
- வைரம் ராஜகோபால்
ஞானானந்தம்
ஒருவனுடைய நன்னடத்தை, நல்ல சுபாவம் இவைகளைக் கொண்டே அவன் நல்ல குலத்திலும், குடும்பத்திலும் பிறந்தவன் என்பதை அறிந்து கொள்ளலாம். எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான்; "அவரை போட்டால், துவரை முளைக்குமா?' என்பர்.
ஒரு குருட்டுப் பிச்சைக்காரனை ராஜாவின் முன் கொண்டு வந்து நிறுத்தினர் சேவகர்கள். பிச்சை எடுப்பது குற்றம் என்பது அங்கே சட்டம். அவனை விசாரித்த ராஜா, "உனக்கு என்ன தெரியும்?' என்று கேட்டான். "எனக்கு மாணிக்க கல்லை பரிசோதிக்கத் தெரியும்; குதிரைகளை பரிசோதித்து, நல்ல ஜாதிக் குதிரைதானா என்று சொல்ல முடியும்; மனிதர்களின் தன்மையை அறிந்து, அவர்கள் நல்ல குலத்தைச் சேர்ந்தவர்களா என்பதையும் சொல்ல முடியும்!' என்றான் பிச்சைக்காரன்.
"சரி! இவனுக்கு தினமும் ஒரு பட்டை சோறு கொடுத்து, சிறையில் வையுங்கள்!' என்று உத்தரவிட்டான் ராஜா.
ஒருநாள், மாணிக்கக் கல் கொண்டு வந்தான் ரத்தின வியாபாரி ஒருவன். அந்தக் குருடனை விட்டு அதை பரிசோதிக்கச் சொன்னான் ராஜா. தன் காதுகளில் கல்லை வைத்துப் பார்த்துவிட்டு, "இது, மாணிக்கக் கல் அல்ல; இது, ஒரு பூச்சிக் கூடு!' என்றான் குருடன். வியாபாரி போன பின், "இதை எப்படி கண்டுபிடித்தாய்?' என்று கேட்டான் ராஜா. "மாணிக்கக் கல்லானால், காதில் வைத்தால் ஓசை எதுவும் வராது; பூச்சிக் கூடானதால் காதில் வைத்ததும், "ஙொய்' என்ற சப்தம் வந்தது. அதனால், கண்டுபிடித்தேன்...' என்றான் குருடன். "சபாஷ்! இவனுக்கு தினம் இரண்டு பட்டை சோறு கொடு...' என்று உத்தரவிட்டான் ராஜா.
மற்றொரு நாள், ஒரு அழகிய குதிரையைக் கொண்டு வந்தான் ஒரு குதிரை வியாபாரி. குருடனை விட்டு பரிசோதிக்கச் சொன்னான் ராஜா. குதிரையின் முதுகில் கை வைத்த குருடன், "இது அசல் ஜாதிக் குதிரை அல்ல...' என்றான். "இதை எப்படி கண்டுபிடித்தாய்?' என்று கேட்டான் ராஜா. "ஜாதிக் குதிரையானால், முதுகில் கை வைத்ததும் உடலை சிலிர்க்கும். இது சொரணையே இல்லாமலிருந்தது; அதனால் கண்டுபிடித்தேன்!' என்றான். "சபாஷ்! இவனுக்கு தினம் மூன்று பட்டை சோறு கொடுங்கள்!' என்றான் ராஜா.
பிறகு, ஒருநாள் குருடனிடம், தான் எப்படிப்பட்டவன் என்பதைச் சொல்லும்படி கேட்டான் ராஜா. "மகாராஜா, நான் சொல்வேன்; ஆனால், என் மீது கோபப் படக்கூடாது...' என்றான் குருடன், ராஜாவும் சரி என்றான். "மகாராஜா, நீங்கள் ஒரு சமையல்காரனுக்குப் பிறந்தவர்; ராஜாவுக்குப் பிறக்கவில்லை. கோபிக்கக் கூடாது!' என்றான் பயந்து கொண்டே. நேராக, தன் தாயிடம் போய் விசாரித்தான் ராஜா. அரண்மனை சமையல்காரனுக்கு இவன் பிறந்ததாக தெரிந்து கொண்டான்.
