அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 ஆக
2012
00:00

அன்புள்ள அம்மா—
எனக்குத் திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நானும், அவரும் ஒரே வயதினர். 15 வருடமாக காதலித்து, திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்; உறவினரும் கூட.
என் குடும்பம், வசதியான கூட்டுக் குடும்பம். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து, பண்ணையில் வேலை பார்த்த, ஒரு பாட்டியிடம் தான் வளர்ந்தேன். தாயின் அரவணைப்பே அறியாதவள்.
எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, பாட்டி இறந்து விட்டார். அதன் பின், மிகவும் தனிமை படுத்தப்பட் டேன்.
அப்போதுதான், என் பக்கத்து வீட்டு அக்காள், வயது 16 இருக்கும். என்னை, ஒரு தாயைப் போல அரவணைத்து, பார்த்துக் கொண்டாள். சாப்பிடுவது, குளிப்பது, தூங்குவது என்று, 24 மணி நேரமும், அவள் வீட்டில் தான். இரவு தூங்கும் போது, என்னை, அவள் மார்போடு அணைத்துக் கொள்வாள்.
அவளிடம் நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். சில மாதங்களில், அவள் திருமணமாகி சென்று விட்டாள்.
அதன் பின், பள்ளியில் சேர்க்கப்பட்டேன். படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி, நான் தான் முதல் மாணவி.
நான், எட்டாம் வகுப்பு படிக்கும்போது தான், என் கணவர், என்னை விரும்புவதாக கூறினார். குடும்பச் சூழ்நிலை காரணமாக, படிப்பை, 8ம் வகுப்போடு நிறுத்தி விட்டு, ஒரு வட்டிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
இச்சூழ்நிலையில்தான், அவருடைய அம்மா என்னை அழைத்து, "அவனுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டியது, உன் பொறுப்பு...' என்றார். அன்றிலிருந்து, அவர் எழுதிய கடிதம், நான் எழுதிய கடிதம் என்று அனைத்திற்கும், போஸ்ட்மேன் அவரின் அம்மா தான்.
நான் கல்லூரி வாழ்க்கைக்குள் நுழையும் வரை, எங்கள் காதல் கண்ணியமாக இருந்தது. இதற்கிடையில், விவசாயம் மெல்ல, மெல்ல சரிந்தது; என் குடும்பமும் நலிந்தது. என் கணவரின் குடும்பம் மெல்ல, மெல்ல மேடேறியது. அவர் தனியாக கடை போட்டார். வேலைக்கு ஆட்கள், வீட்டில் வசதிகள் என பெருகின.
என் மாமியாரின் பேச்சிலும், நடத்தையிலும் மாற்றம் தெரிந்தது. நான் நினைத்தது போலவே, அவரின் அம்மா என்னை அழைத்து, "என் மகனை மறந்துவிட்டு, படித்து, <உன் குடும்பத்தை காப்பாற்ற பார்...' என்றார்.
நானும், என் மாமியாரின் மீதுள்ள கோபத்தில், அவரை வெறுத்தேன். அவர், என்னைச் சுற்றி சுற்றி வந்த போதெல்லாம் அலட்சியப்படுத்தினேன்.
வீட்டில் இருந்தபடியே என்னால் முடிந்த வேலைக்குச் சென்று, எம்.ஏ., எம்.பில்., படித் தேன். ஒரு பள்ளியில், நல்ல வேலையில் சேர்ந்தேன். நாங்கள் பிரிந்து, மூன்று ஆண்டுகள் ஓடின.
