்ல, சுற்றுப்பயணம் போனார்... மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளை, மதுரைக்கு அழைச்சு, லோக்சபா தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்த, ஆலோசனை குடுத்தாரு பா... ''இந்த மாவட்டங்கள்ல, திருநாவுக்கரசர், இளங்கோவன், சிதம்பரம், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், எந்த கோஷ்டியையும் சேராதவங்கன்னு, ஆறு கோஷ்டிகள் இருக்கு... ''எல்லாருமே கூட்டத்துல ஆஜரானாங்க... இதுல, இளங்கோவன் கோஷ்டி, 'மாநில தலைவரான அரசரை மாத்திட்டு, இளங்கோவனை நியமிச்சு, தேர்தலை சந்திக்கணும்'னு சஞ்சய்தத்கிட்ட மனு குடுத்துட்டு, கமுக்கமா கிளம்பி போயிடுச்சு பா...'' என்றார் அன்வர்பாய்.''கோடிக்கணக்குல வசூல் நடக்குதுங்ணா...'' என, களத்தில் குதித்த கோவாலுவே தொடர்ந்தார்... ''சேலம் மாவட்டத் துல, 316 சத்துணவு அமைப்பாளர், 785 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியா கெடக்கு... அந்தந்த ஒன்றிய அலுவலகங்கள் மூலமா, விண்ணப்பங்கள் வாங்கிட்டு இருக்காங்ணா...''ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய செயலர்கள் பரிந்துரை செய்றவங்களுக்கு தான் வேலைங்கிறதால, அவங்க வீட்டுக்கு, ஒட்டுக்கா நிறைய பேர் படையெடுத்துட்டு இருக்காங்க... ''போட்டி அதிகமாயிட்டதால, அவங்களும், ரேட்டை ஏத்திப்புட்டாங்க... சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு, 3ல இருந்து, 5 லட்சம் ரூபாய் வரைக்கும், உதவியாளர் பணிக்கு, 2 லட்சம் ரூபாயும் பேரம் பேசுறாங்ணா...'' என்றார் கோவாலு.உடனே அண்ணாச்சி, ''கோவை வேளாண் பல்கலை துணைவேந்தரின் பதவிக்காலம், நவ., 14ம் தேதி முடிவுக்கு வருது... புது துணைவேந்தருக்கு, மூணு பேரை, கவர்னருக்கு பரிந்துரை பண்ணியிருக்காவ வே...'' என முன்னுரை தந்து, தொடர்ந்தார்... ''அதுல ஒருத்தர், வேளாண் பொறியியல் படிச்சிருக்கிறதால, சட்டவிதிகளின் படி அவரை நியமிக்க முடியாதுங்காவ... மத்த ரெண்டு பேர்ல ஒருத்தர், நேர்மையானவரு... அதோட, மாநிலத்துல உயர் பதவியில இருக்கிற பெண்மணிக்கு வேண்டியவர்... அதனால, இவரை நியமிக்க, உயர் அதிகாரி முயற்சி எடுக்காங்க வே... ''இன்னொருத்தர், கொங்கு வட்டாரத்தை சேர்ந்தவர்... அமைச்சரவையில கோலோச்சுறவங்க, இவரை கொண்டு வர முயற்சி பண்ணுதாவ... ''ஆனா, இவர் மேல, ஏகப்பட்ட ஊழல், முறைகேடு புகார் இருக்காம்... 'இந்த ரேஸ்ல யார் ஜெயிப்பா'ன்னு, பல்கலை வட்டாரத்துல பட்டிமன்றமே நடத்திட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.''என்கிட்டயும் ஒரு பல்கலை மேட்டர் இருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.''சீக்கிரம் சொல்லும்... பசிக்கி... வீட்டுக்கு போவணும்...'' என்றார் அண்ணாச்சி.''காரைக்குடி அழகப்பா பல்கலையில, சமீபத்துல, ராத்திரி நேரம், லாரிகள்ல பேப்பர் லோடு ஏத்திண்டு இருந்தா... விசாரிச்சதுல, தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருத்தர், பழைய விடைத்தாள்களை எடைக்கு போட இருந்தது தெரிஞ்சது ஓய்... ''பல்கலையின் எந்த பேப்பரா இருந்தாலும், தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு, முறைப்படி டெண்டர் விட்டு தான் குடுக்கணும்... லாரியில ஏத்தினதுல, 25 சதவீதம் எழுதாத பேப்பர்களும் இருந்திருக்கு ஓய்...''எழுதாத விடைத்தாள்களை எதுக்கு வெளியில எடுத்துண்டு போகணும்... அண்ணா பல்கலையில நடந்தது மாதிரி, விடைத்தாள் மோசடிக்கு முயற்சி நடந்துச்சான்னு விசாரணை நடக்கறது... இப்ப, தேர்வு அதிகாரியை, அந்த பொறுப்புல விடுவிச்சிட்டு, வேற ஒருத்தரை போட்டிருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.''சக்திவேல் வரார்... பழைய பாக்கியை கேட்டு வாங்கும் நாயர்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் நடையை கட்டினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X