பிளாஸ்டிக் இல்லாமலும் வாழலாம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2012
00:00

பிளாஸ்டிக், நம் கண் முன்னே வாழும் எமன். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, மனித உயிர்களுக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள, பேரழிவு சக்தி. உலகம் முழுவதும், சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 105 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு நபரும், சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 70 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக்குளை பயன்படுத்துகின்றனர்.
பிளாஸ்டிக்கை தயாரிப்பதற்கான செலவு குறைவு. மேலும், நாம் விரும்பும் எந்த ஒரு வடிவத்திலும், இதை எளிதாக உருமாற்றி விடலாம். ஆனால், இதை அழிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இன்று, கடைகளில் வாங்கும் அனைத்து பொருட்களும், பிளாஸ்டிக் பைகளில் தான் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கு கள், பொதுமக்களால் வீதிகளில் தூக்கி எறியப்படுவதன் விளைவாக, பூமிக்குள் ஆங்காங்கே புதைந்து, நிலத்தில் பெய்யும் மழை நீர், பூமிக்குள் ஊடுருவாத வகையில், மிகப் பெரிய பிளாஸ்டிக் கேடயமாக மாறி விடுகிறது. இதனால், நிலத்தடி நீர் குறைந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கடற்கரைகளில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்குகள், கடலுக்குள் செல்வதால், கடலின் சுற்றுச் சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடல் வாழ் உயிரினங்களின் உயிர்களுக்கு உலை வைக்கின்றன. இதனால் தான், "அணுகுண்டால் ஏற்படும் பாதிப்பை விட, பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு, மிகவும் பயங்கரமானது' என, நம் சுப்ரீம் கோர்ட், கடுமையான வார்த்தைகளை <உபயோகப் படுத்தியது.
ஆனால், பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை, உங்களால் ஒரு நாளாவது வாழ்ந்து காட்ட முடியுமா? ஆஸ்திரியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், இரண்டு ஆண்டுகள் பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து காட்டியுள்ளனர்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த, சாண்ட்ரா கிராவுட்வாச்சி என்ற பெண், சில ஆண்டுகளுக்கு முன், பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் ஆவணப்படத்தை பார்த்தார். அப்போதிருந்து, இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், இவருக்குள் வேரூன்றியது.
இதையடுத்து, இவரும், இவரது மூன்று குழந்தைகளும் சேர்ந்து, பிளாஸ்டிக் இல்லாமல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்தனர். தங்கள் வீட்டில் இருந்த, அத்தனை பிளாஸ்டிக் பொருட்களையும் ஓரம் கட்டினர். பல் துலக்குவதற்காக, மரக் குச்சி யால் தயாரிக்கப்பட்ட, "பிரஷ்' ஐ பயன்படுத்தினர். சமையலுக்கும், மற்ற பொருட்களை வைத்து கொள்வதற்கும் தகர டின் மற்றும் அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தினர்.
ஒரு சில நாட்களிலேயே, பிளாஸ்டிக் இல்லாமல் வாழ்வது, எவ்வளவு சிரமம் என்பது, இவர்களுக்கு தெரிந்து விட்டது. ஆனாலும், தளராத மனதுடன், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளாஸ்டிக்கையே பயன் படுத்தாமல், வாழ்ந்து காட்டினர்.
சாண்ட்ரா கூறுகையில், "பிளாஸ்டிக்காலான கழிப்பறை பேப்பருக்கு பதிலாக, வேறு எதை பயன்படுத்துவது என்பதில், பெரிய பிரச்னையாகி விட்டது. சில நாட்கள் செய்தி தாள்களை பயன்படுத்தினோம். சரி வரவில்லை. அப்புறம், இலைகளை பயன்படுத்தினோம். அதுவும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக, மறு சுழற்சி செய்யப்பட்ட பேப்பர் டவல்களை பயன்படுத்தினோம். எங்களைப் பார்த்து, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு செய்தோம்...' என்றார்.
ஏதோ... பூமியில் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், சக மனிதர் களுக்கும், உயிரினங்களுக்கும், எதிர்கால தலைமுறைக்கும், நம்மால் முடிந்த நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்ற, மிகப் பரந்த மனதுடன் வாழ்ந்து காட்டிய சாண்ட்ரா குடும்பத்தினரை, பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை.
***

- சி. சண்முகநாதன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாசு முராரி - சென்னை,இந்தியா
27-ஜூலை-201203:11:04 IST Report Abuse
வாசு முராரி ஹைதிராபாத் வெங்கட்ராகவன் அவர்களுக்கு, ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதனை ஞாபகத்தில் வைத்துகொண்டால் இந்தக் கேள்வி எழ வாய்ப்பே கிடையாது. (ஆல்=ஆல மரம், வேல் = வேப்ப மரம், குச்சி= குச்சி) போதுமா விளக்கம்.