திடீரென்று ஒரு நாள் வந்து, மணிக்கணக்கில் பேசினார்; அனைத்தையும் மவுனமாகக் கேட்டேன். "உனக்கு சாமர்த்தியமிருந்தால், பெரியவர்கள் சம்மதத்தோடு, என்னை திருமணம் செய்...' எனக் கூறிவிட்டு சென்றேன். படாதபாடு பட்டு, ஒரு வழியாக என் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு முன், அவர் வெளியூரில் கடை வைத்திருந்ததால், நாங்கள் அங்கு குடியேறி னோம். மிகவும் அன்பாக இருந்தார். வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வார். வாரம் இருமுறை சினிமா, கேட்ட தெல்லாம் மறுக்காமல் வாங்கித் தருவார். அடிக்கடி, "என்னைப் போல பிரியமானவன் யாருமே இல்லை...' என்று கூறுவார். "என்னைப் போல நீயும் என்மேல் அன்பாக இருக்கிறாயா?' என்பார்.
எனக்கென்று, ஒரு மொபைல் போன் வாங்கித் தந்தார். ஆனால், அந்த நம்பரை என் பெற்றோருக்கோ, என் தோழிகளுக்கோ, என் சகோதர சகோதரியருக்கோ தரக் கூடாது என்றும், அவர்களுடன் பேச விரும்பினால், அவர் மொபைல் போனிலிருந்து, அவர் முன்தான் பேச வேண்டும் என்றார்.
நானும் ஆரம்பத்தில் அதை பெரிதாக நினைக்கவில்லை. தேவை இல்லாமல் என் அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா இவர்களைப் பற்றி, தப்பாக பேசுவார். அதற்கு நான் கோபப்பட்டால், "என்னை விட <உனக்கு அவர்கள் மேல்தான் பிரியம் அதிகம். நான் இவ்வளவு செய்கிறேன்; உனக்கு என்னை பிடிக்கவில்லை...' என்று சண்டை போடுவார்.
நாளுக்கு நாள் அவரது கவனிப்பும் அதிக மானது, சைகோ போன்ற எண்ணமும் அதிக மானது. வார்த்தையால் என் உள்ளத்தை குத்தி கிழித்துவிட்டு, என் உடலோடு உறவாடிய அவருடன், என்னால் முழு மனதோடு வாழ முடியவில்லை.
நாட்கள் ஓடின. எனக்கு குழந்தை பிறந்தது. அம்மா வீட்டிற்குச் சென்றோம். இவர் என்னிடம் தினமும் இருமுறை போன் செய்து, "குழந்தை எப்படி உள்ளது என்று கட்டாயமாக எனக்குத் தெரியப்படுத்து...' என்றார்.
நானோ, "இங்கு டவர் (கிராமம் என்பதால்) சரியாக கிடைக்காது. மாடிக்குச் சென்றால்தான் பேச முடியும். உங்களுக்கே நன்றாகத் தெரியும். இந்த சூழ்நிலையில் என்னால் எப்படி மாடி ஏற முடியும்...' என்று சொன்னதுதான் தாமதம்... "என்கூட பேசப் பிடிக்கலைன்னு, சொல்ல வேண்டியதுதானே...' என கத்தினார்.
என் அம்மாவோ, "நான் போன் பண்ணி பேசுறேன்...' என்றார். அதற்கு அவர், "நான் உங்க பொண்ணுக்குத்தான் புருஷன்...' என்று சொன்னதை கேட்டு அதிர்ந்தோம். நானும் எவ்வளவோ பொறுமையாகப் பேசினேன். என் மாமியார் வந்தார். என்ன பிரச்னை என்று கேட்டார். நடந்ததைச் சொன்னோம். அவரும்தான் இருந்தார்.
டக்கென்று, "எந்திரிடா... தலை தலையா அடிச்சிக்கிட்டேன். இந்தப் பொண்ணு வேணாம்ன்னு கேட்டியாடா...' என்றார். எனக்கு கண்ணீர் ஆறாய் பெருகியது. "ச்சே என்னடா திருமண வாழ்க்கை...' என்று எண்ணினேன்.
