பிள்ளைகளைப் பெறுவது பாக்கியம் என்பர். ஆனால், எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளையாக இருக்கின்றனரா? நல்ல பிள்ளை என்றால், யார் நல்ல பிள்ளை?
ஒருவருக்கு நான்கு பிள்ளைகள். எல்லாரையும் பாடுபட்டு வளர்த்து, நல்ல வேலை கிடைக்கச் செய்தார். ஒருவனுக்கு மும்பையில் வேலை, ஒருவனுக்கு டில்லியில் வேலை, ஒருவனுக்கு கோல்கட்டாவில் வேலை, ஒருவனுக்கு பெங்களூருவில் வேலை. இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. டாக்டர், "சந்தேகமான கேஸ்!' என்று சொல்லி விட்டார்.
மும்பையில் இருக்கும் பையனுக்கு போன் செய்து உடனே வரச் சொன்னார். "இப்போது ஆபீசில் பிரமோஷன் நேரம். நான் அங்கு வந்தால், பிரமோஷன் பாதிக்கப்படும். நல்ல டாக்டரிடம் வைத்தியம் செய்து கொள்ளுங்கள்...' என்று சொன்னான் அவன்.
டில்லியில் இருப்பவன், "நான் இப்போது வர¬ முடியாது. ஆபீசில் ஆடிட் நடக்கிறது. நான் அவசியம் இங்கே இருக்க வேண்டும். நல்ல டாக்டராகப் பார்த்து, வைத்தியம் செய்து கொள்ளுங்கள். பணம் வேண்டுமானால் அனுப்புகிறேன்...' என்றான்.
அடுத்த பையன் கோல்கட்டாவிலிருந்து போன் செய்தான்... "என் மனைவிக்கு பிரசவ நேரம். ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து, நான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதனால், இப்போது வர¬முடியாது. நல்ல டாக்டராகப் பார்த்து வைத்தியம் செய்து கொள்ளுங்கள்...' என்றான்.
நாலாவது பையன் பெங்களூருவிலிருந்து உடனே வந்து விட்டான். தகப்பனாருக்கு உதவியாக அவரோடு இருந்து கவனித்துக் கொண்டான். "ஏண்டா... நீ இங்கே இருந்தால் எப்படி? பெங்களூருல போய் வேலையில் சேர வேண்டாமா?' என்று கேட்டார். அதற்குப் பையன், "உங்களை கவனித்துக் கொள்வதை விட, வேலை என்ன ¬முக்கியம்? இந்த வேலை இல்லா விட்டால், வேறு வேலை கிடைக் காதா? அதனால், உங்களை கவனித்துக் கொள்வதற்காக வேலையை ராஜினாமா செய்து விட்டு, வந்து விட்டேன்.
"ஒரு பிள்ளை என்பவன், தகப்பனாருக்கு கடைசி காலத்திலோ, உடல் நலமில்லாதபோதோ, கூடவே இருந்து கவனிக்க வேண்டியது கடமை அல்லவா? நீங்கள் எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள். அதற்கு பலனாக, நான் வேறு என்ன செய்ய ¬முடியும்? உங்களுக்கு உடல் நலமில்லாத போது, நான் கூட இருந்து கவனிக்க வேண்டாமா? அப்படிச் செய்யாவிட்டால் இந்தப் பிள்ளையைப் பெற்றது எதற்கு?' என்று சமாதானம் சொன்னான்.
அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. "நீ தான்டா என் நல்ல பிள்ளை!' என்று சொல்லி, அவனை கட்டிக் கொண்டார். அதனால் தான், "பெற்றதெல்லாம் பிளளைகளல்ல!' என்று கூறினரோ என்னவோ...
நல்ல பிள்ளை என்று பெயர் எடுக்க வேண்டும்.
***
ஆன்மிக வினா-விடை!
ராமநவமி பூஜையின் பலன்கள் என்னென்ன?
ராமநவமியில் பூஜை செய்தால் லட்சுமி கடாட்சம் இருக்கும். தொலைந்த பொருள் கிடைக்கும். பகைவர்கள், நண்பர்கள் ஆவர். குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும். செய்த பாவங்கள் விலகும்.
***
வைரம் ராஜகோபால்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதிக செல்லம் ஆபத்து விளக்விக்கும்
மதுரையில் வசிக்கும் எனது நண்பரின் மகள் பொறியியல் படித்து தற்போது வேலைக்கு போகிறாள்.
அந்தபொன்னுக்கு அவளது பெற்றோர்கள் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்ததால் இன்று வேற்று மத பையனை காதலிபதகவும் அவனை தவிர வேறு திருமணம் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.
அதனால் பெற்றோர்களே உங்கள் பெண் பிள்ளைகளை உன்னிப்பாக கண்காணித்து அதிக செல்லம் கொடுக்காமல் வளர்க்கவும்.
Hmm..well said.Nowadays most of them staying too away from home. ஒரு நல்லது கெட்டதுக்கு கூட குடும்பத்தோட இறுக்க முடியல. என்ன சம்பாரிச்சு என்ன கொண்டுபோக போரமுனு தெரியல. Including me.படிக்கமயாவது இருந்திருக்கலாம். இங்கு நல்ல காற்று இல்ல,வாட்டர் இல்ல,pollution, traffic,there is no physical activity( 50 வயசு வாழ்ந்தாலே ரொம்ப அதிகம் ). ஊர்ல விவசாயம் பார்க்க ஆட்கள் இல்ல. இப்படியே போன கொஞ்ச நாள்ல யாருக்கும் சோறு கெடைக்காது.ஊர்ல பழைய சோறு சாப்பட்டு சந்தோசமா இருந்திருக்கலாம்.யோசிப்போம் மக்களே.விவசாயத முன்னேற்ற முயற்சிப்போம். நன்றி குணா from Sathyamangalam.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.