என்ன வளம் இல்லை நம் திருநாட்டில் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2012
00:00

அந்த, "எக்ஸ்க் யூஸ்மி'யில் இனிமை இல்லை; இளமை இல்லை; கரகரப்பு. வேண்டுதலுக்குப் பதில் சின்னதாய் ஒரு விரட்டல்; அத்துடன் அலட்டலும்.
திரும்பிப் பார்த்தால் தடியாய், தாட்டியாய், முரடாய், முகத்தில் எண்ணெய் வழிந்து... ஒருவன்!
அவன்,"எக்ஸ்க்யூஸ்மி' என்று சிரிக்க, விகற்பம். சிரித்திருக்கவே வேண்டாம். காவிப்பற்கள்! கழுத்திலும், காதிலும் சின்னதாய் உருளைகள் வழுக்கின. மொட்டைப் போட்ட மண்டை, குறுந்தாடி.
அவனை பார்க்கப் பார்க்கக் கொஞ்சம் கலக்கம் தான்.
"ம்...?'
"டு யூ ஹாவ் டாலர்?' என்று அவன் புன்னகைக்க வெலவெலத்துப் போயிற்று.
இவர்களை பற்றி, நண்பர்கள் நிறையவே மிரட்டியிருக்கின்றனர். சிலர் மிருகங்கள் போல எதுவும் செய்வர்.
நண்பர் சம்பத், நியூயார்க்கின் டைம்ஸ்கொயர் அருகே நடந்து கொண்டிருந்தபோது, திடீரென, எதிரே ஒருவன் எதிர்ப்பட்டு, என்னவோ கேட்டிருக்கிறான். அவருக்கு எதுவும் விளங்கவில்லை.
அவனிடம் வம்பு ஏன் என்று, அருகில் தங்கியிருந்த ஓட்டலுக்கு வேகவேகமாய் நடந்திருக்கிறார். அவனும் விடுவதாயில்லை, முறைத்துக்கொண்டு பின் தொடர்ந்திருக்கிறான் வேக வேகமாய்!
இவருக்கு படபடப்பு. ஓட்டலை அடையும் முன், நிச்சயம் இவனிடம் மாட்டி விடுவோம், என்ன செய்யலாம் என்று யோசித்தவர், சட்டென அருகிலிருந்த கடைக்குள் புகுந்தார்.
அவனும் விடுவதாயில்லை. கடைக்காரர் என்னவென்று விசாரிக்க, இவர் விவரம் சொல்ல, அந்தக் கடைக்காரர், "கவலைப்படாதீர்கள். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்று உள்ளேயிருந்து துப்பாக்கி எடுத்து குறி வைக்க, ஓடியே போய் விட்டானாம்.
சம்பத்திற்கு, போன உயிர் திரும்ப வந்தது. கடைக்காரர், "நியூயார்க் குற்ற நகரம். இங்கு பல நாட்டு கயவர்களும், அயோக்கியர்களும் ஐக்கியம். அதனால், தனியாக எங்கும் வெளியே செல்லாதீர்கள்...' என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
"அவன் போயிட்டான். நீங்கள் தைரியமாய் ரூமுக்கு போகலாம்...'
"வெளியே நிற்பானோ என்னவோ?'
"இல்லை. எளியவர்களிடம் பறிக்க பார்ப்பர். எதிர்த்தால் ஓடி விடுவர்! இங்கு எடுபடாது என்று தெரிந்ததும், அடுத்த நபரை பார்க்கப் போயிருவான்...'
லேனா தமிழ்வாணன் கூட, சொல்லியிருந்தார்...
"வெளியே செல்லும் போது அவசியம், குறைந்தபட்சம் ஐந்து டாலராவது கையில் வைத்திருங்கள். அதிகம் வேண்டாம். ஒன்றிரண்டு போதும்.
"எங்காவது, யாராவது மிரட்டினால், பயப்பட வேண்டாம். உட@ன யோசிக்காமல் கையிலிருக்கிற, ஐந்து அல்லது சில்லரை டாலர் நோட்டுகளை எடுத்து நீட்டுங்கள். வாங்கிக் கொண்டு போய் விடுவான். பிச்சை!
"ஒருவகை அதிகாரப் பிச்சை! பணம் கொடுக்கவில்லையென்றால் கத்தியால் குத்தி விடுவர் அல்லது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவன் பாட்டிற்குப் போய் விடுவான்' என்று எச்சரித்திருந்தார் லேனா.
@ராட்டில் சரி, வசதி படைத்தவர்கள் புழங்கும் கிளப்களிலுமா! இதை இவர்கள் கேட்க மாட்டார்களா? சந்தோஷம் அனுபவிக்க வரும் இடத்தில் வழிப்பறிக்காரர்களை எப்படி அனுமதிக்கின்றனர்?
