அண்மையில் சர்வாணி சங்கீத சபா டிரஸ்ட் சார்பில், இளம் கலை<ஞர் ஹரீஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. மயிலை ராக சுதா கலையரங்கத்தில், ஹரீஷ் உயர்வான கற்பனைகளுடன் சிறப்பாக பாடினார். இவரது குரு, விஜய் சிவா காம்போஜி ராகத்தில் அருமையான அடதாள வர்ணத்துடன் அமர்க்கள துவக்கமாக இருந்த இந்த நிகழ்ச்சியில், ரீதிகவுளா ராகத்தில் "ராகரத்ன மாலிகஜே' சுப பந்துவராணியில் ஸ்ரீ சத்யநாராயணம் - தேவ காந்தாரியில், பாபநாசம் சிவனுடைய சாரதே போன்ற அதிகம் செவிகளில் அடிக்கடி விழாத, சிறந்த கீர்த்தனங்களைப் பாடினார். கச்சித சங்கதிகள் நிரவல் - ஸ்வரங்கள் கற்பனைகள் பாராட்டும்படி இருந்தன.
சுப பந்துவரானி - மோகனம் (எவரூரா) - பிரதான சாவேரி ராக ஆலாபனைகள் சிறந்த மனேதர்மத்துடன் அணுகுமுறை சிறப்பாக இருந்தன. நயமான கீர்த்தனங்கள் சிறப்பாக கையாண்டு வழங்கப்பட்டன. இளம் ராகுல் வயலின் வாசிப்பும் படு ஜோர். கூடவே கும்பகோணம் சுவாமிநாதனுடைய லய அனுசரணையும், ஆர்வமும் பளிச்சிட்ட லயம் நிகழ்ச்சிக்கு கூடுதல் மெருகை தந்தது.
சிகரங்களைத் தொடஅதிக முயற்சி தேவை
நிறைய மேடைகளில் பாடி வரும், ராமகிருஷ்ணமூர்த்தியின் இசை நிகழ்ச்சியை மயிலை நாதோபாசனா அறக்கட்டளையின் சார்பில் நடந்தது. இழுந்த இழுப்பிற்கு வளைந்து கொடுக்கும், சாரீர வசதி மேல் ஸ்தாயி சுருதி சுத்தங்கள் எல்லாமே இவருக்கு கூடுதல் சீறப்பம்சமாகும்.
பந்துவராணி ராக விரிவுகள் தொடர்ந்த சுவாதித் திருநாளின் சாரசாட்ச இதன் நிரவல் ஸ்வரங்கள் நிகழ்ச்சியில் படு அமர்க்களம் ரசிகர்கள் மகிழ்ந்தனர். ஆனந்த பைரவியில் தியாகராஜ யோக வைபவம் (ஸ்ரீ தீட்சிதர்) கிருதியில் காலப்பிரமாணம் சற்றே தள்ளாடியது. வரமுராக துணை புரிந்தருள் (பாபநாசம் சிவன்) கூடுதல் மதுரம்.
அசாத்திய குரல் - திறமை உள்ள இவர், சற்றே வேகத்தைக் குறைத்து ஆங்காங்கே வேகத் தடைகளை சரியாக செய்து கொண்டு, ஆசுவாச இடைவெளி தந்து இசை வழங்கினால், சிகரங்களைத் தொட முடியும். இவரால், இசை குரு பி.எஸ். நாராயணசாமியின் மாணவர் இவர். எச்.என்.பாஸ்கருடைய நயமான வயலின் வாசிப்பும், டி.வி.என். வைத்தியநாதனின் மிருதங்க வாசிப்பும் நிகழ்ச்சியில் சிறப்பாக இருந்தன. இந்த நிகழ்ச்சி இசையன்பர் சி.வி.முரளி தன் பெற்றோருக்கு அஞ்சலியாக ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சி.
- மாளவிகா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.