குருடனிடம் வந்து, "உண்மைதான்! நீ இதை எப்படி தெரிந்து கொண்டாய்?' என்று கேட்டான் ராஜா. குருடன், "ஓ அதுவா! ராஜாவுக்குப் பிறந்து, ராஜ வம்சத்தில் வந்தவன், பிறரைப் புகழ்ந்து பரிசளிப்பதானால், பொன்னைக் கொடு, பொருளைக் கொடு என்பான்; நீங்கள், எப்போது பார்த்தாலும் ஒரு பட்டை சோறு, இரண்டு பட்டை சோறு, மூன்று பட்டை சோறு என்று பட்டை சோறாகவே பரிசளித்தீர்கள். சமையல்காரனுக்கு தான் பட்டை சோறு ஞாபகம் வரும்; அதனால், நீங்கள் சமையல்காரன் மகனாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன்!' என்றான். ராஜாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குருடனுக்கு வெளியூரில் வசதியாக வாழ, வழிசெய்து அனுப்பி வைத்தான்.
குலத்தையும், குடும்பத்தையும் பொறுத்து தான் பிள்ளைகளும் இருப்பர் என்பதைச் சொல்ல இப்படி ஒரு கதை உண்டு; ஒரு சில விதி விலக்கும் இருக்கலாம். அனுபவத்தில் காண வேண்டியவை இவை! பக்தியும், ஆசாரமும் உள்ள குடும்பத்தில் அதற்கேற்றபடி பிள்ளை!
* * *
ஆன்மிக வினா-விடை!
இரண்டு கண் தேங்காயை பூஜையில் வைத்து பூஜித்து வந்தால், நல்லது என்று ஒருவர் சொன்னார். என்னிடம் குடுமி இல்லாத, இரண்டு கண் தேங்காய்கள் உள்ளன; அதை பூஜிக்கலாமா?
மூன்று கண் கூடிய தேங்காயைத் தான் சுபகாரியங்களுக்கும், அர்ச் சனைக்கும், பூஜைக்கும் உபயோ கிக்க வேண்டும்.
| வாசகர் கருத்து |
MOST EXCELLENT MORAL STORY ! EVERY TAMIL SHOULD READ THIS.WITHOUT UNDERSTANDING THESE CONCEPTS, LOTS OF FOOLISH PEOPLE ARE FIGHTING WITH EACH OTHER IN THE NAME OF CASTE.. THIS IS THE REAL CONCEPT OF UPPER/LOWER CASTE.. THOSE WHO ARE SHOUTING AGAINST UPPER CASTE SHOULD TRY TO HAVE A VERY GOOD CHARACTER AND BEHAVIOUR. THEN NATURALLY EVERYBODY WOULD APPRECIATE THEM AS HIGH CLASS PEOPLE.. THOUSANDS OF YEARS AGO LORD KRISHNA TOLD IN THE BHAGAVAD GITA AS ''CHATHUR VARNAM MAYA SRUSHTAM GUNA KARMA VIBAAKACHA''
|
by s vinayak,london,India 13-11-2009 03:21:35 IST |
ஒரு காலத்தில் கால்நடையாகவும், குதிரை, மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்தார்கள். தற்காலத்தில் வாகனம் முதல், உணவு விஷயம் வரை எவ்வளவோ விஷயங்களில் அறிவியல் செய்துள்ள அற்புதங்கள் கணக்கிலடங்காதது. ஆனால் மனிதனின் இரண்டு கண்கள், இரண்டு, காதுகள், இரண்டு கைகள்,இரண்டு கால்கள், இரண்டு சிருநீரகம் போன்ற அடிப்படை விஷயங்களில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? பத்து மாதங்கள் என்றாலும் ஒருவர் கருவில் இருக்கும் காலம், கரு உருவான நாள் முதல் ஒன்பது அமாவாசை மட்டுமே. அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். ஆன்மீக கதைகளில் புனைவு அதிகம்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அது உணர்த்தும் உண்மைகள் பெரும்பாலும் நேரடியாக இருக்காது. அப்படி அர்த்தம் கொள்ள நினைத்தால் அது அனர்த்தமாகத்தான் முடியும். ஒரு மனிதனின் குரோமோசோம்களின் குணத்தில் அவன் தாய் தந்தை தவிர இருவரின் முன்னோர்களுடையதும் குறிப்பிட்ட விகித்தில் உண்டு என்பது மருத்துவத்தால் நிரூபிக்கப் பட்டது. இந்து மத புராணத்தில் ஏழு தலைமுறை குணம் உண்டு என்று கூறப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி கிரகணங்கள் உள்ளிட்ட விஷயங்கள் பஞ்சாங்கத்தில் எப்போதோ கணித்து எழுதப் பட்டு விட்டன. இதை யாராவது மறுக்க முடியுமா? எல்லா மதத்திலும் இது போன்ற கற்பனைகளும் உண்டு. நண்பர் david,australia அவர்கள் சில மேல் சாதியினரை உயர்த்த இப்படி கூறப்பட்டிருக்கிறது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவன் பிறவி, பரம்பரை குணத்தை மாற்றிக் கொள்ள முடியாதபடி சில சூழ்நிலைகளால் (தொலைகாட்சி, சினிமா) அழுத்தி வைக்கப் பட்டு இருக்கிறார்கள். குற்றம் சொல்பவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் பத்து சதவீதமாவது கல்வி கற்க இயலாத ஏழையை உயர்த்த செலவிடட்டும்.
|
by வெங்கி ,Thiruvarur,India 10-11-2009 18:24:02 IST |
This story is verry interesting and we have to apreaciate the blind man that he is very clever man
|
by prabu prabhakaran,Tamilnadu,India 10-11-2009 18:07:28 IST |
Only in India such stupid stories are circulating for hundreds of years. Stop this nonsense. Sage valmigi and Naratha were sons of prostitutes, are they not looked up. Gandhi had a drunker son. Please do not publish this kind of stories in the name of ''Anmigam.''
|
by PR Partha,Canton OHIO,United Kingdom 10-11-2009 03:48:49 IST |
Such a stupid article. It just encourages the upper caste people to boast about their birth n maintain the caste system telling the same old story like each caste has their own intelligence where the foreign world is proceeding to live a life in mars n jupitor.I regret this article being published in varamalar n especially in ANMIGAM part which should guide people in a good way.
|
by Mr david,sydney,Australia 09-11-2009 10:26:37 IST |
விதை ஒன்னு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும் என்று சொல்வார்கள்... அது உண்மைதான் என்பதை புரிய வைத்தது குலத்துக்கும் குணத்துக்கும் சம்மந்தம் உண்டா ஆன்மீக கட்டுரை. இது போன்ற நல்ல விஷயங்கள் அடங்கிய இந்த பகுதி ஒவ்வொரு வாரமும் எங்கள் ஆவலைத் தூண்டுகிறது.
|
by வெங்கி ,Thiruvarur,India 08-11-2009 21:17:13 IST |
very good
|
by ks paramanandan,Trivendrum,India 08-11-2009 18:18:43 IST |
very nice
|
by ggowri,chennai,India 08-11-2009 11:22:45 IST |
Story is interesting. Is the blind person in the story is ''wise'' or the person who created this story is ''wise''. Purpose of story? To keep some people to believe the ''moral'' of the story is invioloable? Heridity may have some influence, but opportunities and circumstances are more effective in formation of a person. This is law of science and psychology. Heridity is after all accumulated opprtunity and circumstance.
|
by R.G. Smith,Madurai,India 08-11-2009 03:25:07 IST |
செல்வ வளம் தரும் தாயார்! (ஆன்மிகம்)
இது உங்கள் இடம்!
திண்ணை! (நடுத்தெரு நாராயணன்)
அந்துமணி பா.கே.ப.,
அந்துமணி பதில்கள்!
வேட்டைமான்! (தொடர் கதை)
ஜோல்னா பையன்
துணுக்கு மூட்டை
வெள்ளாவி! (சிறுகதை)
அன்புடன் அந்தரங்கம்! (அனுராதா ரமணன்)
தமாசு!
மாமியார்கள் மோகினிப் பிசாசுகளா? (சிறுகதை)
துரோகம்! (கவிதைச் சோலை!)
வெல்க்கம் ட்டூ வேலந்தாவளம்! (தொடர்)