அன்புடன் அந்தரங்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2012
00:00

அன்பு சகோதரிக்கு,
தமிழகத்தில் மிகப்பெரிய கம்பெனி ஒன்றில், சூப்பர்வைசராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். என் வயது, 64. எனக்கு இரண்டு மகன்கள், இரண்டுபேரும் இன்ஜினியர்கள். இருவரும், நல்ல கம்பெனியில் பணி ஆற்றுகின்றனர். இருவருக்கும் திருமணமாகி, இரு மருமகள்களும் நல்ல பணியில் இருக்கின்றனர்.
நானும், என் மனைவியும் எங்களது சொந்த வீட்டில், வசதியாக வசித்து வருகிறோம். மகன்கள் தனியாக சென்று விட்டனர். எங்களை கவனிப்பது இல்லை. என் சொந்த உழைப்பின் பலனாக, வீட்டு வாடகை, வீடு, கடை, வாழைத்தோட்டம் என, எல்லாம் இருக்கிறது. இதை நான் கவனித்து வருகிறேன்.
என் மனைவிக்கு கடந்த, 20 வருடங்களுக்கு மேலாக, மனநிலை சரியில்லை என்று கூறும்படி, சில சமயம் நடந்து கொள்வாள். சில சமயம், நல்ல மனநிலையில் இருப்பாள். ஆறாவது அறிவு வேலை செய்யாது. சரியாக சமையல் செய்ய மாட்டாள். என் துணிகளைத் துவைக்க மாட்டாள்.
எரிச்சல், கோபம், சதா என்னையே குறை சொல்லி ஏசுவாள். பல மனோதத்துவ டாக்டர் களிடம் பரிசோதித்து, சிகிச்சை பெற்று தற்காலிகமாக சரியானது. பின் டிப்ரஷன், கோபம் என்று பாதிக்கப்படுகிறாள். பல நேரங்களில், நானே சமையல் செய்துதான் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.
சிறு வயதிலேயே, என் அம்மா, அப்பா இறந்து விட்டனர். என்னதான் உழைத்து சம்பாதித்து சொத்து சேர்த்து இருப்பினும், வீட்டில் மனைவி பொறுப்பில்லாமல் இருப்பது வெறுப்பையே அதிகரிக்கிறது.
வாழ்க்கை, ஒருசமயம் சூனியமாக தெரிகிறது; மறு சமயம் மனதை தேற்றி நடக்க முயற்சிக்கிறேன். என் மனம் தடுமாறுகிறது. நான் தினசரி யோகாசனம் செய்கிறேன். மனம் நிம்மதியடைகிறது. மறு சமயம், மனைவியின் செய்கையால் வெறுப்பாகிறது.
இந்த, 64 வயதில் வாழ்வை நிம்மதியுடன் முடித்துக் கொள்வோமா அல்லது வேறு ஒரு துணையுடன் இருக்கும் வாழ்வைத்
தொடருவோமா என, மனம் அலை பாய்கிறது.
நான் இதுவரை, யார் தயவையும் நாடவில்லை. மனைவியின் அன்பு, பாசத்திற்காக ஏங்கியதில்லை. ஆனால், இந்த வயதில் நல்ல துணைவியின் நட்பு, உதவி தேவைப்படுகிறது. இதில், ஒரு முடிவுக்கு வர மனம் தடுமாறுகிறது. இப்போது, மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியை, முழுமையாக வெறுத்து ஒதுக்கவும் முடியவில்லை. வேறு, ஒரு நல்ல துணைவியை தேடவும் மனம் விரும்புகிறது. நான் என்ன செய்ய வேண்டும். தாங்கள் தான் நல்ல வழி கூற வேண்டும்.
இப்படிக்கு
உங்கள் சகோதரன்.


அன்புள்ள சகோதரருக்கு, உங்கள் கடிதம் கிடைத்தது...
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, அனாதை சிறுவனாக வாடி இருக்கிறீர்கள். சொந்தபந்தங்களின் உதவி இல்லாமல் படித்து, ஒரு நல்ல பணிக்கு போயிருக்கிறீர்கள். உங்களுடைய தற்சமய வயது, 64. உங்களது, 26 வயதில், உங்களுக்கு திருமணமாகியிருக்கிறது.