"ஹாவ் டாலர்...'
திரும்பக் கேட்கிறான். நம்மை விட மாட்டான் போலிருக்கிறதே! என்ன செய்யலாம்? அஞ்சு எடுத்து அழுதிருவோமா?
அதற்குள் நண்பர் இடைப்பட்டு, "யு வான்ட்... சேஞ்ச்?'
"கோ டு கவுன்ட்டர்! யு வில் கெட்!'
"ஓக்கேய்... தாங்க்யூ!'
அவன் கடந்து போனதும்,"எதுக்கு சேஞ்ச் கேட்டான்?' என்றேன் மிடறு விழுங்கியபடி.
"வேறு எதற்கு? ஒவ்வொரு டாலராக இதுங்களுக்குத் தானம் பண்ணத்தான்...'
ஒரு டாலரின் மகோற்சவம் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. தானம்தானே! பாவம்! கஷ்டப்பட்டு ஆடுதுங்க! நாமும் சில்லரை மாற்றி வைத்துக் கொள்ளலாமோ என்று தோன்றிற்று.
நண்பர், "இரு. நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வர்றேன்!' என்று கிளம்பினார். தெரியாத முகங்கள் பல இருந்தாலும், பழகினவர்களை வைத்து அங்கே அமர்ந்திருப்பதில் கொஞ்சம் சங்கோஜம்தான். நண்பர் நகர்ந்ததும் கொஞ்சம் ஆசுவாசம். சுதந்திர உணர்வு!
அதற்குள் மேடையில் வேறு கோஷ்டி நெளிய ஆரம்பித்திருந்தது. இவர்கள் மேக் - அப், ஜிகினா, முடி, துக்னியூண்டு என்றாலும், உடைக்கு எத்தனை செலவு செய்வர்?
அவர்களுக்காகச் சற்று விசனப்பட்ட போது, திரும்ப, "எக்ஸ்க்யூஸ்மி!'
ஐயோ... மறுபடியுமா?
திரும்பினால்... பஞ்சு சரீரத்துடனும், தகதகப்புடனும் ஒரு பெண்! அடர்ந்த, பரப்பின கூந்தல். புருவம், உதடுகளில் ஜிகினா! கொஞ்சமே கொஞ்சமாய் உடை! பம்பரத்துக்கும், ஆம்லேட்டுக்கும் அஞ்சாத பளபள வயிறு.
அவள் மிக அன்யோன்யமாய் அருகில் நெருங்கி அமர்ந்து, "ஹாய்!' எனப் பேச ஆரம்பித்தாள். சத்தியமாய் எதுவும் விளங்கவில்லை. மயக்கம், கலக்கம். இங்கே என்ன நடக்கிறது? இவளுக்கு என்ன வேண்டும்? டவுட் தனபாலாகி விழித்தேன்.
அவள் @பசியது என்னவோ, ஆங்கிலம் தான்; ஆனால், புரியவில்லை. நண்பர் டாய்லட்டில் இன்னும் என்ன செய்கிறார்? வாய்யா சீக்கிரம்!
"டு யு லைக் டு பன் வித் மி?'
என்ன கேட்கிறாள்? மலங்க, மலங்க விழிக்க, அதற்குள் நண்பர் வந்து, அனுபவத்தின் அடிப்படையில் புரிந்துகொண்டு குசும்பல்! சிரித்தாள்!
அவள் எழுந்து கையைப் பற்ற,
"ம்கூம்' என்று உதறினேன். அதற்குள் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். இது நம்பு குறிச்சி... குக்கிராமம்!
தேறாது என்று பக்கத்து மொழு மொழு நபரிடம், "எக்ஸ்க்யூஸ்மி' யை ஏவினாள். அவன் எகிப்தியன். ஏற்கனவே நடனப் பாவைகளுக்கு, கண்டமேனிக்கு டாலர்களை திணித்துக் கொண்டிருந்தவன்.
"அவ என்ன கேட்டா?'
"கேட்கலை... கூப்பிட்டா?'
"எதுக்கு?'
"பிரைவேட் ÷ஷா. இங்கே மொத்த பேருக்கு ஆடறதை உள்ளே தனியா...'
"அட கொடுமையே...'
"என்ன கொடுமை? கொல்லம்பட்டறைக்கு போனா இரும்பு அடிக்கணும்! பாருக்குப் போனா தண்ணி...'
