அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2012
00:00

அன்புள்ள அம்மாவுக்கு,
எனக்கு திருமணம் ஆகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. என் மகனுக்கு, 19 வயது; என் மகளுக்கு 14 வயது. நானும், என் கணவரும் அரசாங்க ஊழியர்கள். என் அப்பா, 2003ல், ஓய்வு பெற்றவுடன், வேறு ஊருக்கு தம்பி, தம்பி மனைவியுடன், என் அம்மாவையும் அழைத்துப் போய் விட்டார்.
என் மகன், மகள் பிறந்ததிலிருந்து, என் அப்பா, அம்மா பராமரிப்பில் தான் வளர்ந்தனர். 11 வயது வரை, தாத்தாவின் கண்டிப்பில் வளர்ந்ததால், படிப்பி<<லும், ஒழுக்கத்தி<லும், பெற்றோரை மதிக்கவும் செய்தான் என் மகன். ஆனால், 2004ல் இருந்து, அவனுடைய படிப்பு குறைய தொடங்கியது.
படிக்காத பிள்ளைகளுடன் சேர்ந்து, ஊர் சுற்றி, 10ம் வகுப்பில், குறைவாக மார்க் வாங்கியதால், டிப்ளமா சேர்த்தோம். முதல் வருடம், நன்றாக படித்தான். இரண்டாம் வருடத்திலிருந்து, மீண்டும் கூடா நட்பு.
தினமும் பணம் கேட்டு தொல்லை செய்வான். தினமும் செலவுக்கு குறைந்தது, 100 ரூபாய்; வாரத்திற்கு பெட்ரோலுக்கு, 300 ரூபாய், இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை, 1,000 - 2,000 ரூபாய் வாங்கிக் கொண்டு, படம் பார்ப்பான்.
அவன் கேட்கும் போது, பணம் கொடுக்க வேண்டும்; இல்லையென்றால், என் மகளையும், என் கணவரையும் அடிக்க வருவான். வீட்டில் <உள்ள பொருட்களை உடைத்து நொறுக்குவான். வீட்டில் சண்டை இல்லாத நாளே இல்லை.
எவ்வளவு கண்ணீர் வடித்தாலு<ம், கேட்ட பணத்தை வாங்காமல் போக மாட்டான். மூன்று வருடமாக, இது தான் நடக்கிறது. ஆறு மாதமாக, குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறான். எவ்வளவு அன்பாக எடுத்துச் சொன்னாலும், "நான் இப்படித்தான் இருப்பேன். என்னை யாரும் எதுவும் கேட்கக் கூடாது. நான் திருந்தும்போது திருந்துவேன்...' என்கிறான்.
மகன் இன்னைக்கு திருந்துவான்; நாளைக்கு திருந்துவான் என்று எண்ணி, எண்ணி கவலையுடன் இருக்கிறோம். என் மகனை நல்வழிபடுத்த, எனக்கு நல்ல வழிகளை கூறுங்கள். கவுன்சிலிங் கொடுக்க வேண்டுமென்றால், எங்கே, யாரை போய் பார்க்க வேண்டும் என்ற விவரத்தையும், எங்களுக்கு தெரியப் படுத்தவும்.
எங்கள் சண்டை, நாலு சுவற்றுக்குள் நடக்கிறது. ஆனால், என் அப்பாவிடம் தெரிவித்தால், நாலு< தெருவிற்கு தெரியும்படி செய்து விடுவார். எங்கள் மானமும் போய், மகனின் மானமும் போய், மகன் ஓடி விடுவானோ என்று பயந்த படி இருக்கிறேன்.
அவனுக்கு தண்டனை கொடுக்க விரும்பவில்லை. திருந்துவதற்கு கவுன்சிலிங் கொடுத்தால் நல்லது என்று விரும்புகிறோம். தினமும் அவன் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், திருடனாகி விடுவானோ என்று பயமாக இருக்கிறது.