உங்களது திருமணமும், சொந்த முயற்சியில் தான் நடந்திருக்கிறது. திருமணமான முதல், 18 வருடங்கள், உங்களது மனைவி தெளிவான, மனநிலையில்தான் இருந்திருக்கிறார். இரு பிள்ளைகளை படிக்க வைத்து மணம் செய்வித்து, தனிக்குடித்தனமும் அனுப்பி விட்டீர்கள்.
உங்களது திருமண வாழ்க்கையை இரண்டாக பிரித்தால், முதல் பாதியில் தென்றலாகவும், பிற்பாதியில் புயலாகவும் உங்களது மனைவி இருந்திருக்கிறார். அவரது மனநிலை பாதிப்புக்கு, நீங்களும், உங்களது இரு மகன்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ காரணமாய் இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
சதா பணம், பணம்; அலுவலகப்பணி, என்றலைந்து, மனைவியை இதம்பதமாய் நடத்தாமல் போனீர்களோ? உங்களது ஆவலாதிகளை, கோபதாபங்களை, மனைவியின் தலையில் கொட்டி, அவரது மூளையை சூடேற்றினீர்களோ?
உங்களது பண நிர்வாக திறமையால்தான், குடும்பம் முன்னுக்கு வந்தது என, மனைவியை சதா குத்திக் காட்டினீர்களோ? உறவினர் ஒத்துழைப்பு இருந்திருந்தால், இன்னும் அழகான, அறிவான மனைவி கிடைத்திருப்பாள் என, அமிலவார்த்தைகளால் மனைவியை குளிப்பாட்டி இருப்பீர்களோ? அத்தனையும் பரம்பொருள் ஒருவனே அறிவான்.
உங்களிடம், 64 வயதாகியும், நாற்பது வயதுக்குரிய உடல் ஆரோக்கியம் கொட்டிக் கிடக்கிறது. கழுத்தைச் சுற்றும், கால்களைச் சுற்றும் எந்த பொறுப்புகளும் உங்களுக்கு இல்லை. தேவைக்கு அதிகமாக பணம் கையிருப்பில் குவிந்திருக்கிறது.
உங்களின் மனைவி, உங்களின் துணிகளை துவைப்பதில்லை; உங்களுக்கு சமைத்துப் போடுவதில்லை என குற்றஞ்சாட்டுகிறீர்கள். ஒரு பணிப்பெண், நீங்கள் கேட்கும் இந்த இரு விஷயங்களையும், நன்றாகவே செய்து கொடுத்து விடுவாள்.
உங்களது ஆழ்மனம் மறுமணத்திற்கோ, கம்பானியன்ஷிப்புக்கோ ஏங்கி தவிக்கிறது. மனதில் காமவிகாரம் பூத்து விட்டால், யோகாசனம் எந்த நிவாரணத்தையும் பெற்றுத் தராது. 38 வருஷம் குடும்பம் நடத்திய மனைவி மீதும், மனதில் ஒரு சாப்ட்கார்னர் வைத்துள்ளீர்கள்.
உங்களது கடிதத்தில், நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை குறிப்பிடவில்லை. ஆனால், இந்து மதத்தினர் என யூகிக்கிறேன். இந்து திருமணச் சட்டப்படி, உங்களது மனைவி மனநலம் சரியில்லாதவர் என்பதை நிரூபித்து, விவாகரத்து பெற வேண்டும். உங்களின் விவாகரத்து பெறும் முயற்சிக்கு, உங்களது மகன்கள் துணை நிற்பரா என்பது சந்தேகமே.
சொந்த உழைப்பின் பலனாக, நீங்கள் சம்பாதித்த சொத்துகளை, மகன்களுக்கும், மனைவிக்கும் பாகம் பிரித்து தர வேண்டியதில்லை. இருந்தாலும், ஒரு மனிதாபிமான அடிப்படையில், சொத்துகளை பாகம் பிரிந்து தருவது நல்ல விஷயம் தானே?
மறுமணம் செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்து விட்டால், குழந்தை இல்லாத, 40 - 45 வயது விதவைப் பெண்ணே சரியான தேர்வாய் அமையும். அந்த விதவைப் பெண், உங்களது உறவுக்கார பெண்ணாக இருந்தால், இன்னும் நல்லது.
