எந்த ஒரு அழகு சாதனத்தை தேர்ந்தெடுத்தாலும், அது நமக்கு ஒத்துக் கொள்ளுமா என்பதை, பேட்ச் டெஸ்ட் செய்த பின் பயன்படுத்த வேண்டும். யாருக்கு எது அலர்ஜியைத் தரும் என்பதை, தெரிந்து, தவிர்ப்பது நல்லது. இப்போது, மக்கள், கடை வீதிகளில் விற்கும் பொருட்களை (விலை குறைவு என்று நினைத்து) வாங்கி, பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். * மட்டமான நெயில் பாலிஷ் போட்டால், நகம் மஞ்சளாக மாறும். நகத்தின் அடிப்பகுதி அரித்துப் போகும். * தரமில்லாத லிப்ஸ்டிக்குகளையும், டார்க் கலர் லிப்ஸ்டிக்கையும் உபயோகித்தால், உதடுகள் கறுத்து வீங்கி, கரும் புள்ளிகளுடன் காணப்படும். * மட்டரக, "ஐ' லைனர், மஸ்காரா பயன்படுத்தினால், கண் வீங்கி இமைகள் உதிர்ந்து விடும். * தரமில்லாத ஷாம்பூ பயன்படுத்தினால் தலையில் கட்டிகள், முடி உதிர்தல் ஏற்படலாம். கண்டிஷனர் உள்ள ஷாம்பூ போடுங்கள். * வாக்சிங் செய்த இடங்களில் தடிப்பு, எரிச்சல் ஏற்பட்டால், மெல்லிய காட்டன் துணியில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். * த்ரெடிங் செய்யும் போது, அலர்ஜி வந்தாலும், ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்து கொள்ளவும். * ஸ்டிக்கர் பொட்டுகளில் உள்ள பசையும், குங்குமத்தில் உள்ள சிட்ரிக் அமிலமும், அலர்ஜி ஏற்படுத்தலாம். சிட்ரிக் அமிலம் கலக்காத குங்குமம் பயன்படுத்துவது நல்லது. * பெடிக்யூர், மெனிக்யூர் செய்ய உபயோகிக்கும் கருவிகள், பிளாக் ஹெட் ரிமூவர், டவல், சோப், ஸ்பான்ஜ் போன்றவற்றை, ஒவ்வொருவரும் தனித்தனியே வைத்துக் கொள்வது நல்லது. தனியாக வைத்துக் கொள்ள முடியவில்லையென்றால், கருவிகளை ஸ்டெரிலைஸ் செய்த பிறகே உபயோகிக்க வேண்டும். * கூந்தலை நிறமாக்கும், நேரான கூந்தலை சுருட்டையாக்கும், சுருட்டையான கூந்தலை நேராக்கும் சிகிச்சை செய்யும்போது, அதிலிருக்கும் அளவுக்கதிகமான அமோனியா கூந்தலை பாதிக்கும், சருமத்தை சுருக்கும்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.