"பணத்திற்காக எதையும் செய்வேன்...' என்று மிரட்டுகிறான். இந்த நிலைமை நீடித்தால், மகனை இழந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. என் மகனின் வாழ்க்கைக்கு, ஒரு நல்ல வழியை கூறுங்கள் அம்மா.
இப்படிக்கு
அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு,
உன் கடிதம் படித்து விவரமறிந்தேன்.
உன் வீட்டுப் பிரச்னை, பெரும்பாலான பணிக்கு செல்லும் தம்பதியினர் வீடுகளில் நடப்பது தான். குழந்தைகள் வளர்ப்பை, வீட்டின் மூத்த குடிமக்களிடம் விடுவது, அவர்களின் இருப்பை அங்கீகரிக்கும் செயல் என்றாலும், சில பல பக்க விளைவுகளையும், நாம் சந்தித்தே ஆக வேண்டும்.
குழந்தைகள் வளர்ப்பில் தான், குழந்தைகளுக்கும், அதன் பெற்றோருக்கும் பரஸ்பரம் பாசம் மலர்கிறது. பிறந்ததிலிருந்து பதினொரு வயது வரை, உன் மகன் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்திருக்கிறான். அதனால், உண்மையான பெற்றோர் மீது, அவனுக்கு அன்பு, பாசம், மதிப்பு, மரியாதை இல்லாமல் போயிருக்கலாம்.
சில பெற்றோர், குழந்தைகளை, உண்டு உ<றைவிடப்பள்ளியில் விட்டு விடுகின்றனர். நீயோ, குழந்தைகளை, தாத்தா - பாட்டியிடம் விட்டு இருக்கிறாய். விடுதி மற்றும் தாத்தா, பாட்டி கண்டிப்பில் வளரும் போது, ஒழுங்காக வளரும் குழந்தைகள், மீண்டும் பெற்றோரின் கட்டுப்பாட்டுக்கு வரும்போது, கலகக்காரர்கள் ஆகின்றனர். ஆயுள் முழுக்க, "நீயா எங்களை வளர்த்த? ஹாஸ்டல்லல்ல விட்ட... தாத்தா, பாட்டி கிட்டல்ல விட்ட... பெற்றோருக்குரிய பொறுப்பை தட்டிக்கழித்த சுயநலவாதி நீ...' என சொல்லிக் காட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.
தண்ணீருக்குள் அமுக்கிய பந்து, அதே சக்தியுடன் நீருக்கு வெளியே பாயும். அதுபோலத் தான் கடும் கண்டிப்புடன் வளரும் குழந்தைகள், அந்த கண்டிப்பிலிருந்து வெளியே வரும்போது, மோசமான நடத்தைக்கு தாவி விடுகின்றன.
தாத்தா - பாட்டி கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறும் போது, உங்கள் மகன் ஆறாம் வகுப்பு படித்திருக்கிறான். ஏழாம் வகுப் பிலிருந்து, பத்தாம் வகுப்பு செல்வதற்குள், அவனுக்கு பல தீய நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில், நீ, அவனை சரியாக கவனித்து வளர்க்கவில்லை என நம்புகிறேன். மகன், பெற்றோர் உறவு, தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் இருந்திருக்கிறது. பிறந்ததிலிருந்து, 11 வயது வரை குழந்தையை வளர்க்கும், தார்மீக கடமையிலிருந்து தவறியதால், உன் கட்டுப்பாட்டுக்கு வந்த அவனை தட்டி கேட்க முடியாமல் போயிருக்கிறது.
"டிவி' சினிமா, தீய நண்பர்கள் சேர்க்கை, வயது கோளாறு, பெற்றோரை பழிவாங்கும் வெறி, இவையே உன் மகன் கெட காரணம்.
உன் மகனை திருத்த, என்னென்ன செய்யலாம் என்பதை ஆராய்வோம்.