உங்களுக்கு, ஆத்மார்த்தமாய் ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன்.
சமையலுக்கும், வீட்டு வேலைக்கும் ஒரு பணிப்பெண் அமர்த்திக் கொள்ளுங்கள். உங்களது மனைவியை மனநோயாளி என்று விட்டு விலகாமல், அவருடன் அன்புடன் பேசிப் பாருங்கள். பணத்தை சம்பாதித்தது போதும். அன்பான இதயங்களை சம்பாதிக்கப் பாருங்கள்.
மகன்களின் குடும்பங்களில் பங்கு கொண்டு, பேரக் குழந்தைகளை கொஞ்சுங்கள். தாம்பத்தியத்தின் சிறப்பான தருணங்களை, கணவன் - மனைவி கூட்டாய் அசை போட்டு மகிழுங்கள். இந்த, 38 வருட திருமண வாழ்வில், நீங்கள், 18 வருஷம் மனநோயாளியாக இருந்திருந்தால், உங்களது மனைவி மறுமணம் செய்து கொள்வாரா? அவர் விரும்பினாலும் ஆணாதிக்க சமுதாயம் அனுமதிக்குமா?
இந்த பணம் சார்ந்த உலகில், 64 வயது வயோதிகருக்கு, புதிய நல்ல துணைவியின் நட்பும், உதவியும் கிடைக்கவே கிடைக்காது.
தற்கொலை எண்ணத்தை விட்டு, அதே மனைவியுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட ஆரம்பியுங்கள். விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை, குற்றம் குறை கூறாமை, வயோதிக தாம்பத்யத்தை இனிமையாக்கும் மூலக்கூறுகள்.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (57)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
c ponnusamy - perambalur,இந்தியா
04-ஆக-201214:14:24 IST Report Abuse
c ponnusamy முதியவருக்கு ஒரு துணை தேவை
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீவித்யா - Chennai,இந்தியா
02-ஆக-201222:33:17 IST Report Abuse
ஸ்ரீவித்யா இங்கே சகுந்தலாவின் ஆலோசனைகளை விட திருமதி. கௌசல்யா அவர்களின் ஆலோசனையும் அறிவுரையுரையும் உருப்படியாகவும் யதார்த்தமாகவும் உள்ளது. நன்றி சகுந்தலா மேடம்.
Rate this:
Share this comment
Cancel
dr.sakthi - unitedstates,யூ.எஸ்.ஏ
02-ஆக-201221:26:41 IST Report Abuse
dr.sakthi This person has been a supervisor,so he must know how important it is to not overload a worker. His wife was a homemaker I find it too chavunistic for this man to expect that she should wash his clothes and cook for him when she is sick.I find it odd that a disease for which she is not continuing medication can be used as a reason for divorce. In America the government will have case workers monitoring this lady for signs of neglect/abuse and hold husband liable for neglect of depant.
Rate this:
Share this comment
Cancel
Anbuchelvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-201212:52:52 IST Report Abuse
Anbuchelvan திரு ராமன் நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளிர்கள். நான் சொல்ல வந்தது என்ன என்றால் இங்கு நிறைய பேரு ஒரு வேலைகாரி வைத்துகொள் என்று கருத்து கூறியுள்ளார்கள். ஆனால் எங்களை போல கிராமங்கள் / சிறு நகரங்களில் சென்னையில் உள்ளது போல வேலைகாரி என்ற ஒரு கான்செப்ட் இல்லை. அதனால் இது அவருக்கு சாத்தியமில்லை இல்லையா. மேலும் என்னுடைய கருத்து அவர் என்னமோ உடல் சுகத்துக்கு அலைகிறார் என பலர் கருத்தும் கிண்டலும் இங்கே ஆனால்‌ வாழ்க்கை துணை என்பது நமது உடம்பில் தெம்பு இருக்கும் இளமை காலத்தைவிட நமது முதுமையில் மிகவும் தேவை என்று. இல்லையெனில் நமக்கு இந்த தனிமை உணர்வு மிக கொடுமை. ஏனெனில் நமது இளமையில் நமக்கு வேலை சம்பாத்தியம் குடும்ப கடமைகள் என்று ஓடி கொண்டிருப்பதால் நமது எண்ணம் தனிமையாய் உணராது. I hope யு get my point here .
