தேவையானப் பொருட்கள்:
வேக வைத்து மசித்த வாழைக்காய் - 2 கப்
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி மாவு - தலா 2 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல்- 2 தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: மூன்று வகை பருப்புடன், காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின், தண்ணீரை வடித்து மிக்சியில் போட்டு, கெட்டியாக அரைக்கவும். அதனுடன், மசித்த வாழைக்காய், அரிசி மாவு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.