Advertisement
தனித்திறமைகளை வளர்க்கும் இடம் பள்ளிக்கூடம் தான்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2013
00:00

தனித்திறமைகள் இருப்பவர்களை தான், சமூகம் திரும்பி பார்க்கும். மற்றவர்கள் மத்தியில், என்னையும் தனியாக அடையாளப் படுத்தியது கூடைபந்து விளையாட்டு தான் என, புன்முறுவலுடன் மனம் திறந்து பேசுகிறார் ஜஸ்வர்யா:
நான் பிறந்து, வளர்ந்தது திருச்சியில் உள்ள திருவானை கோவில். பத்தாம் வகுப்பு வரை, ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். என் ஆரம்ப பள்ளி பருவம் தான், விளையாட்டு ஆர்வத்தை என்னுள் விதைத்தது. சிறுவயதில், மற்றவர்கள் விளையாடும் போது, வேடிக்கை பார்க்க பிடிக்கும். அதிலும், கூடைபந்து விளையாட்டு என்றால், நேரத்தையும் மறந்து, வேடிக்கை பார்ப்பேன்.
ஆறாம் வகுப்பு படிக்கும் போது, கூடை பந்து விளையாடுவதற்கு ஜூனியர்களுக்கான குழுவுக்கு மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். பொதுவாக கூடை பந்து விளையாடுபவர்கள் உயரமாக இருப்பர். நான் சுமாரான உயரம் தான். இருப்பினும் எப்படியாவது, "டீமில்' சேர வேண்டும் என்ற உந்துதலில், விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்து விட்டேன்.
அன்றிலிருந்து இன்று வரை, அந்த உந்துதல் தான் என்னை விளையாட தூண்டுகிறது. இதுவரை, பல்கலைக்கழகம், மாவட்ட, மண்டல, மாநில என, பல்வேறு பிரிவுகளில், விளையாடி உள்ளேன். பல பதக்கங்களையும் பெற்றிருக்கிறேன். சிறந்த பயிற்றுனரும், "டீமும்' அமைந்தால், எதிலு<ம் வெற்றி பெறலாம். விளையாடும் போது, பல்வேறு யுக்திகளை எப்படி கையாள்வது என்பதை, கற்றுக் கொண்டால், எளிதில் வெற்றி பெறலாம். காலையில் 6.00 மணியில் இருந்து, இரவு 7.00 மணி வரை பயிற்சி நடக்கும். நான் வகுப்பில் இருந்த நாட்களை விட, மைதானத்தில் இருந்த நாட்களே அதிகம். அதற்காக, படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்ததில்லை.
விளையாடும் போது, பல்வேறு மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு முறை, மாநில அளவில் நடக்கும் போட்டிக்காக, பயிற்சி நடந்தது. அப்போது, எனக்கு உடல்நிலை சரியில்லை. பயிற்சி எடுக்கவே முடியாமல் கஷ்டப்பட்டேன். போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே உடல்நிலை தேறியது. வீட்டில் விளையாடுவதற்கு, பயங்கர எதிர்ப்பு. இருப்பினும், விளையாட சென்றேன். அந்த போட்டியில் ஐந்து நிமிடத்திற்குள் மூன்று கோல் அடித்தேன். அதாவது, ஒன்பது மதிப்பெண்கள் பெற்றேன்.
உற்சாகமும், சிறந்த பயிற்சியும் இருந்தால், எப்படியும் வெற்றி பெறலாம் என்பதை அப்போது தான் தெரிந்து கொண்டேன் என, நெகிழ்ச்சியோடு பேசினார் ஐஸ்வர்யா. ஆரம்பபள்ளி பருவத்திலேயே, நமக்குள் இருக்கும் திறமைகளை இனம் கண்டு கொண்டால், நமக்கான களத்தை தெரிவு செய்வது எளிது, என்கிறார் ஐஸ்வர்யா.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.