அமெரிக்காவின் அரிஜோனாவைச் சேர்ந்த பெண் சுசன்னே இமான். வயது: 33. இவருக்கு ஒரு வித்தியாசமான, விபரீதமான ஆசை. உலகின் மிகப் பெரிய, "குண்டு மணப்பெண்' என்ற பெருமை, தனக்கு கிடைக்க வேண்டும் என்பது தான், அந்த ஆசை. அதற்காக, இப்போது அவர், மெல்லிடை கொண்ட பெண்ணாக இருப்பார் என, கற்பனை செய்து விட வேண்டாம். தற்போது அவரது <உடல் எடை, 245 கிலோ. திருமணத்தன்று, தன் எடையை, குறைந்தது, 310 கிலோ அளவுக்கு அதிகரித்து விட வேண்டும் என்பதே, இவரது லட்சியம். திருமணத்தன்று, தான் அணியப் போகும் மணப்பெண் உடை, இதுவரை <உலகில் வேறு எந்த மணப்பெண்ணும் அணியாத அளவுக்கு மிகப் பெரிய உடையாக இருக்க வேண்டும் என்பதும், இவரது ஆசை. குண்டாக வேண்டும் என்பதற்காக, தினமும், 30 ஆயிரம் கலோரி <<உணவுகளை, ரைஸ்மில்லிற் குள் தள்ளுவது போல், வாய்க்குள் போட்டு, அரைத்து தள்ளுகிறார். பிரெட், கேக், இறைச்சி, பழம், காய்கறிகள் என, கண்ணில் பார்ப்பதை எல்லாம், வாங்கி சாப்பிட்டு வருகிறார். < உடல் எடையை, அளவுக்கு அதிகமாக அதிகரித்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என, டாக்டர்கள் எச்சரித்தும் கூட, அதை இவர் பொருட்படுத்தவில்லை. இவர், திருமணம் செய்யப்போகும் அதிர்ஷ்டசாலி கணவர் யார் தெரியுமா? பார்கர் கிளார்க் என்ற பிரபலமான சமையல் நிபுணர். இமான் கூறுகையில், "எனக்கு பொருத்தமான கணவரைத் தான் தேர்வு செய்துள்ளேன். அவர், சமைத்துப் போட்டுக் கொண்டே இருப்பார், நான் சாப்பிட்டு கொண்டே இருப்பேன். செம ஜாலியாக இருக்கும்...' என்கிறார். — ஜோல்னா பையன்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.