அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஆக
2012
00:00

அன்புள்ள அம்மாவுக்கு—
வணக்கம். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், வயது: 32, ஆண். இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் பிரபலமான தொழில்நுட்பக் கல்லூரியில், விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறேன்.
என் கல்லூரி தலைமை விரிவுரையாளர் (எச்.ஓ.டி.,), வயது: 65, பணி நிறைவு பெற்று, என் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். பெண் சபல புத்தி உ<ள்ளவர் என்பதை, அவர் முன்பு பணிபுரிந்த கல்லூரியின் மூலம் தெரிந்து கொண்டேன்.
என் பிரச்னை என்ன வென்றால், எங்கள் கல்லூரிக்கு புதிதாக, 26 வயதுள்ள பெண் (திருமணமாகவில்லை) ஒருவர் விரிவுரையாளராக, பணியில் சேர்ந்து, அனைவரிடமும் நன்கு பழகினார். புதிதாக வந்த பெண்ணிற்கு, சரியாக பாடம் நடத்த தெரியவில்லை என்பதை, எச்.ஓ.டி., அறிந்து கொண்டார்.
ஒரு நாள், என் சக விரிவுரையாளரும், அந்த பெண்ணும் சேர்ந்து சினிமாவுக்குச் சென்று உள்ளனர். மேலும் சில நாட்கள் கழித்து, தனியார் விடுதிக்குச் சென்றதை, என் நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். பின் கல்லூரியில் பயிலும் மாணவனின் வீட்டிற்கு, அந்த பெண்ணும், சகப்பணியாளரும் (திருமணமானவர்) போய், ஒருநாள் முழுவதும் உல்லாசமாக பொழுதைப் போக்கினர். இதைத் தெரிந்து கொண்ட வீட்டுக்காரர், வீட்டைக் காலி செய்து கொள்ளும்படி கூறி உள்ளார். இந்த விவகாரம், அவரது மனைவிக்கும் தெரிந்தமையால், உடனே வீட்டை காலி செய்து <உள்ளனர்.
இதெல்லாவற்றையும் மாணவன் மூலம் தெரிந்து கொண்ட எச்.ஓ.டி., அந்த பெண்ணை வற்புறுத்தி, தன் ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். ஏனெனில், கல்லூரியில் இந்த பெண் (நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவள்) சரி இல்லை என, எச்.ஓ.டி.,சொன்னால் வேலை போய் விடும். இதைப் பயன்படுத்தி எச்.ஓ.டி., அந்த பெண்ணை, தன் இச்சைக்கு அடிமைப்படுத்தினார்.
பின், ஒரு நாள் கல்லூரியில் மாதிரித் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, நான் தண்ணீர் தாகம் காரணமாக, என் அறைக்குச் செல்லும் போது, அங்கு எச்.ஓ.டியும், அந்த பெண்ணும் நெருக்கமாக இருப்பதை பார்த்தேன். நான் பார்ப்பதை, அவர்களும் பார்த்து விட்டனர்.
நான் எதுவும் தெரியாதது போல் இருந்து விட்டேன். சில நாட்கள் கழித்து, அந்த பெண் தனியாக இருக்கும்போது அறிவுரை கூறினேன். இதனால், அவள் என் மீது நல்ல மதிப்பும், மரியாதையும் வைத்தாள்.
ஒரு நாள், என் சக விரிவுரையாளர், வெளியே செல்லக் கூப்பிட்டும் அவள் வரவில்லை, மற்றொரு நாள் எச்.ஓ.டியும் கூப்பிட்டு இருக்கிறார், அவள் செல்ல மறுத்து விட்டாள். இதனால், கோபமுற்ற இரண்டு பேரும், என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் இருந்துள்ளனர் என்பதை சில மாதங்கள் கழித்து தெரிந்து கொண்டேன்.
