அந்துமணி பாகேப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஆக
2012
00:00

இக்காலத்தில் சில குழந்தைகளின், "ஐக்யூ' பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர்.
சென்னை திருவெற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாராம்.
அவர் சொன்னது:
சாதாரணமாக தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத ஒரு மொழியாகத் தான் பார்ப்பர்; ஒதுக்கியும் வைப்பர் சார்... ஆனால், நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; தமிழுக்கு இங்கே மரியாதை உண்டு.
யூ.கே.ஜி., படிக்கும் குழந்தைகளுக்கு படம் பார்த்து கதை சொல்லும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்...
ஆலமரத்தில் கூடுகட்டி முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு, "ஸ்வாகா' செய்து வருவதையும், பாம்பை பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையை, காவலர்கள் கண்முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பை கொன்று, முத்து மாலையை காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையில்இருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கிக் கூறினேன்.
தலையைத் தலையை ஆட்டியபடி எல்லா குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று, "இது என்ன கதை மிஸ்?' என்றது. "ம்... நீதிக் கதை' என்றேன். "இந்தக் கதையில என்ன நீதி இருக்கு?' என கேட்டது. "தன்னை விட பலசாலியான எதிரிகளை, தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்...' என்றேன். "அதுக்காக காகம் என்ன செஞ்சது?' என்றது. "ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டது...' என்றேன்.
உடனே, அக்குழந்தை, "ஒருத்தருக்குச் சொந்தமான பொருளை, அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தா, அதுக்கு என்ன பேரு?' என்றது. "திருட்டு...' என்றேன். "அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க, திருடறது தப்பு தானே?' எனக் கேட்டது.
குழந்தையின் அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை...
"திருதிரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தது... "என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பை கொலை பண்றது தப்பில்லையா மிஸ்... பாம்பும் ஒரு உயிர் தானே!' என்றது.
நான், "தப்பு தான்!' என்றேன். உடனே, "இந்தக் கதையில திருடுறதையும், கொலை பண்றதையும் தானே குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கீங்க மிஸ்... இது நீதிக் கதையா?' எனக் கேட்டது.
வயசுக்கு மீறிய பேச்சுக்களையும், பேசும் குழந்தைகளையும் அதுவரை திரைப்படங்களில் மட்டும் தான், நான் பார்த்திருக்கிறேன்; அன்று நேரில் பார்த்தேன். இதே கதையை தான், நம் பெற்றோரும் படித்திருக்கின்றனர்; நாமும் படித்திருக்கிறோம். யாராவது இது குறித்து, இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
குழந்தை தொடர்ந்தது... "காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக்கூடாது. அதுக்கு உங்களுக்கு வேற வழி ஏதும் தோணலியா மிஸ்?' எனக் கேட்டது. "தோணலியே ராஜா...' என்று என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஒப்புக்கொண்டு விட்டாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு. குறை கூறத் தெரிந்த குழந்தையின் மனதில், எதுவும் ஐடியா இருக்குமோ என்று அறியும் ஆர்வம் பீறிட, "வேற எதாவது வழி இருக்கா?' என்றேன்.
உடனே அது, "இருக்கே!' என்றது. "எங்கே சொல்லு, கேட்போம்...' என நான் கூறியதும், "காகம் சாது. பாம்பு துஷ்டன். "துஷ்டனை கண்டா தூர விலகு'ன்னு சொல்லி இருக்கில்லையா. அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி முட்டை போட்டா, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாது இல்லையா?' எனக் கேட்டது.
உண்மையில் நான் உறைந்து தான் போனேன். இப்படியொரு கோணத்தில், நாம் யாருமே, ஏன் இதுவரை சிந்தித்து பார்த்ததில்லை என்று நினைத்தேன்...' எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.
நம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, "பிளைண்ட்'டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இந்த காலத்து பிள்ளைகள், துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்... வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.
***

மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த சமூக வாழ்வியல் பேராசிரியர் ஒருவர், உலகம் முழுவதும் சுற்றி, 5,000 தம்பதியர்களை , பேட்டி கண்டு தாம்பத்தியம் பற்றிய சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்...