"தயவு செய்து, உங்க ஒட்டும் வேணாம்; உறவும் வேணாம். உண்மையில் நீ மனிதனாய் இருந்தால், உன் மனசாட்சியை தொட்டுக் கேட்டுப்பார். என் கண் முன்னாடி நிற்காதே வெளியே போ...' என்றேன். ஒரு மாதம் வரை யார் யார் மூலமோ, முயற்சி செய்து பார்த்தார். நான் பிடிகொடுக்கவில்லை.
அவரே நேரடியாக வந்து, தன் தவறுக்காக, என் குடும்பத்தார் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டார். "பொண்டாட்டியை எப்போதும் என் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்...' என்று என் அம்மா சொன்னதால்தான், இவ்வாறு நடந்து கொண்டேன். என்னை மன்னித்து விடு...' என்று என் காலில் விழுந்தார்.
அதன் பின் தான், என் மாமியாரின் திருவிளையாடல் தெரிந்தது. இருப்பினும், அவரை நான் வெறுக்கவில்லை. அதன்பின், எங்கள் வாழ்க்கையில் எந்த சண்டையும் இல்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். அப்புறம் என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா? இருக்கிறது அம்மா!
என் கணவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது, எனக்கு திருப்தி கிடைக்கவில்லை. "இரவு நேரம் ஏன் தான் வருகிறதோ!' என்று நினைக்க தோன்றுகிறது. அதற்காக, வேறு எந்த ஆண் மகனோடும், எனக்கு பழக்கமில்லை; ஏன் கனவிலும் நான் நினைத்ததில்லை.
என் எண்ணம் முழுவதும், பெண்கள் மீது தான் உள்ளது. இதை வெளியே சொல்ல கேவலமாக உள்ளது. என் கணவரிடம் சொல்லலாம் என்றால், பயமாக உள்ளது. எங்காவது வெளியே சென்றால், அங்கு அழகான பெண்கள் யாரையாவது பார்த்தால், அவர்கள் நினைப்பாகவே உள்ளது.
இதற்குக் காரணம், என் கடந்த கால வாழ்க்கையா அல்லது என்னுள் ஆண்மைத் தன்மை ஏதேனும் வளர்கிறதா அல்லது என் கணவர் மீது, எனக்கு உண்டான வெறுப்பா?
எதுவென்று தெரியாமல் தவிக்கிறேன் அம்மா.
மனமாறிய கணவரோடும், அழகான குழந்தையோடும், பல்லாண்டு வாழ விரும்பு கிறேன். எனக்கு வழிகாட்டுங்கள் அம்மா.
இப்படிக்கு, அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு—
உன் கடிதத்தை வைத்தே, உன் குணாதிசயத்தை அறிய முடிகிறது மகளே. நீ அழகாய் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை, விவரம் தெரிந்த நாளிலிருந்தே, உன்னிடம் நிறைந்திருக்கிறது. அதே சமயம், தான் பணக்கார விவசாயக் குடும்பத்தை சேர்த்தவள், அதிகம் படித்தவள் என்ற உயர்வு மனப்பான்மையும், உன்னிடம் இருக்கிறது.
நீ ஒரு, "லெஸ்பியனாய்' வளர, உன் குடும்பச் சூழலும், உன் இளமை பருவமும் காரணங்களாய் இருந்திருக்கின்றன. மேம்போக்காய் காதலித்த வனையே கைப்பிடித்ததில், உனக்கு பெரிய திருப்தி இல்லை. கணவனின் நடத்தையிலும், வார்த்தை யிலும் தவறுகள் கண்டுபிடித்து மகிழ்கிறாய். உன், "லெஸ்பியன்' ஆசைகள், கணவனின் தாம்பத்யத்தை செல்லாக் காசாய் பார்க்கின்றன.
உன் பிரச்னைக்கான தீர்வை, இனி பார்ப்போம் மகளே...