Rate this:
Share this comment
Cancel
பத்மா - சென்னை,இந்தியா
02-ஆக-201211:19:52 IST Report Abuse
பத்மா Mr ராமன் உங்கள் கருத்துகள் சூப்பர்........ பத்மா.
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீ - chennai,இந்தியா
02-ஆக-201209:34:26 IST Report Abuse
ஸ்ரீ உங்கள் மனைவியை இந்த நிலைக்கு கொண்டுவந்ததே நீங்களும் உங்கள் மகன்களும் தான் என்பது என் கருத்து. உங்களது ஆரம்ப காலத்தில் உங்களுக்கு துணையாக இருந்த உங்கள் மனைவிக்கு இந்த நேரத்தில் நல்ல துணையாக இருந்து காக்க வேண்டும், போதுமான வசதி இருப்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் மனைவியை புனித ஸ்தலத்துக்கு கூட்டி செல்லுங்கள் மனம் நிம்மதியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ராமன் - சென்னை,இந்தியா
02-ஆக-201202:21:31 IST Report Abuse
ராமன் @அன்புசெல்வன் - உங்கள் உறவு கால் முறிவு, அது குணபடுத்த கூடிய ஒன்று. மிஞ்சி போனால் Pain ers சாப்பிட வரும். இவர் மன நோயாளி - இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இது குணமாக சாத்தியம் இல்லை என்பது அவரது முயற்சிகளில் தெரிகிறது. @மதில்மேல்பூனை, சட்டத்தில் முதல் மனைவி சம்மதத்துடன் மணம் புரிய வழி உண்டு
Rate this:
Share this comment
Cancel
ராமன் - சென்னை,இந்தியா
02-ஆக-201202:10:49 IST Report Abuse
ராமன் என் தாய், தந்தை அது போல ஒரு தோழமையை நாடும் நிலை வந்தால் அதனை அமைத்து தருவேன். அது நான் அவர்களுக்கு செய்யும் சேவை. அந்த வகையில் என் பெற்றோர் முற்போக்கு வாதிகள். தன தங்கைக்கு ஆசைப்பட்ட பின்தங்கிய சாதியை சேர்ந்தவரை அவர் மணம் செய்து வைத்தவர். நிச்சயமாக அவர்கள் மற்றவர்கள் "பேசுவார்கள்" என்று தங்கள் போக்கை, எண்ணத்தை மாற்றி கொள்ள மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ராமன் - சென்னை,இந்தியா
02-ஆக-201201:49:16 IST Report Abuse
ராமன் @கெளசல்யா கேள்விக்கு பதில். நெதர்லாந்து க்கு முடி பெயர்ந்து எத்தனை வருடங்கள் ஆயிற்று என்று தெரியாது. இது வெளி நாட்டிற்கு குடி பெயரும் பலரும் அனுபவிக்கும் ஒன்று. அவர்கள் இந்தியா தாங்கள் விட்டு சென்ற மாதிரி அப்படியே மாறாமல் இருக்கும் என்று எண்ணுகிறார்கள். சில ஆண்டுகள் கழித்து திரும்பி வந்த எனக்கே கல்சுரல் ஷாக் இருந்தது. ஆகையால் இன்னமும் மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று பயந்து வாழ்பவர்கள் கொஞ்சமே - பெரும்பாலும் சில தனிப்பட்ட குடிஇருப்புகளில் வசிப்பவர்கள். அதுவும் யூகமே! சென்னை போன்ற இடங்களில், நெதர்லாந்த் போல தோழமையுடன் இருப்பவர்கள் அதிகம். அது நீண்ட நாட்களாகவே இருக்கும் ஒன்று. தனிப்பட்ட முறையில் தெரியும். என்ன அன்று ஆணாதிக்கம் அதிகம் - அதனால் பெண்கள் இத்தகைய தோழமை (உடல் சார்ந்து இருக்காது அதுவும் நீங்கள் கூறும் வயதில் ..) அடக்கி வாசித்தார்கள். இன்று அப்படி இல்லை. மிகவும் சகஜமாக பேசுவார்கள். அவர்களின் கல்வி