Rate this:
Share this comment
Cancel
வாசு முராரி - சென்னை,இந்தியா
27-ஜூலை-201203:06:00 IST Report Abuse
வாசு முராரி புராண காலத்தில் ராவணன், கம்சன், துரியோதனன் போன்ற ராக்ஷசர்கள் இருந்தனர். அதாவது, ராக்ஷசர்கள் என்றால் இப்போது படங்களில் காண்பிக்கப்படும் உருவம் கொண்டவர்கள் அல்ல அவர்கள். அவர்களும் சாதாரண மனிதர்களைப் போன்ற தோற்றம் கொண்டாவர்களே. தாங்கள் பெற்ற (மற்றவர்களுக்கு) தீமையை விளைவிக்கும் அதீத எண்ணங்கள் மற்றும் செயல்களால் அவர்கள் ராக்ஷசர்கள் என்று கூறப்பெற்றனர். ஆனால், பகுத்தறிவு பேசும் இன்றைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மனித குலம் முழுவதையும் அழித்திட பிளாஸ்டிக் என்றொரு அரக்கன் உருவாகி உள்ளான். அவனை பூமிக்குள் புதைத்தாலும் தொல்லை தருவான். அதாவது பூமியின் நீர் கிரகிக்கும் தன்மையைக் குறைப்பதால் குடிக்கவும் விவசாயம் செய்யவும் பூமிக்குள் நீரே இருக்காது. அப்போது (இப்போது) பகுத்தறிவு பேசும் இந்த மனித இனம் உண்ண உணவும், குடிக்க நீரும் இன்றி மெல்ல செத்துப் பூண்டற்றுப் போய விடும். அதற்கு இன்னும் பல நூறு அல்லது ஆயிரக் கணக்கான ஆண்டுகள ஆகலாம்.
Rate this:
Share this comment
Cancel
Ravikumar T H - Hamamatsu,ஜப்பான்
25-ஜூலை-201217:20:25 IST Report Abuse
Ravikumar T H ஆங்கிலத்தில் அவருடைய பெயர் Sandra க்ரைத்வாச்ச்ல் என்பதாகும்.
Rate this:
Share this comment
Cancel
Gokzz - பொள்ளாச்சி,இந்தியா
23-ஜூலை-201215:26:15 IST Report Abuse
Gokzz தற்போது பிளாஸ்டிக் பைகளுக்கு 2 ரூபாய் கட்டணம்...அதனை 10 ரூபாய் என்று உயர்த்தினால் காய் கறி வாங்க போகும் அனைவரும் மறக்காமல் துணிப்பை அல்லது வேறு பைகளை எடுத்து செல்வர்...மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பல முனை உபயோகத்திற்கு (Multipurpose) பயன் படுத்தலாம்...உதாரணமாக, Pepsi / Coke Bottle இவற்றை பாதி வெட்டி எரிந்து விட்டு அதை Pen Stand ஆக பயன் படுத்தலாம் அல்லது பாத்திரம் விளக்கும் பவுடர் போன்றவற்றை அதில் கொட்டி வைத்து உபயோக படுத்தலாம்.......மிக முக்கியமாக குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் ஒரு சாப கேடு என்ற கருத்தை மனதில் பதிய வைக்க வேண்டும்.....
Rate this:
Share this comment
Cancel
Sriram Seshadri - Ramasagara,Bangalore,இந்தியா
23-ஜூலை-201211:59:54 IST Report Abuse
Sriram Seshadri We have been trying to avoid plastic bags for the last 3yrs and its extremely difficult not using it. Weather to buy veges to water everything comes with plastic materials... One thing we avoided the plastic carry bags to 99%.. Hopefully we can master this overtime.
Rate this:
Share this comment
Cancel
Rathi - Chennai,இந்தியா
23-ஜூலை-201203:57:39 IST Report Abuse
Rathi Search for Sandra Krautwaschl.
Rate this:
Share this comment
Cancel
Dinesh kumar - Palani(DindigulDis),இந்தியா
22-ஜூலை-201221:57:43 IST Report Abuse
Dinesh kumar I like your vast and respectful mind about society .I Request Everybody must try to follow life without plastic as much as possible.
Rate this:
Share this comment
Cancel
சொக்கா - சென்னை,இந்தியா
22-ஜூலை-201212:55:24 IST Report Abuse
சொக்கா நம் நாட்டின் கிராமங்களிலும் எத்தனையோ குடும்பங்கள் இன்னும் பிளாஸ்டிக் உபயோகிக்காமல் வாழ்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
poongothai - karur,இந்தியா
22-ஜூலை-201211:16:50 IST Report Abuse
poongothai டு ஸ்டாப் மனுபாச்டுரிங் அண்ட் டு ஸ்டாப் மூலபொருள்
Rate this:
Share this comment
Cancel
வெங்கடராகவன் வெ - ஹைதராபாத்,இந்தியா
22-ஜூலை-201210:14:47 IST Report Abuse
வெங்கடராகவன் வெ இவருடைய பெயரினை ஆங்கிலத்திலும் கொடுத்து இருந்தால் இவரை இணையத்தில் தேடுவதற்கு ஏதுவாக இருந்திருக்கும். ஒரே ஒரு தகவல் தேவைப்படுகிறது. மரக்குச்சி பிரஷ் எந்த மரத்தினுடையது என்பது மட்டும் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.