ஒரு நாள் எச்.ஓ.டி., என்னிடம் வந்து, "என் போனில் சார்ஜ் இல்லை, ஆகவே உன் போனைக் கொடு, ஒரு போன் பண்ணிக்கிறேன்...' என்றார், நானும் கொடுத்து விட்டேன். பின் பத்து நிமிடங்கள் கழித்து கொடுத்தார். நான் போனை வாங்கி வைத்துக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, அவர் ஏன் மொபைலை வாங்கினார் என்று. என் <உறவினர்களின் போன் நம்பரை எடுத்திருக்கிறார்.
இந்நிலையில், எனக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பெண்ணின் உறவினர் ஒருவர், என்னைப் பற்றி விசாரிக்க எச்.ஓ.டி., யை அணுகி உள்ளார்.
அவர் என்னையும், அந்த பெண்ணையும் சேர்த்து தப்பாக கூறி உள்ளார். இதனால், அந்த இடம் தடைப்பட்டது.
மேலும், எனக்கு பெண் பார்க்கும் தரகரிடமும், தெரு மக்களிடமும் சென்று என்னை தவறாகத் திரித்து கூறி உ<ள்ளார். இதனால், எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. கல்லூரி துணைத் தலைவரிடம் சொன்னால் நம்ப மறுக்கிறார். இப்போது, அந்த பெண்ணும், எச்.ஓ.டி., என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறார். மேலும், எனக்கு அந்தப் பெண், தொடர்ந்து காதல் மற்றும் இரட்டை அர்த்த எஸ்.எம்.எஸ்., அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.
எனக்கு மிகவும் பயமாக உள்ளது. ஏனெனில் பதினைந்து வருட தோழியும், என்னைத் தப்பாக புரிந்து கொண்டாள். ஒரு நல்ல நண்பனாக மற்றும் அண்ணனாக, நான் சொன்ன அறிவுரையைக் கேட்டவள், இன்று எனக்கு எதிராக மாறி விட்டாள் என்பதை நினைக்கும் போது, மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும், எனக்கு கல்யாணம் நடைபெறாமல் போய் விடுமோ என்ற எண்ணம் என்னை நிலை தடுமாறச் செய்கிறது.
நடத்தைக் கெட்டவள், என் மனைவியாகி விடுவாளோ, என்ற எண்ணமும் ஏற்படுகிறது. நித்தம், நித்தம் தூக்கம் வராமல் அழுது கொண்டிருக்கிறேன். தப்பு செய்தவர்கள் நிம்மதியாக இருக்கின்றனர். நீங்கள் தான் நல்ல பதி<லும், தைரியமான வார்த்தைகளும் சொல்லி, என் மனநிலையை மாற்றுவீர்களாக! மேலும், வேறு கல்லூரிக்கு பணி மாற்றம் செய்து கொள்ளலாமா என்ற மனநிலையில் இருக்கிறேன்.
தக்க பதிலை எதிர்பார்க்கும்
தங்கள் மகன்.


அன்புள்ள மகனுக்கு—
நீ திருமண வாழ்க்கையிலும், ஆசிரியப் பணியிலும் ஒரு சேர கால் ஊன்ற முடியாத, 32 வயது முதிர் கண்ணன். "நாம் இன்னும் பிரம்மச்சாரியாகவே இருக்க, எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்து முடித்த துறைத்தலைவர் கிழவன், பெண்கள் விஷயத்தில் சக்கைப்போடு போடுகிறானே...' என்ற பொறாமை உணர்வு, உன்னுள் சுனாமியாய் சுழன்றடிக்கிறது.
முந்தைய பணியில், துறைத் தலைவர் செய்த காதல் லீலைகளை மோப்பம் பிடித்திருக்கிறாய். உன்னுடன் பணிபுரியும் சகவிரிவுரையாளரும், துறைத் தலைவரும், புதிதாய் பணிக்கு சேர்ந்த பெண் விரிவுரையாளரை, தங்கள் தகாத ஆசைக்கு இணங்க செய்ததை உளவறிந்திருக்கிறாய்.
