நெருங்கிய நண்பர்களின் திருமண நாள் கொண்டாட் டத்தில் பங்கேற்க சென்றால், அவர்களுக்கு பரிசளித்து, வாழ்த்து தெரிவிக்கும் நடைமுறை, பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படுகிறது. பரிசுப் பொருட்கள் என்றால், பெரும்பாலும், வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள், அலங்கார வேலைப் பாடுகளுடன் கூடிய பொருட்கள் போன்றவை தான், இடம் பெறும். ஆனால், சமீபகாலமாக பிரிட்டனில், திருமண நாளை கொண்டாடுவோருக்கு, வித்தியாசமான பரிசுப் பொருளை கொடுத்து, அசத்த ஆரம்பித்துள்ளனர்.
திருமண நாள் கொண்டாட்டத்துக்கு வரும்போதே, பெரிய அட்டை பெட்டிகளில், வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கேக்குகளை எடுத்து வருகின்றனர். திருமண நாள் கொண்டாடும், தங்கள் நண்பர் அல்லது தோழியை, கிண்டலடிக்கும் விதமாக, அவர்களின் வாழ்க்கை முறையை சித்திரிக்கும் வகையிலான கேக்குகளை வடிவமைத்து, அவற்றை பரிசாக கொடுத்து மகிழ்கின்றனர். மனைவி, கணவனின் சட்டை காலரை பிடித்து இழுத்துச் செல்வது, தூண்டில் போட்டு இழுப்பது, காலில் கயிறு கட்டி இழுத்துச் செல்வது, கணவனின் காலில் விலங்கு பூட்டி, அதன் சாவியை, கையில் வைத்து, சுழற்றி கொண்டிருப்பது, இப்படி விதம், விதமாக உருவாக்கப்பட்ட கேக்குகளை பரிசளிக்கின்றனர்.
கிண்டலடிக்கும் வகையிலான கேக்குகள் மட்டுமல்லாமல், கணவனும், மனைவியும், முத்தமிட்டுக் கொள்வது, இடுப்பில் அன்பாக கைபோட்டு அரவணைத்து செல்வது போன்ற, "ரொமான்டிக்'கான கேக்குகளும் உண்டு. அழகாக உருவாக்கப்பட்ட இந்த கேக்குகளை, "பிரிட்ஜ்'க்குள் வைத்து பாதுகாப்பர் என, நினைக்க வேண்டாம். பார்ட்டி முடிவடைவதற்குள், கேக்குகள் வயிற்றுக்குள் போய் விடும்.
***
சி. சண்முகநாதன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.