அதற்குள் அப்பெண், அந்த எகிப்தியனின் தோளைக் கவ்வியபடி உள்ளே போவது தெரிந்தது. அப்புறம் விசாரித்தபோது, பிரைவேட் ÷ஷா - ஐந்து நிமிடத்திற்கு, 25 டாலர்! அரை மணி நேரம் என்றால், 125. காரண காரியங்களைப் பொறுத்து, 200 வரை கட்டணம்!
நவம்பரின் கடைசி வியாழன் அமெரிக்கா முழுக்க, "தேங்க்ஸ் கிவ்விங்' நாளாகக் கொண்டாடப்படுகிறது. சீசன் மாறி, குளிர் தாக்கும் நேரமது.
நம்மூர் பொங்கல் போல அறுவடை சீசனில் கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக இந்தப் பண்டிகை அமைக்கப்பட்டிருக் கிறது. இதில், சிறியவர்கள் முதியோருக்கும், முதியவர்கள் பிள்ளைகளுக்கும் நன்றி சொல்வதும் சிறப்பு.
அந்த நாளில் குடும்பத்தினர் சேர்ந்து உணவு உண்ணுவதுடன், இல்லாதவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பது மரபு. எல்லாம் நம் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ஈத் போலத்தான்!
பொதுவாக, எந்த மதத்துப் பண்டிகை என்றாலும், விசேஷத்திற்காகத் தயாரிக்கப்படும் உணவு வகைகளை, ஏழைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்கிற ஈகைப் பழக்கத்தை வலியுறுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களின், "தேங்க்ஸ் கிவ்விங்' சாப்பாட்டில் பன்றிக்கறி முதல் பலதும் அடக்கம்.
இந்த வாரத்தில் நம்மூர் ஆடித் தள்ளுபடி போல அங்கும் தள்ளுபடி! குறிப்பாக, எலக்ட்ரானிக் பொருட்கள்! அதுவும் வருகிற எல்லாருக்கும் கிடையாது. ஸ்டாக் உள்ள மட்டுமே! அந்த ஸ்டாக் கொஞ்சமாகத்தான் வைப்பர்.
இதனால், கடையில் தள்ளுமுள்ளு! எத்தனை சம்பாதித்தாலும், எத்தனை படித்திருத்தாலும், இலவசம் அல்லது தள்ளுபடி என்றால், எந்த ஊரில் என்றாலும் இதே நிலைமைதான் போலிருக்கிறது.
அந்தக் குறிப்பிட்ட ஸ்டாக்கை அள்ளி வந்து விட வேண்டி, மக்கள் நடுசாமத்திலேயே போய் இடம் பிடித்து விடுகின்றனர். அப்போது பயங்கரக் குளிர். அதிலிருந்து தப்பிக்க, கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் கியூவில் அமர்ந்து தூங்க, கொட்டகை அமைத்துத் தருகின்றனர். அதற்கும் போட்டா போட்டி!
அமெரிக்கா பணக்கார, மெய்ஞான நாடாயிற்றே. அங்கும் ஜோதிடம் ஜாதகமெல்லாம் உண்டா?
— தொடரும்.

என்.சி. மோகன்தாஸ்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என் .சி.மோகன்தாஸ் - kuwait,இந்தியா
21-ஜூலை-201204:18:37 IST Report Abuse
என்  .சி.மோகன்தாஸ் எல்லோருக்கும் வணக்கம் .யாரையும் சிருமைபடுதனும் என்கிற எந்த எண்ணமும் எனக்கு இல்லை. நானும் ,அறிந்த சிலரும் எதிர்பார்க்காமல் சந்தித்து பாதிக்கப்பட்ட சில சம்பவங்கள் புதிதாய் நம் ஊரிலிருந்து வருபவர்களுக்கு உஷாராக இருக்க உதவும் என்பதாலையே தெரிவித்தேன். விஷயத்தை அப்படியே பரிமாறினால் சுவைக்காது என்பதால் கொஞ்சம் spicy சேர்த்து பிரியாணியாக தர முயன்றததுக்கு செம மாத்து ! இன உனர்வாக இது பார்க்கப்படும் என்று நிச்சயம் - நினைத்து பார்க்கவில்லை . குறிப்பிட்ட வாசகங்கள் கட்டுரையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். குவைத்தில் என்னுடன் இந்த இன வகை நண்பர்களும் வேலை பார்கிறார்கள். அவர்களிடம் என் அனுபவங்களை சொன்னபோது அவர்கள் கோபிக்கவில்லை. எழுதி புதியவர்களுக்கு தெரிவயுங்கள் என்று அவர்களே தூண்டியதால் - இது வித்தியாசமாக பார்க்க படாது என்றுதான்...