E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2012
00:00

உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர், அமெரிக்காவின் கொலராடோவில் அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 7,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோலர் கோஸ்டரில் பயணம் செய்வது, பயங்கர, "த்ரில்லிங்'கான அனுபவமாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இதை ஏற்படுத்தி இருக்கின்றனர். அடர்ந்து, உயர்ந்த மலைப் பிரதேசம், செங்குத்தான பள்ளத்தாக்கு ஆகியவற்றின் மீது, இந்த ரோலர் கோஸ்டரின் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
பாறைகள், பிரமாண்ட மலைகள், அடர்ந்த வனப் பிரதேசம் ஆகியவற்றின் வழியாக, இந்த ரோலர் கோஸ்டர் வழித்தடத்தை அமைப்பது, மிகப் பெரிய சவாலாக இருந்ததாக குறிப்பிடும் நிர்வாகிகள், இதற்காக, 57 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனாலும், வாழ்க்கையில் எந்தவித சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ள, துணிச்சலான மனிதர்கள், இந்த ரோலர் கோஸ்டரில் பயணிப்பதற்காக, வரிசை கட்டி நிற்பதால், இதற்காக போடப்பட்ட முதலீட்டை, இன்னும் சில மாதங்களிலேயே எடுத்து விடுவோம் என்றும் உறுதியுடன் கூறுகின்றனர்.
"இந்த ரோலர் கோஸ்டரில், உச்சிப் பகுதிக்கு செல்லும்போது, கொலராடோ நகரையும், அதைச் சுற்றியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளையும், துல்லியமாக பார்க்க முடிவதோடு, வயிற்றுக்கும், தொண்டைக்கும் நடுவே, உருவமில்லா ஒரு உருண்டையும் உருளும், பயங்கரமான அனுபவத்தையும் உணர முடிகிறது...' என்கின்றனர், இதில் பயணம் செய்தவர்கள்.
ஜோல்னா பையன்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - மதுரை,இந்தியா
09-ஜூலை-201213:58:56 IST Report Abuse
மணி சூப்பர் இதுல போகணும்னு ஆசையா இருக்கு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.