பெரும்பாலானோர் முதலில் காதல் வயப்பட்டு இணைகின்றனர். நடு நடுவே சில தகராறுகள் எழுந்து, வளர்ந்து மறைகின்றன. இறுதியில் காதல் தீவிரமாகி, திருமணத்தில் நிறைவு பெறுகிறது.
திருமணமானதும், சில நாட்கள் சுற்றுலா, உறவினர் வீட்டு விசேஷங்கள் ஆகியவற்றில் கலந்து, காலம் கழிக்கின்றனர் புதுமணத் தம்பதியர்.
திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் ஆனதும், கணவன் - மனைவியின் பொழுதுபோக்கு கலந்துரையாடலிலேயே திருப்தியடைகிறது. சாப்பிடும் போதும், இரவு படுக்கையறையிலும் அரைமணி நேரம், ஒரு மணி நேரம் பேசினால் அதிகம்.
இது, போகப்போக குறைகிறது. ஆறாவது ஆண்டு முதல் தேவைப்படும்போது பேசுவது என்றாகிறது. எட்டாவது ஆண்டிலிருந்து கணவன் - மனைவி பேசிக் கொள்வது, மேலும் குறைந்து விடுகிறது. பிள்ளைகள் பக்கத்தில் இருந்தால் பேச்சு தொடரும்.
ஆரம்பத்திலிருந்த மோகம், கணவனுக்குக் குறைந்து விடுவதால், மனைவிக்கு அன்பளிப்பைப் படிப்படியாகக் குறைத்து விடுகிறான். பிறகு, தனியாகப் பணம் சேர்த்து, குஷியாக பொழுது போக்கத் துவங்குகின்றனர்.
திருமணமான பின், மூன்று முதல் எட்டாம் ஆண்டுக்குள்ளே தான், பெரும்பாலான விவாகரத்துக் கோரிக்கைகள் வருகின்றன.
உங்கள் தாம்பத்தியம் எப்படி? ஜெர்மன் பேராசிரியரின் கணிப்பு சரிதானா; ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JK - Inida,இந்தியா
25-ஆக-201213:11:35 IST Report Abuse
JK யு கே ஜி குழந்தை இவ்ளவு விஸ்தாரமாக பேசுகிறதா? கேக்கறவன் கேனையாக இருந்தால் எலி எரோப்லன் ஒட்டிசுங்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
boopathiraja - Erode,இந்தியா
24-ஆக-201212:36:36 IST Report Abuse
boopathiraja அன்புள்ள அந்துமணி சார் வணக்கம் . எப்படி இருக்கீங்க சார் நான் ஈரோடு பூபதிராஜா என்னை நினைவிருக்கிறதா நான் எங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன் பூபதிராஜா 47 மொஹிதீன் வீதி ஈரோடு௬௩௮௦௦௧ செல்: 9443304764
Rate this:
Share this comment
Cancel
ரங்கநாதன் - சென்னை,இந்தியா
24-ஆக-201210:25:57 IST Report Abuse
ரங்கநாதன் well said Praveen....
Rate this:
Share this comment
Cancel
Gokzz - Pollachi,இந்தியா
24-ஆக-201209:20:17 IST Report Abuse
Gokzz இங்கு கருத்து சொல்லி இருக்கும் ISRO விஞ்ஞானிகளே, NASA scientist களே, அந்த குழந்தை கேட்ட கேள்வியை நீங்கள் அந்த வயதில் கேட்டீர்களா? கேள்வி தவறோ சரியோ இது வரை நீங்கள் எதாச்சும் வகுப்பறையில் கேள்வி கேட்டதுண்டா? முதலில் கவனித்தால் தானே? எல்லாம் ஒரு நைட்டில் படித்து வளர்ந்த கூட்டம் தானே நாம் அனைவரும்...குழந்தை அந்த வயதில் ஆராய்ந்து அதற்கு இருக்கும் அறிவை வைத்து ஒரு கேள்வி கேட்டு இருக்கிறது...அந்த விசயத்தை பார்க்காமல் "மாப்ள ஒரு அல்ல கை மாட்டி இருக்கு வா அடிக்கலாம்" அப்படி ரேஞ்சுல போட்டு குதறி இருக்கீங்க அறவாளி மக்கா.... - Gokul Shankar S..