எனக்குத் தெரிந்து, பல, "லெஸ்பியன்' பெண் கள், தாம்பத்ய வாழ்க்கைக்கு திரும்பி, தத்தம் கணவருடன் சிறப்பான வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
குடிப்பழக்கத்தை, ஆண்மகன் சிறிது சிறிதாய் மறப்பது போல, நீயும், "லெஸ்பியன்' எண்ணத்தை சிறிது சிறிதாய் மழுங்கடி. லட்சக்கணக்கான பெண்களின் திருமண வாழ்க்கையை விட மேன்மையானது, உன் திருமண வாழ்க்கை. அதற்காக திருப்தி படு; சந்தோஷப்படு.
உன் கணவனை, 15 ஆண்டு காதலித்து மணந் திருக்கிறாய். திருமணத்திற்கு முன், நீங்களிருவரும் உறவினர்கள். நீயும், உன் கணவரும் சம வயதினர். அவனுக்காக நீ, எவ்வளவோ விட்டுக் கொடுக் கலாம். கணவன் மீதும், மகன் மீதும் நேசத்தை அதிகரி; "லெஸ்பியன்' எண்ணம் காணாமல் போய் விடும்.
அழகான பெண்களை பார்த்தால், அவர்களின் அழகுக்கேற்ற கணவனை, இறைவன் பரிசளிக் கட்டும் என, பிரார்த்தனை செய். மனமாறிய கணவரோடும், அழகான குழந்தையோடும், நீ பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் மகளே!
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (48)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ச்ரிச்டோபர் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஆக-201216:31:01 IST Report Abuse
ச்ரிச்டோபர் மீனவன் சார் , நீங்க நல்லா இருக்கணும் ...நிறைய பேருக்கு வழிகாட்டணும் ...உங்க நலனுக்காக என் பிரார்தினைகள் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
ஜாய் - Chennai,இந்தியா
18-ஆக-201206:12:32 IST Report Abuse
ஜாய் பட்டிக்காட்டான் - பெங்களுரு,இந்தியா....நன்றி
Rate this:
Share this comment
Cancel
ரா.பிரபாகரன் - குள்ரோடு,சிங்கப்பூர்
18-ஆக-201205:33:05 IST Report Abuse
ரா.பிரபாகரன் தாயின் அரவணைப்பே அறியாதவள். நான் உங்க பொண்ணுக்குத்தான் புருஷன்...&39 என்று சொன்னதை கேட்டு அதிர்ந்தோம். தாய் எப்படி இங்கு வந்தால். சற்று குழப்பமாகவே இருக்கிறது..
Rate this:
Share this comment
Cancel
நகோன் - India,இந்தியா
17-ஆக-201215:25:29 IST Report Abuse
நகோன் உடல் உறவுகளுக்கு முன் மன உறவுகள் வளரட்டும். சுகப்படட்டும்..... இந்த வேதத்தை பின்பற்றும் எந்த ஒரு தம்பதிகளுக்கும் பிரிவோ, பிரச்சனையோ வராது...................... வரவும் முடியாது......................................... நன்றி நண்பர் மீனவன் அவர்களுக்கு...............................
Rate this:
Share this comment
Cancel
கப் - Detroit,யூ.எஸ்.ஏ
16-ஆக-201217:33:20 IST Report Abuse
கப் To Miss Kavitha, There are many people struggling with compulsive sexual pre-occupation and you are not alone. You are likely to be addicted to sex. Here in US there are 12 Step Study groups for all kinds of addiction. You can refer to Sex Addicts Anonymous (SAA) sites like "saa-recovery", "sa", "slaafws". The steps will guide you to distract yourself towards healthy (spiritual) thoughts. The step programs are adopted from Alcoholic Anonymous that helped many alcoholic addicts to recover. Here in US there are lots of support groups to help people recover from Alcohol, Sex, Debt, Gambling, Narcotics, Debt, Over Eating, Shop Lifting addictions. I&39m not sure whether similar groups are there in India. Please remember that you cannot recover alone if you are a sex addict or any addict for that matter. You need support.You will need a Sponsor to guide you through the 12 Step recovery process. There are also phone group meetings. You can also try and take counseling from a Sex Therapist to with. Hope this information helps you...
