உடல் நலத்திற்கு உதவும் காய்கறிகள், கணக்கில் அடங்காது. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.
தக்காளி:
தக்காளியை நாம் பல விதங்களில் உணவில் பயன்படுத்துகிறோம். இதில், ஏ, பி, சி., ஆகிய வைட்டமின்கள், அதிகளவில் உள்ளன. மஞ்சளும், பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும் தக்காளியில் தான் சத்துக்கள் அதிகம். காயாக சேர்த்தால் கூட நல்லதுதான். முழு சிகப்பு தக் காளியை உணவில் சேர்க்க வேண் டாம். ஏனெனில், அதிகளவில் அமிலச்சத்து இருக்கும். சூப் தயாரிப்ப தற்கு, பழமும், காயும் கொண்ட பக்குவத்தில் உள்ள தக்காளிப் பழமே ஏற்றது.
உருளைக் கிழங்கு:
உருளைக்கிழங்கு, வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். எனவே, குறைந்த அளவிலேயே உருளைக் கிழங்கை சேர்த்துக்கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சி போன்றவற்றை உருளைக் கிழங்குடன் சேர்த்தால், வாயுத் தொல்லை இருக்காது. உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள், உருளைக் கிழங்கை அறவே தவிர்த்திட வேண்டும்.
வாழைக்காய்:
வாழைக்காய் பல விதங்களில் நமக்கு நல்லது. முற்றிப் போன வாழைக்காயில் கூட்டு, அவியல், சிப்ஸ் போன்றவற்றை தயாரிக்கக் கூடாது. இளம் பக்குவத்தில் உள்ள வாழைக்காயே சமைப்பதற்கு ஏற்றது. குண்டாக இருப்பவர்கள், வாரத்தில் இரண்டு முறை, குறைந்த அளவில் வாழைக்காய் சாப்பிட்டு வர, உடல் எடை குறையும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் வாழைக்காய் நல்லது.
பீர்க்கன் காய்:
பீர்க்கன் காயை பலர் வேண்டாத காயா கவே நினைக்கின்றனர். ஆனால், இதன் மகத்துவம் மிகப் பெரியது. இது வயிற்று உபாதைகளை நீக்கும் தன்மை கொண் டது. உடலை வலுவாக்கும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். பீர்க்கன்காயின் சாறு ரத்தத்தை சுத்தமாக்கும்.
பச்சைப் பட்டாணி:
பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். பச்சை நிற சாயம் ஏற்றப்பட்ட பட்டாணியை, இன்று பெரும்பாலான காய்கறி கடைகளில் விற்பனை செய்கின்றனர். எனவே, தோலோடு வாங்கி பின், தோலை நீக்கி பயன்படுத்தலாம். சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி, உட லுக்கு கேடு விளைவிக்கும். பச்சைப் பட்டாணியில், வைட்டமின் ஏ, சி., ஆகிய சத்துக்கள் உள்ளன. உடல் வளர்ச்சிக்கும், ரத்த விருத்திக்கும் ஏற்றது.
வாழைத்தண்டு:
வாழைப் பூ, வாழைத் தண்டு எல்லாமே, உடல் நலத்திற்கு நன்மையே செய்கிறது. மண்ணை தின்கிற குழந்தைகளுக்கு அவசியம் வாழைத்தண்டு கொடுக்க வேண்டும்.
பீட்ரூட்:
பீட்ரூட்டை கண்டால், பலரும் பயப்படுகின்றனர். உண்மையில், இது அதிகம் சத்துக்கள் கொண்ட காய்கறி. உடலில் ரத்தத்தை அதிகரிக்கும். வாரத்தில் மூன்று, நான்கு நாட்கள் கூட கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம்.
முட்டைகோஸ்:
முட்டை கோஸ், காலிப்ளவர் போன்றவற்றில் நார் சத்துக்கள் உள்ளன. சருமக் கோளாறுகளுக்கும், இதை சாப்பிட்டு வரலாம்.
வெள்ளரி:
பி, சி., வைட்டமின் சத்துக்கள் நிறைந்த காய் வெள்ளரி. இதை, தோலுடன் சாப்பிடுங்கள். சாப்பிடுவதற்கு முன், கழுவி சாப்பிடவும். உணவாக செய்தும் சாப்பிடலாம். உணவாக செய்வது என்றால், அரை வேக்காடு போதும். - ஐடியா அம்புஜம்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.