உலகின் மிகப் பெரிய பைனாகுலர், சமீபத்தில் பிரிட்டனின் ஈஸ்ட் சசெக்ஸ் பகுதியில் ஏலம் விடப்பட்டது. எட்டடி நீளம் கொண்ட இந்த பைனாகுலர், 1946ல் தயாரிக்கப்பட்டது. பறவைகளை பார்ப்பதற்காக, இந்த பைனாகுலர் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டாலும், இதை தயாரித்தவர் யார், எதற்காக தயாரித்தார் என்பது போன்ற விவரங்கள் தெளிவாக தெரியவில்லை. மரம் மற்றும் பித்தளையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைனாகுலருக்கு, பிரமாண்டமான ஸ்டாண்டும் உள்ளது. திடீரென இதைப் பார்த்தால், பழைய பீரங்கி போல் உள்ளது. பழங்கால பொருட்களை வாங்கி விற்கும் ஒரு நிறுவனத்திற்கு, சமீபத்தில் இந்த பைனாகுலர் கிடைத்தது. இதை ஏலம் விட முடிவு செய்தபோது, 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போகும் என, மதிப்பிடப்பட்டது. ஆனால், ஆச்சரியம் அளிக்கும் வகையில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு, இந்த அதிசய பைனாகுலர் ஏலம் போனது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த பைனாகுலர், பயன்படுத்தப்படாமல், ஒரு வீட்டில், வீணான பொருட்களை வைத்திருக்கும் அறையில், குப்பையைப் போல் கிடந்தது குறிப்பிடத்தக்கது.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.