ஒரே பாய்ச்சலில், இக்கரையில் இருந்து அக்கரைக்கு லகுவாக சென்று விடுகின்றனர் ரோஸ் சகோதரிகள். அவர்கள் பேச்சிலும் அதே பாய்ச்சல் பளிச்சிடுகிறது. கடந்த 2005ல், மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்; 2008ல், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், பிரஸ்ட் ஸ்டிரோக் பிரிவில் தங்கம் வென்றது; 2009ல், நடந்த தேசிய போட்டியில், 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் மறுபடியும் தங்கம், இந்த ஆண்டு தேசிய நீச்சல் போட்டியில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் வென்றது. அக்காளின் சாதனைகள் இவை என்றால், தங்கையும் தன் பங்குக்கு பதக்கங்களை குவித்து வருகிறார். கடந்த 2010ல், மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில், நான்கு தங்கப் பதக்கங்களோடு தனிநபர் சாம்பியன் பட் டம், இந்தாண்டு ஜனவரி யில் நடந்த மாநில அளவி லான நீச்சல் போட்டியில் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி; சென்ற மாதம் மறுபடியும் ஒரு தங்கம் என்று, தங்கையின் சாதனைகளும் தொடர்கிறது. சேலத்தை சேர்ந்த ஏஞ் சல் ரோஸ், அவரது தங்கை அஸ்வினிரோஸ் ஆகியோர் தான் தங்கம் குவிக்கும் நீச்சல் சகோதரிகள்.
ஏஞ்சல் ரோஸ் கூறுகிறார்:
"டிவி' நிகழ்ச்சியில், நீச்சல் போட்டிகளை விரும்பி பார்ப்பேன். சின்ன வயது முதலே இந்த பழக்கம் என்னிடம் உள்ளது. அதுதான் என் நீச்சல் ஆர்வத்திற்கும் காரணம். என்னுடைய விருப்பத்தை அப்பாவிடம் சொன்னபோது, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், ஏற்றுக்கொண்டார். என் விருப்பத்திற்கு மதிப்பளித்து, நீச்சல் பயிற்சிக்கு அனுப்பினார். அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது தான், முதல் போட்டியில் பங்கேற்றேன். ஆரம்பத்தில் பயமாக இருந்தது. அதனால்தான் என்னவோ, என்னால் இரண்டாமிடமே வர முடிந்தது. அந்த போட்டியில் வெள்ளி வென்றேன். அந்த முதல் பதக்கம் மறக்க முடியாத சந்தோஷத்தை கொடுத்தது. மேலும், இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையையும் எனக்கு அந்த முதல் வெற்றி தந்தது. அமெரிக்க நீச்சல் வீராங்கனையான ப்ருக் ஹான்சன்தான் என் ரோல் மாடல். அவரை போன்று ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது என் ஆசை. நீச்சல் பயிற்சி எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது? நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எந்த நோயும் சட்டென்று வந்துவிடாது. மனதை எளிதில் ஒருமுகப்படுத்தலாம். அதன் காரணமாக, நன்றாக படிக்க முடியும். படிக்கும் பாடம், மனதில் ஆழமாக பதியும். ஒரு பாடப்பிரிவை, 45 நிமிடத்தில் படித்து முடித்து விடலாம். மேலும், நன்றாக பசிஎடுக்கும். உடல் எடையும் கண்டபடி கூடாது. மொத்தத்தில் மனமும், மூளையும் ரொம்ப, "ப்ரீ' ஆக இருக்கும். ரெகுலராக நீச்சல் கற்று வர வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளை அளவோடு சாப்பிட வேண்டும். தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அப்போது தான் நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும். போட்டி நடைபெறும், 15 நிமிடத்திற்கு முன், எனர்ஜி டிரிங், வாழைப்பழம் போன்ற பழங்கள் சாப்பிட வேண்டும். அதேநேரம், போட்டி நடைபெறும் நாளன்று அசைவம், பாஸ்ட் புட் வகைகளை தொடக் கூடாது. வருங்கால நீச்சல் வீராங்கனைகளுக்கு ஒரு வார்த்தை... நீச்சல் பயிற்சி பற்றி எந்த பயமும் வேண்டாம். டீன்-ஏஜில் இந்த பயிற்சிக்கு வருவதைவிட, அதற்கு முன், சின்ன வயதிலேயே வந்து விடுவது நல்லது. அப்படி வந்தால் பயத்தை தவிர்த்து விடலாம். எல்லா துறைகளிலும் சாதிக்கும் பெண்கள், நீச்சல் போட்டி யிலும் சாதிக்க முடியும். என்ற ஏஞ்சல் ரோசின் பேச்சில், அத்தனை கம்பீரம், விவேகம்!
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.