தாத்தா - பாட்டி முன், மகனை ஆஜர்படுத்தி, மனவேற்றுமைகளை பேசிக் களை. உன் அப்பாவுக்கு தெரிந்தால், நாலு தெருவிற்கு தெரியும் படி செய்து விடுவாரே என்கிற பயம் தேவை இல்லை. பேரன் விஷயம் என்பதால், ரகசியம் பாதுகாப்பார். மீண்டும் தாத்தா கண்டிப்பில் படிக்கத் தயாரா என்று மகனைக் கேள்.
பணம் கேட்டு தகராறு செய்யும் மகனுடன் சண்டை போடும் நோக்கம் இல்லாது, இதம் பதமாய் பேசி பார்க்கலாம். தீய நண்பர்களின் பட்டியல் எடுத்து, அவர்களுடன் தனியாக பேசி, அவர்களை உன் மகனிடமிருந்து கத்தரித்து விடலாம்.
உன் மகன் மதிக்கும் ஆசிரியர் யாரையாவது ஒருவரை விட்டு, கவுன்சிலிங் கொடுக்கச் சொல்லலாம். எஜூகேஷன் கவுன்சிலிங் கொடுக்கும் நபரை தேடிப்பிடித்து, உங்கள் மகனுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம். டிஅடிக்ஷன் கவுன்சிலிங்கும் கொடுத்து பார்க்கலாம்.
குடும்பத்தோடு குலதெய்வம் கோவிலுக்கு போய் வா. மகனின் விஷயத்தை முழு நம்பிக்கையுடன் அணுகு. மகன் விஷயத்தை சரி செய்யும் போது, மகளையும் கவனித்துக் கொள். அவளும் தாத்தா - பாட்டி கண்காணிப்பில் வளர்ந்திருக்கிறாள். அதனால், அவளுக்கும் உன் மீது அதிருப்தி ஒளிந்திருக்கக்கூடும். மகளுடன் அதிக நேரம் செலவிடு. மகனையும் - மகளையும், தாத்தா - பாட்டி வீட்டில் விட்டு வளர்த்ததற்கான நியாயங்களை அவளுக்கு உணர்த்து. அவள், அந்த நியாயங்களை அண்ணனுக்கு தனியாக உணர்த்துவாள்.
உன் மகனின் பிரச்னை தற்காலிகமானதே. தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டு, நல்ல வேலைக்கு போவான் உன் மகன். உன்னுடைய கேள்வியும், என்னுடைய பதிலும், பணிக்கு செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை விடுதியிலோ அல்லது பிறர் கண்காணிப்பிலோ வளர விடுவதை நிறுத்த உதவும் என நம்புகிறேன்.

என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (74)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siva. - Gobi,இந்தியா
15-ஜூலை-201207:47:59 IST Report Abuse
siva.  swami - chennai,இந்தியா நீங்கள் கூறியது சரி, . நன்றி .
Rate this:
Share this comment
Cancel
SIVA - chennai,இந்தியா
14-ஜூலை-201220:40:43 IST Report Abuse
SIVA பிரியா எந்த நாட்டுக்கு வேணும்னாலும் போங்க......சவூதிக்கு மட்டும் போகாதீங்க.....வாழ்க்கையே நரகம் ஆகிடும்......நரகத்தை நேர்ல பார்க்கணும்னா அங்க போங்க...நான் அங்க இருந்தேன் சில காலம்....எனக்கு கொஞ்சம் கூட புடிக்கலை...அங்கு வாழும் மனிதர்களும் மோசமானவர்கள்...உங்கள் நண்பர்கள் யாராவது சவுதியில் இருந்தால் நேரில் கேட்டுபாருங்கள்...சொல்வார்கள்......
Rate this:
Share this comment
Cancel
rasaudi - Riyadh,சவுதி அரேபியா
14-ஜூலை-201218:43:07 IST Report Abuse
rasaudi Ms.Priya, Please don’t come to Saudi arabia. here the situation is very bad. Even you can not speak with local saudis. What ever they want to do they can do it. You can not complaint to police also. Always police will support to local saudis. Here one more problem. Another one type of Saudis are here. They are black Saudis. They are uneducated and poor. They can pluck everything from you and they will kidnap the expatriates girls and push into their cars. Please try for other countries. These local Saudis do not know the manners. And one thing you know they very cruel to the ladies. This is the reason Philipines and Indonesia governments not sing their female workers into Saudi Arabia .