Rate this:
Share this comment
Cancel
selvakumar - பெங்களுரு,இந்தியா
16-ஆக-201214:58:04 IST Report Abuse
selvakumar அன்பு தோழி கவிதாவிற்கு, ஜாய், சென்னை- கருத்துக்களை தயவுடன் பின்பற்றலாம். நடைமுறைக்கு ஏற்றார் போல் உள்ளது. அதனுடன் இன்னொரு முக்கிய விஷயம், டேக் இட் ஈசி - பாலிசி. எல்லா மனிதர்களும் கொண்டுள்ள உணர்வுகளே நீயும் கொண்டுள்ளாய். இதில் இருந்து விடு பட வேண்டும் என்பதே என்னை கேட்டால், தவறான ஒரு எண்ணம். தண்ணீர், சாப்பாடு, இசை போல் &39செக்ஸ்&39 சம்பந்தபட்ட செயல்பாடுகளையும் சாதாரணமாக எடுத்துகொள்ள பழக வேண்டும். தண்ணீர், சாப்பாடு, இசை என்று கூறும் போது, இவை முக்கியமான தேவை என்றாலும் அதற்காக மட்டுமே நாம் வாழ்வதில்லை(5 அறிவு விலங்கினங்கள் போல் அல்ல). ஆறாம் அறிவு சம்பந்த பட்ட மேற்படிப்பு, நல்ல வேலை, நல்ல கணவன், நல்ல குடும்பம், நல்ல வாழ்க்கை என்று சிறப்பான விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்... இம்மாதிரியான பிரச்சினைக்கு நல்ல தீர்வு. ஒரு குட்டி கதை: ஒரு துறவியை அணுகி தன்னுடைய பலப்பல பிரச்சினைகளை கூறி வழி கேட்டார் ஒருவர். அதற்கு அந்த துறவி, அவரிடம் ஒரு பெரிய பாத்திரத்தை காட்டி, அருகில் இருந்த நீர், மண், மணல், கூலாங்கற்கள், பெரிய கற்கள் போன்ற எல்லாம் சீராக/பரவலாக நிரப்ப சொன்னார். இதை பலவராக முயற்சி செய்த அந்த மனிதர் திருப்தி படாமல், முனிவரிடமே அது எவ்வாறு என்று கேட்டார். அதற்கு முனிவர் முதலில், பெரிய கற்கள் சிலவற்றை போடச்செய்தார், பின் கூழாங்கற்களை பெரிய கற்களின் இடை வெளியில் போடச்செய்தார், பின் மணல், பின் மண், பின் தண்ணீர் என்று எல்லாம் சீராக நிரம்பியது. இதை மாற்றி செய்தால், அதாவது சிரியனவற்றை முதலில் எடுத்து பெரியனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கா விட்டால்.......பாத்திரம் நிரம்பும் ஆனால்...., நம் வாழ்வும் சின்ன சின்ன விஷயங்கள் பல அடங்கியது, ஆனால் பெரிய விசயங்களில் அதிக கவனம் செலுத்தினால் தான் நிறைவோடு அமையும். with cheers ....
