இமைகள் அழகாக இருந்தால் தான், கண்களின் அழகு வெளிப்படும். கண் இமைகள் அடர்த்தி குறைவாக இருந்தால், தினமும் அவற்றின் மீது, கிளிசரின் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவில் கலந்து தடவி வரவும். இதன் மூலம், நாளடைவில் இமைகள் நீளமாக, அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். இதை தடவும்போது, கைகளால் தடவாமல், பிரஷ்ஷால் தடவினால், கண்களிலிருந்து நீர் வடியாமலும், இமைகள் முடி உதிராமலும் இருக்கும்.
தலையில் பொடுகு பிரச்னை உள்ளவர்கள், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பொடுகு அதிகமாகி கண் இமை முடிகள் பாதிக்கப்படலாம். அதனால், இமைமுடி உதிரவும் கூடும்.
கண்களுக்கு லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், முதலில் இமைகளின் மீது மஸ்காரா தடவி விட்டு, பின் லென்ஸ் அணியலாம்.
சைனா கிராஸ் அடங்கிய உணவு வகைகள், சூப்புகள் போன்றவை, இமைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. எனவே, இவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.
தூங்கச் செல்வதற்கு முன், மஸ்காராவை அழித்து விட வேண்டும். இல்லையெனில், நிறமிழந்து வெடித்து, அழகற்றுப் போய்விடும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.