எல்லாவற்றுக்கும் மேலாக, "இந்த இரு திருட்டுப் பூனைகளுடன் பழகாதே' என, அந்த பெண்ணுக்கு அபாய எச்சரிக்கை வேறு விடுத்திருக்கிறாய். விளைவு, இரு வில்லன்களையும், ஒரு வில்லியையும் சம்பாதித்திருக்கிறாய்.
துறைத் தலைவர் உன் கைபேசி எண்களை திருடி, உனக்கு பார்க்கப்படும் வரன்களை நரித்தனமாய் கெடுத்து வருகிறார். பார்க்கும் வேலை பறிபோய் விடுமோ, ஒரு நடத்தை கெட்டவள் மனைவியாய் அமைந்து விடுவாளோ என்ற பய உணர்வுகள், உன் தூக்கத்தை கெடுக்கின்றன.
உண்மையைச் சொல்... ஒரு நல்ல நண்பனாக மற்றும் உன் உடன்பிறவா அண்ணனாகவா, அந்த பெண் விரிவுரையாளருக்கு அறிவுரைகள் வழங்கினாய்? இல்லவே இல்லை. அப்பெண்ணிடம் உனக்கு ரகசிய ஈர்ப்பு இருந்திருக்கிறது. "நமக்கும் இவள் கிடைத்தால், நன்றாக இருக்குமே...' என, உன் சபல மனம், நப்பாசை பட்டிருக்கிறது. நீ சிறுவயதிலிருந்து இப்படி தான் இருந்திருக்கிறாய். இதனால், உன் டீனேஜிலிருந்து பல பிரச்னைகளை சந்தித்து வந்திருக்கிறாய்.
"அய்யய்யோ... அப்படியெல்லாம் இல்லை யம்மா... நான் எங்கு அநீதி நடந்தாலும், அதை எதிர்த்து குரல் கொடுக்கும் விசில் ப்ளோயர்' என்கிறாயா? ஒரு நல்ல விசில் ப்ளோயர், தன் செயலால் நேரும் எதிர் விளைவுகளை கண்டு புலம்ப மாட்டான். போர்க்களத்தில் ஒப்பாரி தேவையா கண்ணா?
மொத்தத்தில், நீ பிறர் தவறுகள் செய்வதை பார்த்து ஏங்கும் ஜீவன். இப்போது ஆப்பை அசைத்து, வால் மாட்டிக் கொண்ட குரங்காய் பரிதவிக்கிறாய். "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பர் மகனே... மேற்சொன்ன உன் பிரச்னைக்கு, அடிப்படைக் காரணம், உன் மாரல் போலீஸ் மனோபாவம் தான்.
பணியிடங்களில் ஆயிரம் ஆண் - பெண் உறவு அத்துமீறல்கள், அரங்கேறிக் கொண்டே தான் இருக்கும். அதை நேரடியாக தடுக்க முயன்றால், நமக்கு தான் சேதாரங்கள் ஏற்படும். அதனால், அந்த அத்துமீறல்களை மனதால் மட்டும் வெறுத்து தண்டித்து விட்டு, நாம் அதனில் ஈடுபடாமல் ஒதுங்கி நிற்க வேண்டும்.
நம் ஆசிரியப் பணியை இன்னும் எவ்வளவு சிறப்பாக செய்து, கல்லூரி நிர்வாகத்தின் அங்கீகாரத்தையும், மாணவர்களின் நன்மதிப்பையும் பெறலாம் என, நீ யோசிப்பது நல்லது. துறைத் தலைவரின் அந்தரங்கத்திற்குள் நீ மூக்கை நீட்டியது, அர்த்த பொருத்தமில்லாத வேலை.
வழக்கமாய் கிடைக்கும் திருட்டுச் சுகம், உன்னால் தடைபட்டால், உன் வேலையை தொலைத்துக் கட்டவும் அல்லது ஆள் வைத்து உன்னை கொல்லவும் கூட, அந்த துறைத் தலைவர் கிழவன் முயற்சிக்கக் கூடும்.