Rate this:
Share this comment
Cancel
K.RAVI - Panipat Haryana,இந்தியா
24-ஆக-201208:35:09 IST Report Abuse
K.RAVI இந்த கதை ஒரு அரசன் தன் குடிமக்களை காக்க எத்தகைய வழியையும் கையாண்டு எதிரிகளை வீழ்த்தி குடிமக்களை காப்பதையே தலையாய தர்மமாக கடை பிடிக்க வேண்டும் என்று உணர்த்தும் மகாபாரத கதை. இதில் வரும் காகம் அரசன். முட்டைகள் குடிமக்கள். பாம்பு எதிரிகள். இந்த ராஜா நீதியை கற்று கொடுக்கும் கதை நாட்டை ஆள்பவர்களுக்காக. குழந்தைகளுக்கு ???
Rate this:
Share this comment
Cancel
பிரவீன் - Chennai,இந்தியா
23-ஆக-201215:54:46 IST Report Abuse
பிரவீன் ஐயா, அறிவாளிகலெய், இந்த காகாகதையில் இருந்து, அந்த குழந்தையின் சுட்டி தனத்தை ரசிக கதுகாங்க, அதை விடுத்தது இது எதோ அரசியல் கருத்து எழுதுவது போல் ஆள் ஆளுக்கு வசை பாடாதீங்க. மாத்தி யோசிக்கவேண்டும், என்ற காரணத்தை புரிய வைக்க அந்து மணி சார், ட்ரை பண்ணி இருகார், அதை புரிந்து கொள்ளாமல், ஆராய்ச்சி செய்தல் எப்படி.
Rate this:
Share this comment
Cancel
maruthipatti senthil nathan - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஆக-201208:02:45 IST Report Abuse
maruthipatti senthil nathan காகம் அடுத்தவர் பொருளை திருடவில்லை ( பிறர் அறிய அடுத்தவர் பொருளை கவர்வது தான் திருட்டு ) - அது தன் தற்காப்புக்காக இந்த மாதிரியான ஒரு யோசனை செய்து செயல்படுத்தியது.
Rate this:
Share this comment
Cancel
dinakar - coimbatore,இந்தியா
21-ஆக-201220:20:20 IST Report Abuse
dinakar கேள்விகேட்டால் அறிவாளி என்றும் அமைதியானவர்களை மந்தன் என்றும் கூற ஆரம்பித்ததின் விளைவுதான் இது. அதனால்தான் இன்றைய பெற்றோர் பலர் குழந்தைகளை வயதுக்கு மீறி பேச ஊக்குவிகின்றனர். அப்படியானால் அங்கே அந்த ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் எப்படி நன்மதிப்பை பெறமுடியும்
Rate this:
Share this comment
Cancel
சீலன் - salem,இந்தியா
21-ஆக-201215:53:32 IST Report Abuse
சீலன் பாம்பு செய்ததும் தவறு, காகம் செய்ததும் தவறு. அப்படீன்னு சொல்ல முடியாது. தன் பாதுகாபிற்காக ஒருவனை கொலை செய்தால் அதற்கு என்ன தண்டனை? நமது நாட்டில் நடக்கின்ற குற்றங்களுக்கு, குற்றவாளிகளுக்கு எத்தனை பேருக்கு தண்டனை கொடுக்கபடுகிறது. கதை கதையாகவே தான் இருக்கிறது. இப்போது நீதி நியாயம் ஒன்றும் இந்த நாட்டில் இல்லை. ஆனால் ஒன்றுமட்டும் உண்டு. ஏழைகளுக்கு சோதனையும் தண்டனயும். பணக்காரனுக்கு எந்த குற்றம் செய்தாலும் பாதுகாப்பே உள்ளது. இதை யாராவது மறுக்க முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
vel - china,இந்தியா
21-ஆக-201212:54:15 IST Report Abuse
vel எல்லா நேரத்திலும் எல்லா வகையான நீதியும் நெறியும் பொருந்தாது. சமோயோசித புத்தியும் தேவை என்பதை சொல்லி குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.