தந்த ஒரு பலன் இது. இன்றைய நவீன யுவ, யுவதிகள் சற்றும் தயங்காது - வாடா போடா என்று ஒருமையில் பேசுவார்கள் - பார்த்து இருப்பீர்கள். அது போல ஐம்பது வயது தலைமுறையினரும் தோழர்களாக மாறி பழகுவது மிக சகஜம். ஒரு பெண் வேலைக்கு செல்பவள் எனில் இன்னமும் சகஜம். இது போன்ற வெளிகள் மத்திய தர, வீட்டில் அடைந்து இருக்கும் குடும்ப தலைவகளுக்கு மட்டுமே இருந்தது. வீட்டு வேலைக்கு வரும் கூலியாட்கள் இது போன்று மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று பழகாது இருப்பதில்லை. எல்லா தோழமையும் படுக்கை அறைக்கு நீள்வதில்லை. தோழமையுடன், ஆண் - பெண் வித்தியாசம் பார்க்காமல் பழகுவது இன்று சர்வ சாதாரணம் . அதற்க்கு காரணம் கற்பித்து கொண்டு இருப்பவர்களை யாரும் மதிப்பதில்லை. அத்தனை வேகம். சற்றும் கவளி படாது பீர் குடிக்கும் பெண்களும், எல்லோருடன் சேர்ந்து எனக்கும் ஒரு தம் குடுடா அன்று கேட்டு வாங்கி புகைக்கும் பெண்களையும் சாதரணமாக பார்க்கலாம். அவர்கள் இன்று வேடிக்கை பொருட்கள் அல்ல, விநோதமானவர்கள் அல்ல. ஒரு வேலை நீங்கள் அவர்களை பார்த்து வியப்படையலாம்.
Rate this:
Share this comment
Cancel
JK - India,இந்தியா
01-ஆக-201222:26:11 IST Report Abuse
JK ஏன் சார் இப்படி ஆசை படுகின்றீர்கள்? நீங்கள் அடுத்து தேடும் துணைக்கு எல்லாம் அதாவது மனநிலை, உடல் ஆரோக்கியம், உங்கள் வாழ்நாள் முழுவதும் சரியாக இருக்கும் என்பது என்ன நிச்சயம். ஒரு வேளை நடுத்தரவயது பெண்ணை மணந்து ஒரு குழந்தை உண்டானால், சொத்துக்காக இது கண்டிப்பாக நடக்கும், அதற்கு பதினாறு வயது ஆகும் போது, உங்களுக்கு என்பது வயது ஆகிவிடும். அந்த குழந்தையை எப்படி கரைசெற்பது என்று அப்போது உங்கள் மனம் என்னபாடுபடும் என்று நினைத்து பாருங்கள்? அதுவும் பெண் என்றால், நீங்கள் இருவரும் தாய் தந்தை என்பதை சமூகம் ஜீரணிகாது. உறவுகளை பகைத்துக்கொண்டு ஆபத்தை விலைக்கு வாங்கவேண்டுமா? வருபவள் சினிமா வில்லி குணம் கொண்டவள் என்றால் சொத்துக்கு ஆசைப்பட்டு உங்கள் கதையை ஒரே வருடத்தில் முடித்துவிடுவாள். தினமும் செய்தித்தாளை முழுக்க படியுங்க சார் ஒன்னு ஞாபகம் &39கிடைக்கணும்னா எப்படியும் கிடைக்கும், கிடைக்காது என்றால் எப்படியும் கிடைக்காது இது சத்தியமான சொல். இங்கு நான் சொன்ன "கிடைக்கணும்னா" உங்கள் மனைவியை. இவ்வளவு அருனையான குடும்ப சூழலில் அவர் ஏன் இப்படி ஆக வேண்டும்?. மனதை சமூக பணிகளில் செலுத்தி யோகியனாக வாழ்ந்து முடியுங்கள். யாருக்குதான் குறைகள் இல்லை? தமிழ்நாட்டு பிரபலங்களை 1967 வருடத்தில் இருந்து இன்றுவரை நினைத்து பாருங்கள், உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பது போல ஒருவர் அல்லாடுவது மற்றும் போது வாழ்வில் சாதித்தவர்கள் சொந்த வாழ்வில் வாரிசு இல்லாமல் இருந்தது, திறமை இருந்தும் ஒன்னாம் நம்பர் இடத்தை அடைய முடியாதவர்கள் என்று நிறைய சொல்லலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.