ஒரு நேர்மையான அப்பாவிப் பெண்ணை, துறைத் தலைவர் வழி கெடுக்கப் பார்த்து, நீ குறுக்கே புகுந்து தடுத்திருந்தாய் எனில், அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகனே...
இதே சம்பளத்தில், புதிய பணியிடம் கிடைத்தால், நைச்சியமாக மாறி விடு. உனக்கு வரன் பார்க்கும் விஷயத்தை எல்லாம், துறை மக்களிடம் உளறும் ஓட்டை வாயனாக இராதே. உனக்கும், நிர்வாகத்துக்கும் இடையேயான இரட்டை வழி தகவல் தொடர்பை மேம்படுத்திக்கொள். சிறுவயதிலிருந்தே அறிமுகமான உறவுக்காரப் பெண்ணை மணந்து கொள். இனி எப்போதும், ஆண் - பெண் உறவு அத்துமீறல்களில் தலையிட்டு, குளவிக் கூட்டத்தை கலைக்காதே.
உன் கைபேசி எண்ணை உடனே மாற்று. "நடத்தை கெட்ட பெண் மனைவியாய் அமைந்து விடுவாளோ...' என்ற, உன் வீண் மனக் குழப்பத்தை கைவிடு. நல்லதே நடக்கும் என, திண்ணமாக நம்பு.
யோகா தியானத்தில் ஈடுபடு. உடலும், மனமும் லேசாகும்; நன்கு தூக்கம் வரும்; அழுகை ஓயும். திருமணத்திற்கு பின், சக பெண் விரிவுரையாளர்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்.
திருமண வாழ்க்கையிலும், ஆசிரியப் பணியிலும், இரட்டை வெற்றி பெற வாழ்த்துக்கள் மகனே!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (47)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாண்டியன் - ஷர்ஜாஹ்,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஆக-201213:55:11 IST Report Abuse
பாண்டியன் நீங்க நல்லவராக இருந்தால் மற்றவர்களை பற்றி ஏன் சிந்தனை செய்கிறிர்கள்?தேவை இல்லாத சிந்தனை நமக்கு எதற்கு? யாரும் எக்கேடு கேட்டு போகட்டும்........ நீ உன்னோட வேலையை மட்டும் பார்த்தால்....... கூடிய சீக்கிரம் கல்யாணம் முடிந்து நன்றாக இருக்கலாம்.....வாழ்கையில்.......இன்னொருவர் பாதையில் தலைஇட்டால் நமக்கு தானையா பிரச்சனை ஏன் இந்தமாதிரி...................
Rate this:
Share this comment
Cancel
dr.sakthi - USA,யூ.எஸ்.ஏ
11-ஆக-201204:03:22 IST Report Abuse
dr.sakthi Please DO NOT ASSUME ANYTHING ABOUT YOUR FRI and his relatives ,he may be under pressure and ignorant about the consquences of his actions. Ask him if he is willing to look at horoscopes to do parihar and marry you.There are many astrologers who can suggest remedies to remove the dosha -which are not nothing but Karma balances of him/his ancestors and you/your ancestors. IF PANIGRAHANAM has Happened you accepted him as husband and he accepted you as wife during your romance period him marrying someoneelse is bad karma for him/his parents and his children and his would be wife. So the JATHI maintanence need of his family will ineffect bring bad karma on him and his family. Please look at ures directly.There are consquences of abandonment regardless of Jathi/horoscope. All redaers forgive me do not curse me for stating the truth. Thanks very much.
