தேவையானப் பொருட்கள்: காலிப்ளவர் - 1, மைதா - 100 கிராம், பசும்பால் - அரை லிட்டர், சீஸ் - 10 கிராம், வெண் ணெய் - 10 கிராம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 தேக்கரண்டி, நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2, சர்க்கரை - அரை தேக்கரண்டி,கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: காலிப்ளவரை நறுக்கி, கொதி நீரில் போட்டு, வடிகட்டி எடுக்கவும். மைதா மாவை, பாலில் கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளவும். வெண் ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை வதக்கவும். அதோடு, பாலில் கரைத்து வைத்துள்ள மைதாவை ஊற்றி, கட்டி விழாமல் கிளறவும். கூழ் பதம் வந்ததும், உப்பு போட்டு, அடுப்பை சிம்மில் வைக்கவும். காலி ப்ளவரை பாதியளவு வேகும் மட்டும் எண்ணெய் யில் பொரித்து, அதை ரெடியாக உள்ள கிரேவியில் போடவும். இதன் மேலே சீஸ் போட்டு, அரை தேக் கரண்டி சர்க்கரையும் போட்டு கிளறி பரிமாறவும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.