Rate this:
Share this comment
Cancel
Venku - T.N,இந்தியா
14-ஜூலை-201207:56:25 IST Report Abuse
Venku swami - chennai,இந்தியா ========== நீங்கள் கூறியதும் சரியாகவும் , அருமையாகவும் உள்ளது. நன்றி
Rate this:
Share this comment
Cancel
swami - chennai,இந்தியா
13-ஜூலை-201220:06:41 IST Report Abuse
swami தாயார் வீட்டில் இருந்து அன்பை பொழிய முடியாது, பொருளாதாரம் பாதிக்கும் என்று ஒருவர் சொல்கிறார்.குழந்தைகளுக்கு தேவையான அன்பை,பராமரிப்பை, அரவணைப்பை ஒரு பெண் நிராகரித்து விட்டு வேலைக்கு செல்வது கொடுமையான விஷயம். பொருளாதாரம் நல்லாயிருக்கும் பெண்கள் கூட, தாய்ப்பால் கூட கொடுக்காமல் சின்ன சிசுக்களை காப்பகத்தில் விடுகின்றனர். இது மன,உடல் நோய் கொண்ட சமூகத்தை பிற்காலத்தில் உருவாக்கும்.பாட்டி ,தாத்தாக்கள் குழந்தைகளை செல்லம் கொடுத்து குட்டிசுவரக்குவதில் பேர் போனவர்கள். இதோட விளைவுதான் முரட்டு பிள்ளைகள். சின்ன வயதிலிருந்தே, கண்டிப்பும்,கனிவும் சரிவிகிதத்தில் கலந்து பெற்றோரால் மட்டுமே வளர்க்கப்படும் குழந்தைகளே எதிர்காலத்தில் நல்லவர்களாக,வல்லவர்களாக வர முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Venku - T.N,இந்தியா
13-ஜூலை-201218:11:43 IST Report Abuse
Venku ராமராசு -[ கரூர்] நீங்கள் கூறியது , சரியாகவும் அருமையாகவும் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Venku - T.N,இந்தியா
13-ஜூலை-201217:58:14 IST Report Abuse
Venku ராமராசு - கரூர்,இந்தியா -WHAT YOU ARE SAYING IS VERY CORRECT THANKS
Rate this:
Share this comment
Cancel
ஹசன் அப்துல்லாஹ் - jeddah,சவுதி அரேபியா
13-ஜூலை-201217:57:07 IST Report Abuse
ஹசன் அப்துல்லாஹ் பிரியா, சவுதி அரபியாவில எந்த சிட்டியில உங்களுக்கு வேலை கிடைத்திருக்கு? ரியாத் & ஜெட்டாஹ் போன்ற பெரிய சிட்டியில் வேலை கிடைத்தால் மிக நன்று, பெண்கள் விசயத்தில் இங்கு மிகுந்த பாதுகாப்பு உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
13-ஜூலை-201210:12:05 IST Report Abuse
Divaharan பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து பின் கல்யாணம் செய்து கொடுக்கிறார்கள்.. இது எவ்வளவு கஷ்டமான வேலை ? இது போதாது என இவர்கள் தங்களுக்கு பிறந்த பிள்ளைகளையும் தங்கள் வயதான பெற்றோரே வளர்க சொல்லிவிட்டு பின் ஏன் வருத்த படவேண்டும்? அவர்களுக்கு ஓய்வு வேண்டாமா? அதிக சுய நலம் இருக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
ச.ச.குமார் - ஜுபைல்சவுதிarabia,இந்தியா
13-ஜூலை-201209:59:52 IST Report Abuse
ச.ச.குமார் மேடம் பிரியா ப்ளீஸ் டெல் எந்த மருத்துவ கல்லூரில் உங்களுக்கு வேலை கெடசிருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.