Rate this:
Share this comment
Cancel
ராஜ்பார்த்திபன் - புதுக்கோட்டை,இந்தியா
10-ஆக-201220:24:42 IST Report Abuse
ராஜ்பார்த்திபன் தோழி சுவாதி அவர்களுக்கு, அவருடன் இனிமேல் நீங்கள் தோழமை உணர்வுடன் பழகுவதென்பது மிகவும் அரிதானது. இப்படி நீங்கள் சொல்லக் காரணம் அவர் மேல் நீங்கள் அதிகமான ஈர்ப்புடன் உள்ளீர்கள் என்பதே! அவரும் கூட அப்படியே... இதில் என்ன முரண் என்றால் ஈர்ப்பு அளவிலான காதல் எப்படி ஏழு வருடங்கள் தாக்குப் பிடித்தது என்பதுதான். அவர் யோசித்துதான் உங்களை நிராகரித்துள்ளார். நீங்கள் அவரை விட்டு உடனே விலகுவது என்பது உங்களின் எதிர்காலம் பிரகாசிக்க நீங்களே எடுத்த சிறந்த முடிவைப் போன்றதாகும். உண்மையான காதல் ஆனால் நடைமுறையில் காதலன் எடுக்கும் முடிவுகள்! ஒன்று ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வது இல்லையென்றால் பெற்றவர்களின் சம்மதத்தைப் போராடி வாங்குவது! ஆனால் இவர் இரண்டையுமே செய்யவில்லை. கண்டிப்பாக இது காதலும் இல்லை. மனதில் அமைதி நிலவ பல வழிகள் உள்ளன. கவனத்தை திசைதிருப்பி இவரை மறந்து புதியதொரு உற்சாகமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். நண்பன் ராஜ்பார்த்திபன்
Rate this:
Share this comment
Cancel
little heart - moscow,ரஷ்யா
10-ஆக-201202:47:42 IST Report Abuse
little heart மிஸ் சுவாதி கவலைப்படாதிங்க நல்லதே நடக்கும் உங்களுக்கு !!!ஆனா உங்க பழைய காதலரோட நட்பு மட்டும் வேண்டாம் !!!!ஏன் என்றால் மேபி அவர் உங்க கல்யாணத்துக்கு அப்பறம் உங்கள ப்ளாக்மெயில் பண்ணறதுக்கு வாய்ப்பு இறுக்கு!!அதே போலே இத ஒரு கெட்ட கனவா நினைச்சி மறக்கிரடுக்கு முயற்சி பண்ணுங்க !!உங்க நண்பர்களோட நல்ல விஷயத்தையும் உங்க ஸ்கூல் days பத்தியும் நினைத்து பாருங்க!ஏன் என்றால் உலகத்திலே ரொம்ப ஸ்வீட் days அது நம்மோட ஸ்கூல் days தான்!!!நிரந்தனமானது இந்த உலகத்தில் எதுவும் இல்லை !!!டேக் இட் ஈஸி ))ஆனா உங்கள கைவிட்ட உங்க காதலன் கண்டிப்பா ஒரு நாள் உங்கள நெனச்சி வருத்தப்படுவார் மிஸ் பண்ணுவார் !!!ஆனா அப்ப நீங்க அவருக்கு துரமா போய்விடுவிங்க !!எல்லாருக்கும் ஒரு முதல் காதல் இறுக்கும்!!சில பேருக்கு அமையும் சில பேருக்கு அமையாது !!அதுக்காக எல்லாருமே பழைய காதலா நெனச்சிக்கிட்டு இறுக்கிறது இல்லை !!அவர மறங்க!!!புது வாழ்க்கைய தொடங்குங்க !!!!
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - denhelder,நெதர்லாந்து
09-ஆக-201216:37:22 IST Report Abuse
GOWSALYA சுவாதி,உங்க மடல் படித்தேன்.நண்பர் ரகு [USA ] சொன்னாபோல ,7 வருஷம் காதலித்தது உண்மையான காதல் என்றால்,ஒருபோதும் கைவிடமாட்டான்.அவனுக்கு நிறைய சீர்வரிசை கிடைக்கப்போறதாலே தான் ஜாதகம்.அதுஇது என்று சொல்லி விலகுகிறான்....நீங்க மனதைப் போட்டுக் குழப்பாம ,கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு சந்தோஷமா இருங்க.....ALL FOR GOOD ....என்று எண்ணுங்க.....என்னளவில்,ஜாதகம்,ஜாதி சமயம் எல்லாம் காதலுக்குத் தடையில்லை....எல்லாம் சுத்த ஏமாற்று வித்தைகள்....உங்களுக்கு அவனுடைய சகவாசமே வேண்டாம் மகள்....சிலசமயம் நீங்க நல்ல மனதுடன் நண்பனாக இருக்கப் பிரியப்படும்போது,அவன் வேறு எண்ணங்கள் மனதில வைத்து உங்க வாழ்க்கையைப் பாழாக்கலாம் இல்லையா?...ஜோசியுங்கள்.....கடவுள் துணை................மகன் மீனவன் எங்கே போய்விட்டீங்க ?..உங்க கருத்துக்காக எல்லோரும் காத்திருக்கோம்.வருவீங்க இல்ல?...அம்மா.