எழுத முன்வந்தேன் . என் short விசிட்டில் அறிந்த விசயங்கள் தவறாக அல்லது கவன குறைவாக கம்மியாக இருக்கலாம் .ஆனால் நிச்சயம் நோக்கத்தில் குற்றமில்லை.நேர்ந்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்கும் அதே நேரத்தில் - கட்டுரையில் எவ்வளவோ நல்ல விசயங்களை சொல்கிறோமே - அதை பற்றி தோழர்கள் வாய்திறக்க மாட்டர்களா என்கிற ஏக்கம் . தவறுகள் சகஜம். அமெரிக்காவை முழுதாய் யாராலும் அறிந்து எழுதிவிடமுடியுமா? தவறுகளை சுட்டிகாட்டுங்கள்- அதற்காக எதிரியாக கருதி தனிமனித தாக்குதல்கள் வேண்டாமே..! நிச்சயம் தவறுகள் களையப்படும். உங்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களையும் தகவல்களையும் கூட தெரிவயுங்கள் -அவைகளையும் இந்த கட்டுரையில்- மற்றும் பிறகு வரும் புத்தகத்தில் சேர்க்கலாம். தவறுகளை சுட்டி காட்டின மற்றும் என்னை துவைத்து காயவைத்த அத்தனை பெருந்தகைகளுக்கும் நன்றி . -N .C .மோகன்தாஸ்
Rate this:
Share this comment
Cancel
நட்டு - சென்னை,இந்தியா
20-ஜூலை-201200:21:40 IST Report Abuse
நட்டு யோவ் லாடு லபக்கு தாசு, நீ கருப்பன் என்று கேவலமாக எழுதியது அமெரிக்காவின் கருப்பு நிறத்தோல் உள்ள பிரஜைகளை பற்றி மட்டுமா அல்லது நம்மூரில் உள்ள கருப்பு நிறத்தோல் உள்ள பிரஜைகளுக்கும் பொருந்துமா?
Rate this:
Share this comment
Cancel
ராம் - Sugar land,TX,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201223:50:01 IST Report Abuse
ராம் 1 ) Thanksgiving = Turkey...இது உலகம் எல்லாம் தெரிந்த விஷயம் நம்ம என்.சி. மோகன்தாஸ்-க்கு தெரியல ... 2 ) 300 டாலர் தந்து உ.பா. அருந்தும் உங்களால் 1 டாலர் தர இயலாதது உங்கள் குணத்தையே காட்டுகிறது.. 3 ) கருப்பர்கள் அடிப்படையாகவே நல்லவர்கள் மற்றும் நட்பு பாராட்டுபவர்கள் ... தங்களுக்கு தமிழே தடுமாறுகிறது பிறகு எப்படி கருப்பர்கள் பேசும் ஆங்கிலம் புரியும்.. அவர்களின் பேச்சு நடை மிகவும் வேறுபட்டது .. சென்னை தமிழ் போன்றது ஆப்ரிக்கா அமெரிக்க மக்களின் ஆங்கிலம் .. ஆம் .. அவர்கள் ஆப்ரிக்கா அமெரிக்க மக்கள் .. கறுப்பன் என்று நீங்கள் பொது இடத்தில் பேசினால் கட்டாயம் உதை படுவீர்கள். மேலும் உங்களை அமெரிக்க போலீஸ் கைதும் செய்யலாம் .. 4 ) Thanks giving தள்ளுபடி விற்பனை மிகவும் விலை குறைந்த விற்பனை.. நம்ம நாடு போன்று 100 ரூபாய் பொருளை 200 ரூபாய் என்று sticker ஒட்டி 50 % தள்ளுபடி என்று விற்பது இல்லை.. கடைசியாக ஒரு கேள்வி நிஜமாக நீங்கள் அமெரிக்க சென்றீர்களா அல்லது படம் பார்த்து கதையா ?
Rate this:
Share this comment
Cancel
thamizh Madayan - வெத்தலப் பாக்கம் (Bethel Park),யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201216:30:23 IST Report Abuse
thamizh Madayan அய்யா மோகன் தாசு, இங்கே கருப்பனுக்கு பதிலா பள்ளன், பறையன், பாப்பான், செட்டி, முதலி, மாதிரி வார்த்தைகளைப் போட்டு எழுதினதை திரும்பி படியுங்க, உங்களுக்கே புரியும் எவ்வளவு மோசமா எழுதியிருக்கீங்கன்னு.
