Advertisement
நட்பும், உறவும் பலப்பட வேண்டுமா?
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2012
00:00

நாம், ஒருவர் மீது கொண்டுள்ள அன்பையும், மரியாதையையும் காட்டுவதற்கு அடையாளமாகக் கொடுப்பதே அன்பளிப்பு. உங்கள் அன்பளிப்பு உன்ன தமாக, நட்பும், உறவும் பலப்பட, சில யோசனைகள்...
பேச்சு, செயல், பார்வை ஆகிய மூன்றினாலும் அன்பை வெளிப்படுத்தலாம். இதில், செயல் என்பது, நேசத்துக்குரியவர்களுக்கு சில பொருட்களை வாங்கி கொடுத்து, அன்பை வெளிப்படுத்துவது.
மெய்யான அன்பை காட்டுவதற்கு, நாளும் தேவையில்லை, நேரமும் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் தெரி யப்படுத்தலாம். ஒரு காதலன், தன் காதலிக்கு சிறு சிறு பரிசுகளை வழங்குவதற்கு, நேரம் காலம் பார்ப்பதில்லை. அதேபோல, கணவன், தன் மனைவிக்கு சில அன்பு பரிசுகளை கொடுப்பதற்கும், கால நேரம் பார்க்க வேண்டியதில்லை.
ஆனால், உறவினர், நண்பர்களை பொறுத்த வரை, அன்பளிப்பு கொடுப்பது அரிதான ஒன்றாக உள்ளது. பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாள் போன்ற விசேஷமான காரணம் ஏதாவது இருந்தால்தான், அன்பளிப்புகளை வாங்கிக் கொடுப்பர்.
இன்னென்ன பொருட்களைத்தான் அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று யாராலும் வரையறுத்துக் கூறிவிட முடியாது. எனவே, நாம் பொதுவாக அன்பளிப்புக்குரிய சில பொருட்களை பட்டியலிட்டு கூறலாமே தவிர, இவை மட்டும் தான் அன்பளிப்புக்கு உரிய பொருட்கள் என்று கூற முடியாது.

அன்பளிப்பு பொருட்களில் பரவலாக இடம் பெறத்தக்கவை


பேனா: பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் முதல், அலுவலக பணியாளர், தொழிலாளி, முதலாளி, தொழிலதி பர், வியாபாரி வரை, எல்லாருக் குமே இன்றியமையாதது பேனா. யாருக்கு அன்பளிப்பு செய்கிறோம் என்பதை பார்த்து, அவருக்கு எப் படிப்பட்ட பேனாவை பரிசளித்தால், அது பயனுள்ளதாக இருக்கும் என் பதை கருத்தில் கொள்வது நல்லது.
கைக்கடிகாரம்: படித்தவர் முதல் பாமரர் வரை, ஏழை முதல் பணக்காரர் வரை, எல்லா வயதினரும் விரும்பி ஏற்கும் பொருள் கைக்கடிகாரம். கைக்கடிகாரத்தில் ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் தனித்தனி டிசைன்களில் கடிகாரங்கள் உள்ளன. உள்நாட்டுக் கடிகாரங்களோடு, ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கக் கடிகாரங்கள், வைரக்கல் பதித்த கடிகாரங்கள் என்று, பல வகையான கடிகாரங்கள் உள்ளன.
கேமராக்கள் மற்றும் கால்குலேட்டர்கள்: சாதனைகள் புரியும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பெற் றோரும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கேமரா மற்றும், கால்குலேட்டரை அன்பளிப்பு செய்யலாம்.
கலை பொருட்கள்: காட்சிக்கு வைக்க வேண்டிய கலை நுணுக்கம் மிக்க பொருட்களை, வசதியானவர்களுக்கு வழங்குவதே பொருத்தமானது.
புத்தகங்கள்: திருமணங்களின் போதும், சாதனை நிகழ்த்தும் மாணவ மாணவியரை பாராட்டும் போதும், பரிசளிப்பதற்கு பெரிதும் உகந்த பொருள், நல்ல தரமான புத்தகங்கள். எல்லா தரப்பினருக்கும் ஏற்ற பரிசுப் பொருள் இது.
ஆடைகள்: நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், ஆடைகளை அன்பளிப்பு செய் யும் வழக்கம் உள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் ஆடைகளை வாங்கிக் கொடுத்தால், அவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் அகமகிழ்வர்.
பொம்மைகள்: குழந்தைகளை மகிழ்விக்கும் அன்பளிப்பு பொம்மைகள்தான். சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிறந்த நாள் விழாக்களில், பொம்மைகளை பரிசளிப்பது மிகவும் புத்திசாலித்தனம்.
வீட்டு உபயோகப் பொருட்கள்: "டிவி' பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை, திருமணம், புதுமனை புகுவிழா போன்றவைகளுக்கு அன்பளிப்புச் செய்யலாம்.
செலவில்லாத அன்பளிப்பு: செலவில்லாத அன்பளிப்பு ஒன்று உண்டு. அது புன்னகை தான். ரோஜாவை பரிசளிக்காவிட்டாலும், சின்ன புன்னகை போதுமே என்றார் ஒரு ஆங்கில அறிஞர். எனவே, புன்னகையை கொடுங்கள், புன்னகையோடு வாழுங்கள்.

- ஐடியா அம்புஜம்.

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.