Rate this:
Share this comment
Cancel
Gokzz - பொள்ளாச்சி,இந்தியா
09-ஆக-201214:49:41 IST Report Abuse
Gokzz சுவாதி,பாண்டிச்சேரி, தங்களின் நிலைமையை பார்த்தால் கஷ்டமாக தான் உள்ளது....எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் தரட்டும்...7 வருடம் என்பது இன்றைய சூழலில் மிக மிக அதிகமான காலம்...எத்தனை முறை பேசி இருப்பீர்கள், எத்தனையோ விசயங்களை பகிர்ந்து கொண்டிருப்பீர்கள்...அவர் இல்லை என்றவுடனே எல்லாமே இருண்ட போல தெரியும், எந்த ஒரு விஷயம் பார்த்தாலும் அவர் நினைவு வரும், அவரிடம் பகிர்ந்து கொள்ள தோன்றும்...கஷ்டம் தான்..உங்கள் நிலை புரிகிறது...ஆனால் நடந்தவற்றையே நினைத்து கொண்டிருந்தால் ஒரு பயனும் இல்லை..நிகழ் காலத்திற்கு வாருங்கள்....அவருக்கு பெண் பார்த்தாகி விட்டது என்ன செய்ய ? அவரும் சம்மதம் சொல்லி இருக்கிறார்..அவர் செய்தது சரியா தவற என்ற விவாதம் வேண்டாம்..இதை நீங்கள் மாற்ற முடியாது...ஏற்று கொள்ளுங்கள்..இது தான் நிதர்சனம்...அவர் மீது பழி உணர்ச்சியோ, பகைமையோ தயவு செய்து வேண்டாம்..அது உங்களின் நிம்மதியை கெடுத்து விடும்...அவர் செய்தது தவறு என்றால் மன்னித்து விடுங்கள், சரி என்றால் (உங்களுக்கு தோன்றும் பட்சத்தில்) நல்லா இரு என்று சொல்லி விட்டு விடுங்கள்...மேலும் அவருடன் பேச விரும்பினால் நீங்கள் அவரிடம் சொல்லுங்கள் வாரத்திற்கு இரு முறை, பின் வாரத்திற்கு ஒரு முறை என்று குறைத்து கொள்ளுங்கள்...ஆனால் பேசும் பொது பழைய விசயங்களை பேச வேண்டாம்...அது மேலும் குழப்பம் தான் தரும்...அவர் pratical person என்று நினைக்கின்றேன்...எனவே அவர் பதிலும் practical ஆக தான் இருக்கும்..இது என் யூகமே...அந்த பெண்ணை பற்றி கேளுங்கள்...பட்டும் படாமல் பேசி கொள்ளுங்கள்...இது ஒரு temporary solution தான்..இதே சமயத்தில் வேறு சில Hobbies வளர்த்து கொள்ளுங்கள்...உங்களுக்கு எதில் நாட்டமோ அதில் மனதை செலுத்துங்கள்...ஆனால் வேறு ஒரு புதிய உறவு (நண்பர்கள்) இந்த கல கட்டத்தில் வேண்டாம்...Dont make a relationship when you are Frustated..You and You only...கொஞ்ச காலம் இப்படிதான் இருந்து பாருங்களேன்... சில காலத்திற்கு பின் காலம் கண்டிப்பாக உங்கள் காயத்திற்கு மருந்து தரும்..கண்டிப்பாக உங்களுக்காக , உங்களுக்காக மட்டுமே ஒருவர் இருப்பார்...எல்லாம் சரி ஆகி விடும்..."நினைபதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் யாருமில்லை...நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை" Gokul Shankar S...