Rate this:
Share this comment
Cancel
ஜாய் - Chennai,இந்தியா
16-ஆக-201209:24:55 IST Report Abuse
ஜாய் கவிதா - சென்னை,இந்தியா , யாருமை தப்பாக நினைகதிர்கள்,நான் பிரச்டிகாலக இங்கை பதில் சொல்ல விரும்புகிறேன் ..கவிதா "Ideal mind இஸ் தி டெவில்ஸ் வோர்க்ஷோப் " என்று சொல்லுவார்கள் ..அதலால் 1 .தனிமையாக இருப்பதை தவிர்க்கவும் ,2 .படிப்பில் அல்லது விளையாட்டில் அல்லது வேறு எதாவது ஒரு ஹோப்பீஸ் இல் அதிக கவனம் செலுத்தவும், 3.நல்ல ஆபாசம் இல்லாத இசையினை அந்த நேரங்களில் கேட்கவும் அல்லது உடனை அந்த இடத்தை விட்டு மாற்றி வேறு ரூம் அல்லது வெளியில் போய் நிற்கவும் மனது மாறும் வரை 4 .நண்பர்களிடம் செக்ஸ் பத்தி discussion வேண்டாம் 5 .கவர்ச்சியான படங்கள் மற்றும் செக்ஸ் movies பார்ப்பதும் புத்தகம் படிப்பதும் முட்டிலுமாக தவிர்க்கவும் ..6 .முடியாத சூழ்நிலையில் சுய இன்பம் அனுபவித்து விட்டு உடனை அதில் இர்ருந்து வெளிய வரவும்,அதனை நினது கொண்டாய் இர்ருக்க கூடாது ,அதனை நினைத்து வருந்தவும் கூடாது ,மூட் மாறியதும் முழுவதுமாக வெளிய வரவும் .....தேவை இல்லாத குழப்பங்கள் வேண்டாம் ...எல்லாருக்கும் உணர்சிகள் வரும் வர வில்லை என்டால் தான் பிரச்சனையை ....
Rate this:
Share this comment
Cancel
சரவணன் - portonovo,இந்தியா
16-ஆக-201209:07:57 IST Report Abuse
சரவணன் என்ன வாழ்கை சார்
Rate this:
Share this comment
Cancel
ராமன் - சென்னை,இந்தியா
16-ஆக-201205:23:54 IST Report Abuse
ராமன் அட போங்கப்பா, ஒரு பெண்ணை இயல்பாக இருக்க விடாமல் திருந்து, திருந்து என்று மாற்றவே அறிவுரை. அது "தவறு" என்று அவர் நினைத்து இருந்தால் ஆலோசனை கேட்க மாட்டார். தீர்வு கண்டு இருப்பார். அவரின் மாற்றம் அவருக்கே தெரிகிறது அதற்கான காரணத்தை கண்டு பிடிக்க விழைகிறார். அவருக்கு உண்மையை சொல்லுவதே சால சிறந்தது. சமூகம் எதிர்த்தால், வீட்டில் நிராகரிக்கப்பட்டால் பாதுகாப்பாக இருக்க பொருளாதார ரீதியாக வேலை தேடி கொண்ட பின்னர் "வெளியே வர" சொன்னேன். அதனை விட்டு - கடவுளை நினை, இது பாவம் , மிருகத்தை விட கேவலம் என்று இன்னமும் அடைத்து வைக்கவே முயலுகின்றனர் எல்லோரும். இதில் குழந்தை என்று பிளாக் மெயில் வேறு. அவர் அடிமை இல்லை. அவர் உணர்ச்சி உள்ள ஒரு மனுஷி. ஏன் அடிமையாக நடத்த விரும்புகிறார்கள் ? அவர் மனம் குழம்பி, மன உளைச்சலில் தன உயரை மாய்த்து கொண்டால் - அது இது போன்றவர்கள் மன அழுத்தத்தால் செய்யும் செயல் - கை தட்டி கொண்டாடுவார்கள் போலும். அவருக்கே சந்தேகம் இருப்பதால்தான் வெளியே வர ஆலோசனை கேட்கிறார். நான் சில தொலை பேசி எண்கள் தந்து இருந்தேன் - ஆனால் தினமலர் அதனை பதிப்பிக்கவில்லை ஏன் என்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
karthi - சென்னை,இந்தியா
15-ஆக-201219:00:54 IST Report Abuse
karthi நீ நல்ல வருவம்மா! ! !
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.