முகம் பொலிவு பெற...
* தயிருடன், கடலை மாவு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ் வாறு செய்வதால், முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து, சோப்பு போட்டு கழுவ வேண்டும். தின மும் இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால், முடி வளர்ச்சி குறைந்து, முகம் அழகு பெறும்.
* மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம், புதுப் பொலிவடையும்.
* வீட்டிலிருக்கும் போது, பால் ஏடுகளை முகத்தில் தேய்த்து வரவும்.
* புதினா இலைகளை அரைத்து சாறெடுத்து முகத்தில் தடவி வர, உலர்ந்த தன்மை நீங்கும். முகப்பருக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
* முல்தானிமெட்டியை தண்ணீரில் குழைத்து, முகத்தில் தடவி வர, முகம் மலர்ச்சியடையும்.
* முகத்திற்கு அடிக்கடி க்ரீம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது முகத் தசைகளின் மென்மையை போக்கி விடும். அதுபோல், பரு இருப்பவர்கள், பேஷியல் செய்வதை தவிர்ப்பது நல்லது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.