Rate this:
Share this comment
Cancel
omprakash - coimbatore,இந்தியா
09-ஆக-201210:15:53 IST Report Abuse
omprakash இந்த பகுதிக்கு கேள்விகளை எப்படி அனுப்புவது என்று யாராவது சொல்லுங்கள் pls sahunthala madam avarkaluku eaadi naan ennudaya kelvikalai anupuvathu ru thariyavillai pls help pannunga
Rate this:
Share this comment
Cancel
ஜாய் - Chennai,இந்தியா
09-ஆக-201208:40:30 IST Report Abuse
ஜாய் swathi - pondychery,இந்தியா....நிங்கள் விரும்பும் நட்பு கல காதலாய் முடியும்...சோ வேண்டாம்,நிங்களும் வேறு திருமணம் செய்யுங்கள் காலத்தின் கையில் எல்ல வடிற்கும் அதனிடம் மருந்து உள்ளது ...எளர் வாழ்கையிலும் ஒரு காதல் இறுக தன் செய்யும் அதில் ஒரு சிலரை மணந்து கொள்கிறார்கள் ...எல்லாரும் வாழ தானை செய்கிறார்கள் ..
Rate this:
Share this comment
Cancel
Joy - Chennai,இந்தியா
09-ஆக-201208:30:01 IST Report Abuse
Joy kanaga - சென்னை,இந்தியா..நன் உங்களுக்கு பல சிறந்த கருத்துகளை சொல்லி இருந்தேன் ,அனல் ஆசிரியர் அதை இங்க பதிவு செய்ய வில்லை,ஏன் என்றுதெரிய வில்லை.....அதில் 1 ஏன் நிங்கள் அவருடன் ஒரு நாள் தெளிவாக எடுத்து சொல்ல கூடாது நிங்கள் அதனை விரும்பி பார்க்க வில்லை..தெரியாமல் ஓபன் ஆனது நான் ஒன்றும் பார்க்காமல் க்ளோஸ் செய்தேன் ...நிங்கள் இனி என்னை disturb செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கோபமாக எச்சரிக்கவும் ...குறிப்பாக ப்ரொவ்சிங் ஹிச்டோரி செயுங்கள் ,பின்னும் தொடர்தால் கம்ப்ளைன்ட் பணுங்கள் அவர் உங்களை டர்ச்சுர் செய்கிறார் என்று ...அவர் கண்டிப்பாக அதனை வெளிஏய் சொல்ல மாட்டார் ஏன் எண்டால் அவருக்கும் அது கெட்டபெயர்...
Rate this:
Share this comment
Cancel
ரகு - நியூஜெர்சி,யூ.எஸ்.ஏ
09-ஆக-201201:54:24 IST Report Abuse
ரகு சுவாதி அவர்களே ! காதலிக்கும் போதே தெரிந்த உண்மைகள்தானே ஜாதி வேறு எனபது! உண்மையான ஆண்மகன் ஏழு வருடம் காதலிக்கும் போதே, சொந்தக்காலில் நிற்பது எப்படி என்று சிந்தித்திருப்பான். அப்படி சொந்தக்காலில் நிற்கும் துணிவுள்ளவன் காதலியை கைவிடமாட்டன். சொத்து அதிகமாக கிடைப்பதால் ஜாதகம் அது இது என்று காரணம் கூறி தப்பிகின்றான். நீங்களே ஒரு ஜோதிடரிடம் சென்று அல்லது ஆன்லைனில் ஜாதகம் பார்த்தீர்கள் என்றால் உண்மை புரியும். நட்பை தொடர்வது நம் சமுதாயத்தில் எளிதில்லை . உங்கள் திருமணத்திற்கு தடையாக வந்து முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.