Advertisement
பொருத்தமான கண்ணாடியை அணியுங்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2013
00:00

பார்வை குறைபாடு, பேஷன், கிளாமர், வெயில், மழை - இப்படி எதுவாக இருந்தாலும், கண்ணாடி அணிவது இன்றைக்கு அத்தியாவசியமாகி விட்டது. இதில் எதுவாக இருந்தாலும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அணிவது, மிக மிக அவசியம். கண்ணாடி எப்படி அமைய வேண்டும் என்பதை பார்ப்போம்:
கண்களை விட சிறிதான கண்ணாடிகளை அணியக் கூடாது. நம் கண்ணை விட பெரிதாக இருக்கும் பிரேம்கள் கொண்ட கண்ணாடிகளே, நம் கண்களை பாதுகாக்கும். இப்போது, பெரும்பாலான இளம் வயதினர், பேஷன் என்ற பெயரில், சின்ன அளவு கண்ணாடியை போட்டு, மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருப்பர். இப்படி பார்க்கும் போது, அடிக்கடி விழி திரை மூடி விலகுவதால், கண் பார்வை பாதிக்கும். கண்ணாடிக்கு மேலாகவும், கண்ணாடிக்கு கீழாகவும் பார்க்கக் கூடாது. கண்ணாடி வழியாகத்தான் பார்க்க வேண்டும்.
கண்ணாடி என்பது, நமக்கு அழகு சேர்ப்பதை விட, கண்ணை பாதுகாப்பதாக அமைய வேண்டும். கண்ணாடியின் பாரம் முழுவதும் மூக்கிலும், காதிலும் சேர்ந்திருக்கும். அதனால், மூக்கு, காதுகளுக்கு நன்றாக பொருந்தக்கூடிய கண்ணாடிகளை அணிய வேண்டும். அதேபோல், அடிக்கடி சுத்தமான ஸ்பாஞ்ச் துணியால் துடைத்து, வைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பிரேம் மற்றும் லென்சுகளை, திரவ சோப்பு மற்றும் ஷாம்பு போட்டு, வேகமாக செல்லும் தண்ணீரில் கழுவி, மெல்லிய துணியால் துடைத்து, பயன்படுத்த வேண்டும். மெட்டல் பிரேம் என்றால், கழுவ வேண்டாம். சுத்தமான துணியால் துடைத்தால் போதும்.
கண்ணாடியைக் கழுவும்போது, மூக்கோடு சேர்ந்து தாங்கும் பகுதியை நன்றாகக் கழுவவும். ஏனெனில், அந்த இடத்தில் தான் வியர்வை அதிகமாகப்படும்.
இப்போதெல்லாம், கான்டாக்ட் லென்ஸ் மாட்டுவதை யாரும் விரும்புவதில்லை. அடிக்கடி கழற்றிமாட்ட கஷ்டம் என்பதால், பெரும் பாலும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால், கண்ணாடியை அனைவருமே விரும்பக் காரணம், இது கண்களை பாது காக்க மட்டுமல்ல... முகத்துக்கு எக்ஸ்ட்ரா பியூட்டியை கொடுக்கிறது.
கண்ணாடியை பயன்படுத்துபவர்கள், பிறருடைய கண்ணாடியை பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு பார்வை அளவு இருக்கும். தலை அளவும் பெரிதும், சிறிதுமாக இருக்கும். கண்ணாடி பொருந்தாமல் இருந்தால், கண் பார்வை பாதிக்கும்.
பதிமூன்று முதல், 18 வயது வரை உள்ளவர்களுக்கு, எட்டு மாதத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆறு வயதிற்கு கீழே, "ரெட்டினா' நரம்பு மூலம், பார்வை சக்தி குறையும் சூழல் அதிகம். அதனால், கண்ணாடி போட வேண்டிய அவசியம் உள்ள சிறுவர் - சிறுமியர், கண்ணாடியை கழற்றாமல், எப்போதும் அணிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான பிரேம்கள் எளிதானதாக, உடையாததாக... இருக்க வேண்டும். பிளாஸ்டிக் லென்சுகளை பொருத்துவது நல்லது.
கண்ணாடிகளை எப்போதும் அதற்கான கூடுக்குள் வைக்கவும். பயணம் செய்யும்போது, "சன் கிளாஸ்' நல்லது. உஷ்ணத்திலிருந்து கண்களை பாதுகாக்கும். இதனால், கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும். முக்கியமாக, கறுப்பு கண்ணாடிகளே கண்களுக்கு குளிர்ச்சி. கோடைகாலங்களில் கறுப்பு கண்ணாடிகளே பெஸ்ட். ஏனெனில், சூரிய வெளிச்சத்தில் இருக்கும் அல்ட்ரா கதிர்கள், 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை தாக்காமல் பாதுகாக்கிறது.
- ஐடியா அம்புஜம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.