Rate this:
Share this comment
Cancel
sugumaran - paris,பிரான்ஸ்
17-ஜூலை-201216:55:56 IST Report Abuse
sugumaran "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்பது எல்லோருக்கும் தெரிந்த பழமொழி! ஆனால் தினமலரில் மட்டுமல்ல, மணியன், தமிழ்வாணன் எழுதிய பிரயாண கட்டுரைகளில் கூட இந்த மாதிரியான பித்துக்குளித்தனமான வாசகங்கள் இடம் பெற்று இருக்கும். ஊர் சுற்றும் பிரயாணிகள் தங்கள் சொந்த கற்பனைகளையும் சேர்த்து சுவாராசியமாக, வாசகர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக கண்டதையும் எழுதுவது போல இந்த அறிவு ஜீவி (அரை வேக்காடு) மோகன்தாஸ் எழுதுகிறது. ஆரம்பத்திலிருந்தே இந்த ஆள் இப்படித்தான் எழுதுகிறார். கருப்பர்கள் அடிப்படையாகவே நல்லவர்கள்!!! எந்த கருப்பனாவது அயல் நாட்டை அடிமை படுத்தி சுரண்டி இருக்கிறானா? இயற்கையாகவே வெள்ளை தோலுக்கு நாம் அடிமை. அதன் எதிரொலிப்பு தான் இந்த கட்டுரை. இந்தியர்களை மிகவும் மதிக்கும் நிறைய கருப்பர்களை நான் சந்தித்து இருக்கிறேன். சில நாட்கள் சுற்று பயணம் செய்து விட்டு யாரையும், அவர்கள் பழக்க வழக்கங்களையும் குறை கூற வேண்டாம்!!!. வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை நடைமுறை விளங்கும். பிறகு உண்மையை எழுதுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
anthuvan - Jakarta,இந்தியா
17-ஜூலை-201216:19:16 IST Report Abuse
anthuvan மோகன், ப்ளீஸ் respect ஆல் humans
Rate this:
Share this comment
Cancel
நிர்மல் - உச,இந்தியா
17-ஜூலை-201202:43:13 IST Report Abuse
நிர்மல் ஆசிரியர் திருந்தமாட்டாரா? தேங்க்ஸ் கிவிங் டே கு Turkey தானே!!!! இவர் என்ன புது கதை சொல்றார். அனேகமாக ஆசிரியர் Racism கேஸ் ல உள்ள போகபோறார்!!!
Rate this:
Share this comment
Cancel
மிருதுளா - நாடிக்,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201215:10:40 IST Report Abuse
மிருதுளா எழுத தெரியாத மனிதர் கையில் பேனாவும் பத்திரிகை பக்கங்களும் தந்தால் இப்படிதான் அபத்தமாய் இருக்கும்..கருப்பர்களை தங்களது போதை மருந்து வியாபரதுக்க்காகவே வேல்லியர்கள் மறைமுகமாக ,நேரிடையாக தயார் செய்கிறார்கள்..பாதி அமெரிக்கனுக்கு போதை வஸ்து இல்லைஎன்றால் தூக்கமே வராது...அதற்கு தங்களின் தேவைக்கு இவர்களை பலி கொடுக்கிறார்கள்..நான் ந்யூ யார்க் வீதிகளில் முதன்முறை வழி தெரியாமல் சிக்கி கொண்டபோது என்னை பத்திரமாக டாக்சி பிடித்து ஏற்றி விட்டது ஒரு கருப்பு சகோதரன்தான்..நான் வழி கேட்ட எந்த அமெரிக்கனும் நின்று கூட பதில் சொல்லவில்லை..
Rate this:
Share this comment
Cancel
R. KUMARAVEL - chennai,இந்தியா
16-ஜூலை-201214:10:18 IST Report Abuse
R. KUMARAVEL எழுத்தாளர் அந்த கேள்ளிகை அரங்கத்தில் இருந்ததே தவறு . பின் மற்றவர்களை நக்கல் செய்வது எதற்கு.கருப்பர்கள் மட்டும் அல்ல எல்லா நிறத்து மனிதர்களிலும் தவறு செய்பவர்கள் உண்டு . இது போன்ற தேவை அற்ற பதிவுகளை விடுத்து அவர்களிடம் உள்ள நல்லவற்றை எழுதலாம் .உதாரணம் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல் அன்னபறவையாக இருப்பதே நலம்
Rate this:
Share this comment
Cancel
Gokzz - Pollachi,இந்தியா
16-ஜூலை-201213:55:52 IST Report Abuse
Gokzz அட விடுங்கப்பா, NC Mohandoss எந்த கருப்பன் கிட்ட மாட்டி படாத பாடு பட்டாரோ...அந்த கடுப்புல மாடுன்னு சொல்லி இருக்கார்...இத போய் பெருசு பண்ணிக்கிட்டு..ஹா ஹா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.